25 June 2014

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் ....(பத்து கேள்விகள் தொடர் பதிவு )

தொடர் பதிவாய் வலம் வந்து கொண்டிருக்கும் பத்து 

கேள்விகளின்  மூலவர் அமெரிக்காவாழ்'மதுரைத் 


தமிழன் 'என்று நினைக்கிறேன் ...அவரின் இந்த 


கேள்விகளில் மாட்டிக்கொண்ட  சகோதரி 


அம்பாளடியாள் அவர்கள் ,ஒரிஜினல் மதுரைவாழ் 


தமிழனான என்னிடம் கேள்விகளை தள்ளிவிட்டார் 


...தான் பெற்ற இன்பம் (?)பெறுக  இவ்வையகம் 


என்ற அவரின் பரந்த மனப்பான்மைக்கு


வாழ்த்துக்கள் !

சரி ,கேள்விகளைப் பார்ப்போமா ?இதென்ன 


கொடுமையா இருக்கு ?விருப்பமான ஐந்து 


கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதாதா ?


பத்துக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கே !

 1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    

கொண்டாட விரும்புகிறீர்கள்?


          வழக்கம் போல மறந்துதான் !

 2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?


         நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல் 


அளவு இருக்கே !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

         தாலிக் கட்டின நேரத்திற்கு முன்புதான் !கிணறு 

என்று தெரிந்தே குதிக்கிறோமே என்று !

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது 

என்ன? 

        பவரா ?அது போன நாளைத்தான் வருசா வருஷம் 

திருமண நாள்னு கொண்டாடிக் கிட்டே இருக்கேனே !

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் 

சொல்ல விரும்புவது என்ன? 

        குழந்தைகளுக்கா .கல்யாணத்திற்கு 

வந்தவங்களுக்கா ?

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் 

தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

       உலகெங்கிலும் உள்ள பிரச்சினை ..இணையத்தில் 

என் மொக்கைகளையும்உங்களைப் போன்றவர்கள் 


 படிக்க வேண்டியிருக்கே !இதைத் தீர்க்க ஒரே 


வழி...இணையத்தை முடக்கி விடுவதுதான் 


,ஏனென்றால் அது இருக்கும் வரை என் கையை 


கட்டிப் போடமுடியாதே !

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

         நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே 

செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் 

என்ன செய்வீர்கள்?

       காமெடி பீசுக்கு இதுவும் விளம்பரம்தானே என்று 

நினைச்சுக்குவேன் !

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் 

என்ன சொல்வீர்கள்?

      என்ஜாய் ...மனைவி ஊருக்கு...இல்லை இல்லை 

...உலகத்தை விட்டே போயிட்டா என்று !என் நண்பர் 


என்னை போலத்தான் படாத பாடு பட்டுக் 


கொண்டிருக்கிறாரே !

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன 

செய்வீர்கள்?

          அதாவது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் 

தானே ?இப்ப செய்வதைத்தான் செய்துக் 


கொண்டிருப்பேன் ..உங்க கழுத்தை அறுத்துக் 


கொண்டு !

        அப்பாடா ...ஒரு வழியாய் பதில் சொல்லியாகி 

விட்டது ....இதைப் படித்துக் கொண்டிருக்கும் 


நீங்களும் இந்த தொடர் பதிவில் இணைந்து 


கொள்ளலாமே ? 

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

பயணிகளுக்கு இது வசதிதானே ?

''அந்த வீடியோ கோச் பஸ், மினி தியேட்டர் மாதிரியே இருக்கு !''
''ஆடியோ வீடியோ அவ்வளவு நல்லா  இருக்கா ?''
''அது மட்டுமில்லே ,கண்டக்டர் இடைவேளை நேரத்திலே முறுக்கு ,கோன்  ஐஸ் எல்லாம் வித்துக்கிட்டு வர்றாரே !'



'சிரி'கவிதை!

ஹீரோக்கள் எல்லாம் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள் !

படத்திலே வில்லனாய் இருந்தாலும் ...
நிஜத்திலே அவரும்  ஹீரோதான் !
எமனைக்கூட நெருங்க விடாமல் நீண்ட நாள் வாழ்ந்தார் ...
MN நம்பியார் !


62 comments:

  1. கேள்வி பதில் உங்களுக்கு உரித்தான அதே பாணி,
    இந்த நாள் சிரி களும் அசத்தல்..

