22 October 2013

நாம் எதில் மயங்குகிறோம் ?

நமக்கு தேவை இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்கிறோம் ...
நடிகை நடிகர்கள் ,அவர்கள் வம்சாவளி ...

அரசியல்வாதிகள் ,அவர்கள் அறிக்கைகள் ...
சமூக விரோதிகள் ,அவர்களின் தீய நடத்தைகள் ...
தேச விரோதிகள் ,அவர்களின் குண்டு வெடிப்புகள் ...
தீவிரவாதிகள் ,அவர்களின் கொடூர முகங்கள் ...
இப்படி எல்லாம் தெரியும் !
கொடூர வலியில் இருந்து விடுபட ...
வலி  இல்லாமல் ஆப்பரேஷன்  செய்த பின் ...
மீண்டும் நம்மை உயிர்த்தெழச்  செய்யும் ...
மாயா ஜால வித்தையை முதலில் செய்து காட்டிய ...
வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்கிற டாக்டர்  பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
அவர் 1846ல் மயக்க மருந்தை கண்டுபிடித்து மயக்கினார் !
இன்றைக்கு  மருத்துவமனை பில்லை பார்த்தாலே நம்மில்  பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது !


13 comments:

  1. நீங்கள் கொடுத்த தகவலை வாசித்த போது தான் மயக்க
    மருந்தினைக் கண்டு பிடித்த வைத்தியரின் பெயரை நானும்
    அறிந்துகொண்டேன் .இவ்வாறு வாழ்வில் நாம் அன்றாடம்
    அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இன்னும்
    எத்தனை ஆயிரம் உள்ளது ...!! .இருப்பினும் ஒரு நல்ல
    தகவலைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    மென்மேலும் இது போன்ற தகவல்கள் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. மனித மேன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை அறிந்துகொண்டு போற்ற வேண்டியது நமது கடமை என்றே நினைக்கிறேன் !
      நன்றி அம்பாள் அடியாள் அவர்களே !

      Delete
  2. இப்போ தெரிஞ்சிகிட்டேன்..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்போதான் தெரிஞ்சுகிட்டேன் ,கருண் ஜி !
      நன்றி !

      Delete
  3. தங்கள் பதிவின் மூலம்தான்
    இத்தகவலைத் தெரிந்து கொண்டேன்
    சுவாரஸ்யத் தேன் தடவிக் கொடுத்தது அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட நல்ல தகவல்களை ,தேன் தடவினால் தானே செல்லுபடியாகிறது !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete
  5. நல்ல தகவல். தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரும் ஊக்கம் ,எனக்கும் நல்ல தகவல்களை சொல்ல வைக்கிறது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  6. நல்லதொரு தகவலைஅறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றிக்கு என் நன்றி தனபாலன் ஜி !

      Delete
  7. படித்தேன் ,ரசித்தேன் !

    ReplyDelete