23 October 2013

சினிமா சீர்படுத்தலே ,சீரழிக்குது !

சென்ற வாரம் நடந்த கொடூரம் ...
வங்கி மேலாளரைக் கொன்ற ஆறுபசங்க...  
மோப்ப நாய்க்கு டிமிக்கி தர ...

அறையெங்கும் மிளகாய்ப் பொடியை தூவி சென்று இருக்கிறார்கள் ...
முதல் கொலைக்காரர்களுக்கே இந்த டெக்னிக்கை கற்று தந்தது 'கில்லி 'படம்தான் !
இந்த வாரம் நடந்த கொள்ளை ...
வங்கி அலுவல் முடியும் நேரம் ...
ஒரே ஒரு முகமூடிக் கொள்ளையன் ...
ஒரே ஒரு கத்தியை 'காசாளி 'பெண்மணியின் கழுத்தில் வைத்து ...
மற்றவர்களை மேலாளரின் அறையில் பூட்டி ...
எட்டே நிமிடத்தில் பத்தரை லட்சத்தை அள்ளி சென்று இருக்கிறான் ...
அந்த பத்தரை மாற்று தங்கத்திற்கு ஞானம் தந்தது ...
நிச்சயமாய் 'ருத்ரா 'என்னும் திரைகாவியமாய் தான் இருக்கும் !
நல்ல படிப்பினைகளை கற்று தரும் நம்சினிமா
நூறாண்டு வாழ்கவென கூத்திடமுடியவில்லை !
ஏற்கனவே நூறாண்டு நிறைவடைந்து விட்டதால் !

32 comments:

  1. கெட்டவை உடனே மனதில் வந்து ஒட்டிக் கொள்ளு(ல்லு)ம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,ஒட்டிக் கொண்டு அடுத்தவர் உயிரையும் பறித்து விடுகிறதே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. படங்களிலிருந்து கெட்டவைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பட்டவர்கள் வாழும் நாட்டில் ,இயக்குனர்கள் சமூகப் பொறுப்புடன் படம் எடுப்பது நல்லது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. படங்களிலிருந்து நல்லதோ கேட்டதோ எதையாவது எடுத்துக் கொள்பவர்கள் திருடியாவது பிழைத்துக் கொள்கிறார்கள் #மாற்றுச் சிந்தனை.. :)

    ReplyDelete
    Replies
    1. மாற்றுச் சிந்தனை ஏமாற்று சிந்தனையாகவே மாறிக் கொண்டிருக்கிறதே !
      நன்றி கோவை ஆவி ஜி !

      Delete
  4. படத்தப் பார்த்தமா போனமானு இருக்கணும். ஆனா, எல்லாருடைய மூளையில் இருக்கும் வேதியியலும் ஒன்றாக இருப்பதில்லையே. இதத் தானேங்க மனித உளவியலில் சொல்றாங்க. எதிர்மறைப்பண்புகள் சீக்கிரமே தொற்றிக் கொள்ளும் இயல்புடையது என்று. அந்த வகையில் இது ஒரு தொற்று நோய்தான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர்கள் ,இந்த தொற்று நோய்க்கு மருந்தை யார் சொல்வது ?
      முதல் வருகைக்கும் ,விளக்கத்திற்கும் நன்றி துளசிதரன் தில்லை அகத்து அவர்களே !

      Delete
  5. படங்கள் தியரி கிளாஸ்
    இதுதான் பிராக்ட்டிகல் கிளாஸ்

    ReplyDelete
    Replies
    1. தியரியை சினிமா படமாகவே பார்த்து விடுவதால் .பிராக்டிகலில் நூறு சதவீத மார்க்கை அள்ளி விடுகிறார்கள் !ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்தை சம்பாதிப்பது என்றால் சும்மாவா ?
      நன்றி !

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி ரமணி ஜி !

      Delete
  7. சினிமாவின் தாக்கம் நல்ல வழிக்கு பயன்படாமல் இப்படி பயன்படுவது வேதனைதான்!