    ReplyDelete
    Replies
    1. சீரியசையும் ஜாலியா எடுத்துக்கிறதுதானே என் பாணி ?
      நன்றி

      Delete
  2. நக்கலான பதில்கள்... செம ஜோக்காளி அண்ணே

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் பாஸ் ,உங்களைப் போல என்னால் சீரியஸா பதில் சொல்லத் தெரியலே !
      நன்றி

      Delete
  3. த.ம இணைச்சு முதல் ஓட்டு போட்டுட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. இந்த உதவிக்கு கைமாறாய் உடனே உங்களுக்கு மொய் வைத்து விட்டேனே!
      நன்றி

      Delete
  4. பதில்களில்
    நகைச்சுவை மின்னுகிறதே - அதுவா
    தங்கள் எழுத்து நடையாச்சே!

    ReplyDelete
    Replies
    1. கேள்வியும் நானே ,பதிலும் நானே பாணியில் உங்கள் கருத்தை ரசித்தேன் !
      நன்றி

      Delete
  5. உங்கள் பாணி பதில்
    மிக மிக அருமை
    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. கேள்விகளின் மூலவர் சீரியஸா பதில் சொல்லணும் ,பிராக்கட்டில் வேண்டுமானால் காமெடி பண்ணலாம்ன்னு சொல்லி இருந்தார் ...எனக்குத்தான் 'பிரா 'க்கட்டில் அடைபட விருப்பம் இல்லாமல் போய்விட்டது !
      நன்றி

      Delete
    2. கமெண்ட்டு சரி , பிராகட்டில் ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. நீங்களும் உங்கள் பத்து பதில்களைக் கூற வழிமொழிகிறேன் !
      நன்றி

      Delete
  7. // கற்றுக்க வேண்டியது கடல் அளவு இருக்கே ! // அப்படிச் சொல்லுங்க...!

    சும்மா டக் டக்ன்னு பதில்கள் அசத்தல்...

    ReplyDelete
    Replies
    1. வளவளா கொளகொலான்னு நீட்டி முழக்க எனக்கு தெரியாதே !
      நன்றி

      Delete
  8. ///நீச்சலை ...ஏனென்றால் கற்றுக்க வேண்டியது கடல் அளவு இருக்கே !////

    மாறுப்பட்ட பதில் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. கேள்வியின் மூலவரே வந்து ,இந்த உற்சவ மூர்த்தியின் பதிலைப் பாராட்டி உள்ளீர்கள் ,விசுவாமித்திரர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றது போலிருக்கிறது (சும்மா ஒரு பிலீங்க்ஸ் தான் )
      நன்றி

      Delete
  9. ஹாஹாஹா பதில்கள் அனைத்தும் டாப் டக்கர் ஜி! உங்க ஸ்டைல்! அதிலும் நாங்கள் "கற்றுக்கொள்ள விரும்புவது? அதற்கான உங்கள் பதிலை மிகவும் ரசித்தோம்! அது பல விஷயங்களைச் சொல்லும் ஒரு வித்தியாசமான பதில்! செம ஸ்பீடுல அசத்திட்டீங்க....சாரி.....நீஞ்சிட்டீங்க......நியூயார்க் மதுரைத் தமிழனுக்கு எவ்வளவு நன்றி சொல்லணும்!....எத்தனை எத்தனை சுவாரஸ்யமான பதில்கள்.....கற்றுக் கொள்ள....சிந்திக்க.....தெரிந்து கொள்ள......

    என்ன பதிவு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் ஒரு பதிவாகி விட்டது!

    ReplyDelete
    Replies
    1. #நீஞ்சிட்டீங்க.#
      தரையிலேயே நல்லா நீச்சல் அடிக்கிறேனா ?
      உண்மைதான் ,உண்மை தமிழனுக்கு நானும் நன்றி சொல்கிறேன் !
      நன்றி

      Delete
  10. ஜோக்ஸ் அருமை!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் த ம என்று போட்டிருப்பது எனக்கும் அருமையாய் இருக்கிறது !
      நன்றி

      Delete
  11. பதில்கள் அனைத்தும் நகைச்சுவை ததும்புகின்றன.

    ReplyDelete
    Replies
    1. இதை விட்டா உருப்படியாய் எனக்கு பதில் சொல்ல வராது !
      நன்றி

      Delete
  12. ஒரிஜினல் மதுரைவாழ்

    தமிழனான என்னிடம்
    >>
    அப்போ என் சகோ டூப்ளிகேட்ன்னு சொல்றீங்களா!? இருங்க டீக்குடிப்பு போராட்டம், ஜவுளிக்கடை நிரப்பும் போராட்டம், உண்ணும் விரதம்லாம் செஞ்சு தமிழகத்தையே திக்கு முக்காட வைக்குறோம்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டு தங்கச்சி... என்னைப் போல வெளியூர்ல வாழ்றவங்க போலி மதுரைக்காரங்களா என்ன...? நானும் போராட்டத்துல கலந்துக்கறேன். ஜோக்காளிய ஒரு வழி பண்ணிரலாம்.

