''களத்தூர் கண்ணம்மா படம் கமல் சின்னப் பையனா இருக்கும் போது நடிச்சதாச்சே ...அந்த படத்தோட பார்ட் 2 வருதா ,என்ன பெயர் ?''
''பெருங்களத்தூர் கண்ணம்மாவாம்!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
'சிரி'கவிதை!
சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
''பெருங்களத்தூர் கண்ணம்மாவாம்!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா ?
சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
எல்லோருக்கும் பிறப்பின்போதே ...
வெளியே தெரியும் நஞ்சுக்கொடி வெட்டப்பட்டுவிடும் !
ஒரு சிலருக்கு மட்டும் ...
நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை
வேர்விட்டு பரவிவிடுமோ ?
வெளியே தெரியும் நஞ்சுக்கொடி வெட்டப்பட்டுவிடும் !
ஒரு சிலருக்கு மட்டும் ...
நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை
வேர்விட்டு பரவிவிடுமோ ?
|
|
Tweet |
வயிற்றில தான்
ReplyDeleteதொப்புள் கொடி
நெஞ்சில வேர்விடுவது
காதல் கொடியோ?
ஆஹா ,இது அதை விட அருமையாய் இருக்கே !
Deleteநன்றி
அந்த பார்ட்-2வில், நீங்கள் ஜெமினி கணேசனாக நடிக்கப் போகிறீர்களாமே, அப்படியா!!!!
ReplyDeleteஜோக்காளி கணேசன் என்று வேண்டுமானால் நடிக்கிறேன் ,அதுக்கு முன்னாலே, அந்த டேட்டில் பாலிவுட் கால்ஷீட் கொடுத்து இருக்கிறேனா என்று செக் பண்ணிக்கிறேன் !
Deleteநன்றி
"//பாலிவுட் கால்ஷீட்//" - இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப டூ,த்ரீ மச்.
Deleteகூட நடிக்கிற ஹீரோயின் யார்ன்னு தெரிஞ்சா ,'டூ மச்'சுக்கு பதில் மச்சமுள்ள ஆள்தான்னு நினைப்பீங்க !
Deleteநன்றி
வாச ரோஜா வாடிப்போலாமா? என்பதை இப்படிச்சொன்னார்களாம். "வா சரோஜா வாடிப் போலாமா?" .அந்த கதையா இல்ல இருக்கு சோமாறி x எல்லாம்.
ReplyDeleteஅடடா ,இந்த கதை அருமையா இருக்கே !
Deleteஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் கவிதை பாடுகிறார் ,நீங்கள் கதை சொல்லுறீங்க ..நான் கொடுத்துதான் வைத்திருக்கணும்,இப்படிப் பட்ட சிந்தனை சிற்பிகளின் கருத்துரை பெற !
நன்றி
ரசித்தேன்
ReplyDeleteதம 1
கிங் ராஜ்ஜின் வாச ரோஜாவின் தேனையும் தானே ?
Deleteநன்றி
ரசிக்கும்படியாக உள்ளது. நன்றி.
ReplyDeleteஉங்களைப் போன்றே ஜோக்காளிக்கு வரும் கருத்துரைகளை நானும் ரசிக்கிறேன் !
Deleteநன்றி
//சோமலிங்கம் மகன் மாரின்னா ..சோமாறின்னு கூப்பிடலாமா //
ReplyDeleteஅப்போ குப்புசாமியின் மகன் ரங்கன் குரங்கனா? ;-)
அட...!
Deleteஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது ,யார் எந்த பெயரை மகனுக்கு வைக்க கூடாது என்று !
Deleteஅட போடும் அளவிற்கு ,குரங்கன் நல்லாத்தான் இருக்கு ஆவி ஜி !
நன்றி
DD ஸார்,பார்த்தீங்களா ,இத்தனை பேர் அனுபவத்தை சொல்ல வைத்திருக்கான் இந்த சோமாறி !
Deleteநன்றி
என் கிளாஸ் ல அம்மு தேவி என்றொரு மாணவி , அவளை பசங்க எல்லாம் அ மூதேவி என்றே கூப்பிட்டு வம்பிளுப்பார்கள்:))) நலமா பாஸ்?
ReplyDeleteமே மாதம் முழுவதும் இணையம் பக்கமே வரமாட்டேன் என்று வைராக்கியமா இருந்து ஜெயிச்சிட்டீங்க ,வாழ்த்துக்கள் !
Deleteமூதேவி என்றாலும் அருமை ...நீயா நானாவில் சொல்வது போல் ..அடுத்து அடுத்து என்று சொல்லத் தோன்றுகிறது !
நலத்திற்கு என்ன குறைச்சல் ?தினசரி மொக்கைப் போட்டு ஐநூறு பேரின் கழுத்தை அறுப்பதில் இருந்தே தெரியவில்லையா ?
நன்றி
1) க வுக்கு க ன்னா பெ வுக்கு பெ இல்ல வரணும்! பெருங்களத்தூர் பெரியநாயகி, பெருங்களத்தூர்ப் பெண், பெருங்களத்தூர்ப் பேதை.... இப்படி!!!!
ReplyDelete2) ஹா..ஹா... என் மனசுல இன்னும் சில பேர்கள் தளும்புது... சொல்ல முடியலையே.....யே...
3) ஓ... மூன்றாவது விழிப்புணர்வுக் கவிதை... ஸ்மைலி போடக் கூடாது இல்லையா... :)
1.சின்ன வயது கமலுக்கு களத்தூர் கண்ணம்மா ,பெரிய வயது கமலுக்கு பெருங்களத்தூர் கண்ணம்மாதானே?
Delete2.இப்போ சொல்லலைன்னா எப்போ சொல்லப் போறீங்க ,இன்னொரு கமெண்ட் போட்டு சொல்லுங்க !
3.'சிரி' கவிதைக்கு தாராளமா ஸ்மைலி போடலாமே ,!
நன்றி
அடடா! பேர் வைக்கும்போது “உஷாரா” இல்லேன்னா “ பேஜாரா” பூடும்போல இருக்கே!
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் விவரம் வேணும்ன்னா நம்ம ஸ்ரீ ராம் ஜி அவர்களிடம் கேட்டுக்குங்க !
Deleteநன்றி
நடிகை யோட இடையில X னு போட்டு இருக்கீங்களே... அப்படீனா கிழவியா ? பகவான்ஜி.
ReplyDeleteஇப்படியும் அர்த்தம் எடுத்து கொள்வீர்கள் என்று நான் கனவுலே கூட நினைக்கலே !
Deleteநன்றி
நஞ்சுக்கொடி நெஞ்சுக்குழி வரைக்கும் வளர்வது மனிதரில் இயல்பாகிப் போனது..
ReplyDeleteஅந்த நஞ்சே அவர்கள் நெஞ்சுக்கு முடிவு கட்டுமென நம்புவோம் !
Deleteநன்றி
பெருங்களத்தூர் பொன்னம்மா என
ReplyDeleteஇருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்குமே
விரசத்திற்கு பஞ்சமின்றி வந்த புல்லுக்கட்டு பொன்னம்மா படத்தை விடநல்லாத்தான் இருக்கும் !
Deleteநன்றி
ரசித்தேன்....
ReplyDeleteஸ்ரீராம்: பெருங்களுத்தூர் பெரியநாயகி! இது நல்லா இருக்கே....
டைரெக்டர் ராம ,நாராயணன் பரிசீலனைக்கு அனுப்பலாம் போலிருக்கே !
Deleteநன்றி