    ReplyDelete
    Replies
    1. வேதனையை உணர வேண்டியவர்கள் பணம் ஒன்றையே குறி வைத்து சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே ,சுரேஷ் ஜி !
      நன்றி !

      Delete
  8. Replies
    1. நல்லது நடக்கட்டும் என்று ரைட்டு சொன்னதற்கு நன்றி கருண் ஜி !

      Delete
  9. Replies
    1. நன்றி கருண் ஜி !

      Delete
  10. சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. சிறந்த பகிர்வுக்களுக்கு மறக்காமல் கருத்திடுவதற்கு நன்றி ஜீவலிங்கம் காசி ராஜ லிங்கம் ஜி !

      Delete
  11. சினிமா சொல்லும் நல்லவற்றைவிட கெட்டவைகளே நம் மனதில் சுலபமாக ஒட்டிக்கொள்கிறது....

    ReplyDelete
    Replies
    1. ஒட்டிக் கொள்ளும் படியான காட்சிகளை சென்சாரில் வெட்டி விட்டால் நல்லது தானே ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  12. சினிமா எப்போது தன்னிலை இழத்தலை உருவாக்கி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. tasmac ம் ,சினிமாவும் சேர்ந்துதான் சீரழிவை உண்டாக்குகின்றன!
      நன்றி முரளிதரன் ஜி !

      Delete
  13. உங்கள் கருத்தில் இருந்து மாறு படிக்கிறேன். இணையத்தில் அணுகுண்டு எப்படி செய்வது என்று கூட தகவல் இருக்கு. எப்படி எளிதாக விஷவாயு செய்ய முடியும் தகவல் உள்ளது. கெமிஸ்ட்ரி பாடத்தில் பாஸ்பரஸ் தன்மையைப் பார்த்தோம். நமது ஆட்கள் ஈரமான பாஸ்பரத்தை குடிசை மீது வீசினார்கள். இந்தியர்கள் செய்யம் தவறு.. அப்ப பாஸ்பரஸ் பற்றி பாடமே எடுக்காமல் மறைத்து விடலாமா?

    இது மாதிரி கொலை கொள்ளைகளில் இருந்து பாடம் படித்து எப்படி பாதுகாப்பாக இருக்கனும் என்று நாம் கதுக்கொல்வதைல்லை. இங்கு நடக்கும் ஒவ்வொரு கொலை கொள்ளையில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.

    நாம் அமெரிக்காவிலிருந்து அசிங்கங்களை மட்டும் காப்பி அடிக்கறோம். அது தான் வித்யாசம்.

    ReplyDelete
    Replies
    1. படிப்பறிவு இல்லாதவர்களும் திரைப் படங்களைப் பார்த்து எளிதாக சமூக விரோத காரியத்தில் இறங்குவதற்கு வாய்ப்பாக இருக்கிறதென்று சொல்ல வந்தேன் நம்பள்கி !
      நன்றி !

      Delete
    2. உங்களின் புரிதலுக்கு நன்றிகள் பல...

      Delete
    3. அறிவு ஜீவிகளுக்காக படம் எடுக்கவில்லை ,சி சென்டர் ரசிகனுக்கும் புரியிற படம் எடுக்கிறேன் என்பவர்கள் ...நாம் சொல்லும் கோணத்திலும் சிந்தித்து படமாக்க வேண்டுமல்லவா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  14. நல்லவற்றைபின்பற்றுவது கடினம்;கசப்பானது!கெட்டவை?உடன் ஆதாயம்!இதை ஊடகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எந்த தொழிலாய் இருந்தாலும் தொழில் தர்மம் என்கிற ஒன்றை கடைப் பிடிக்க வேண்டுமல்லவா ?
      நன்றி சென்னைபித்தன் அய்யா !

      Delete
  15. உண்மைதான் ஜீ

    ReplyDelete
    Replies
    1. படம் எடுப்பவர்களைத்தவிர எல்லோரும் ஒப்புக் கொள்ளும் உண்மையிது!
      நன்றி சக்கரகட்டி !

      Delete