      Delete
    2. ஐயையோ ,இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை ?
      மதுரையில் பிறந்து ,வளர்ந்து .மதுரை தண்ணியையே இந்த நொடி வரையிலும் குடித்துக் கொண்டிருப்பதால் ஒரிஜினல் என்று சொல்லிக் கொண்டேன் ,வேறொன்றுமில்லை ...செட்டு சேர்வதைப் பார்த்தால் மிகப் பெரிய கலவரமே வெடிக்கும் போலிருக்குதே ...
      அதென்ன டீக்குடிப்பு போராட்டம் ?தீக்குளிப்பு போராட்டம் பண்ணுங்க ,தேவைக்கு மேலும் மண்ணெண்ணெய் வாங்கித் தருகிறேன் !
      நன்றி

      Delete
    3. பால் கணேஷ் ஜி ,இந்த ஜோக்காளியே சீக்காளி ஆக்கிடாதீங்க...அவுக எல்லாம் வேற ஊர்க் காரங்க ...நாம மதுரை மண்ணின் மைந்தர்கள் என்பதை மனசில வச்சுக்குங்க !போராட்டத்தை வாபஸ் வாங்கிக்குங்க !(உங்களை தனியா கவனிச்சுக்கிறேன் ))))
      நன்றி

      Delete
  13. நறுக் கேள்விகளுக்கு பளிச் பதில்கள் உங்களின் பாணியில். மிக ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மண்ணின் மைந்தன் என்பதை நிருபீச்சிட்டீங்க ,எனக்கு பயம் விட்டுப் போச்சு !
      நன்றி

      Delete
  14. 4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது

    என்ன? ........செம காமெடி பதில்

    ReplyDelete
    Replies
    1. பல 24 மணி நேரமும் சேர்ந்ததுதானே தாம்பத்திய வாழ்க்கை ?
      நன்றி

      Delete
  15. உண்மையிலும் நீங்கள் ஒரு ஜோக்காளி என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஜீ :)))
    எல்லாப் பதில்களும் மிகுந்த நகைச்சுவை உணர்வு கலந்து கொடுக்கப்பட்டுள்ளது .
    என்னைக் கேட்டால் இன்னும் பத்துக் கேள்விகளை உங்களுக்கு அதிகப் படுத்தித்
    தந்திருக்கணும் :)))) மிக்க நன்றி ஜீ என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றி
    அனைவருக்கும் மகிழ்வு தர வல்ல பகிர்வினைத் தந்தமைக்கு .வாழ்த்துக்கள் .
    அது சரி காதல் வந்ததால் கவிதை வந்ததாய் டூர் போன இடத்தில் இருந்து கொண்டே பகிர்வு
    போட்டீர்களே கடசியா என்ன ஆனது அதையும் இப்ப எங்களுக்குச் சொல்லியாகணும் :))

    ReplyDelete
    Replies
    1. இந்த வாய்ப்பு தந்ததற்கு நான்தான் உங்களுக்கு மிக்க நன்றி சொல்லணும் !

      கவிதை வந்தது ...காசிக்குப் போன எதையாவது விட்டுட்டு வரணும்னு சொன்னாக ...கங்கையிலே கவிதைகளை கரைச்சிட்டு வந்துட்டேன் (இதுக்கு நீங்க ஏன் நிம்மதி பெருமூச்சு விடுறீங்க ?)
      நன்றி

      Delete
    2. ஒரு வழியா உங்க ஆத்துக்கார அம்மாவிடம் இருந்து தப்பிச்சிட்டீங்களே
      யூ ஆர் கிறேற் அப்படி என்று நினைத்துத் தான் :)))))))))))

      Delete
    3. அது வாழ்நாள் சிறையாச்சே ,எப்படி தப்பிக்கிறது ?
      நன்றி

      Delete
  16. ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து ... ஓஓஓஓஓஓஓஒ.......ஓ!..

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓஓஓஓஓஎன்று உங்க ஒட்டை தோனிக்கு ...இல்லை இல்லை..ஜோக்காளிக்கு போட்டதற்கு நன்றி !

      Delete
  17. ஹலோ, மதுரைத் தமிழன் சீரியஸான பதில்களைத் தான் கேட்டாரு, நீங்க என்ன எல்லா பதில்களையுமே காமெடி ஆக்கிட்டீங்க. ஆனா ஒரே ஒரு பதிலை தவிர, மதுரைத் தமிழன் சரியா புடிச்சிருக்காரு....

    ஆனா சும்மா சொல்லக்கூடாது,நீங்க ஜோக்காளின்னு மறுபடியும் நிரூபிச்சுட்டீங்க....

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் மட்டும் எல்லாத்துக்கும் சீரியசாவா பதில் சொல்லி இருக்கார் ?
      நீங்க சொன்ன மாதிரி அவர் சரியா பாயிண்டை பிடிச்சிருக்கார் !
      நன்றி

      Delete
  18. எத்தனையோபேரு,,, பதில் சொன்னாங்க,,, நானுந்தேன், ஆனா எல்லோருமே சிந்திக்க வச்சாங்க, நீங்க மட்டும்தான் சிரிக்க வச்சீங்க அனைத்தும் அருமை பகவான்ஜீ.

    ReplyDelete
    Replies
    1. என்பதில்களால் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சு இருக்கிறதா நினைச்சுகிட்டிருக்கேன் ,இப்படி சொல்லிட்டீங்களே கில்லர் ஜி !
      நன்றி

      Delete
  19. #7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

    நான் கேட்காமலே எல்லோரும் அதைதானே செய்துக் கொண்டிருக்கிறார்கள் ?#

    கொஞ்ச நேரம் அனுபவித்துச் சிரித்துவிட்டுத்தான் மேலே படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமா ?நம் பதிவர்கள் சிலர் கவிதையிலும் அட்வைஸ் செய்கிறார்கள் ...தாங்க முடியலே !
      நன்றி !

      Delete
  20. வணக்கம்
    தலைவா.
    சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் நகைச்சுவையுடன் அதாவது மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் நன்று... என்பதை. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எனக்கே தெரியாம ஒரு நல்ல விசயத்தை சொல்லிப்புட்டேன் போலிருக்கு ,தப்புன்னா மன்னிச்சுங்க தலைவா !
      நன்றி

      Delete
  21. சிந்தித்தால் சிரிப்பு வரும் பகவான்ஜீ

    ReplyDelete
    Replies
    1. பல நேரங்களில் சிரிப்புக்கு பதில் குழப்பம்தான் வரும் இல்லையா ?
      நன்றி

      Delete
  22. வணக்கம் !

    உங்கள் விடைகளை வாசித்ததும் கருத்திட வெண்பா எழுத தொடங்கினேன் முடியல்ல ( சிரிப்போ சிரிப்பு இன்னும் முடியல்ல அந்த சிரிப்பு ......ஆதலால் இப்படியே எழுதிட்டு போறேன் ஹா ஹா ஹா ! ( வீட்டில் துணைவி இல்லா சந்தோசம் ம்ம்ம்ம் வந்து பார்த்தாங்க ......?

    கல்நெஞ்சைக் கூடக் கனிந்திட வைக்கின்ற
    நல்விடை தந்தீர் நயந்து !

    அருமை அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. துணைவி வேணும்தான் ,ஆனா சதா துன்பப் படுத்தக்கூடாது !
      வெண்பா கருத்துக்கு நன்றி !

      Delete
  23. வழக்கமான நகைச்சுவையில் உங்கள் பதில்கள்... அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு சீரியசான கேள்விகளை காமெடியா ஆக்கிட்டதாலே இனிமே யாரும் சீரியஸ் தொடர் பதிவுக்கு என்னை அழைக்க மாட்டாங்தானே குமார் ஜி ?
      நன்றி

      Delete
  24. பதில்களில் நகைச்சுவை மிளிர்ந்தது! எல்லா பதில்களுமே அருமை. அதிலும் இரண்டாம் கேள்விக்கு தந்த பதில் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் நீச்சல் பிடிக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  25. நீங்க வெளியூர் போய்டீங்களே னு விட்டேன் பாஸ். அம்பாள் முந்திக்கிடாங்க:)
    பதில்கள் வழக்கம் போல் கல(க்) கலா :))

    ReplyDelete
    Replies
    1. பதிவர்ன்னா இந்த பத்து கேள்விகளில் மாட்டித்தான் ஆகனும் போலிருக்கே !
      உங்க பேஸ்ட்டிலே உப்பு இருக்கான்னு கேட்கிற மாதிரி ,பத்து கேள்விக்கு பதில் சொல்லிட்டீங்களான்னு கேட்பீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  26. ரசித்து சிரித்தேன் பகவான் ஜி.

    ReplyDelete