26 June 2014

மனைவி செலவாளின்னா பணத்தை எடுத்துதானே ஆகணும்?

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!  

பெயரை வைத்தவன் வாயில் உப்பு அள்ளிப் போடணும் !

''என்னங்க ,பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''



'சிரி'கவிதை!

காலம் செய்த கோலமடி !


ஆட்டோமேடிக் வாட்ச் வந்ததால் ... 
ஆட்காட்டி விரலும் ,கட்டை விரலும் செய்த வேலை நின்றுபோனது !
செல் போனில் டயம் தெரிவதால் ...
வாட்ச் வாங்குவதே  நின்று போனது !


24 comments:

  1. Replies
    1. புவ்வாவுக்கு லாட்டரி அடிக்க வேண்டி இருக்குமே ,பரவாயில்லையா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. வாட்ச் பண்ணினா வாட்ச்மேன் போல் வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டி வந்திடுமோ ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    அருமையாகஉள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அருமைக்கு நன்றி !

      Delete
  4. கவிதை சூப்பரோ, சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாத்தான் சொல்றீங்களா .சொக்கன் ஜி ?
      நன்றி

      Delete
  5. காசை எடுக்க முடியாமல் போவதால் அவக பெயரையே மாத்துவீகளா ?..
    இதுவே மதுரைத் தமிழனின் ஆத்துக்கார அம்மாவா இருந்தா எப்படி இருக்கும்
    என்று நினைத்துப் பார்க்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை :)))

    ReplyDelete
    Replies
    1. நேமாலஜியில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது போலும் ,பெயரை மாற்றினாலும் மனைவி திருந்த மாட்டாங்கிறதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரே !

      பூரிக்கட்டை மதுரை தமிழனை பதம் பார்த்து இருக்கும் அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  6. பணத்தை எடுத்துட்டே இருந்தா, பவித்ரா ‘தரித்திரா’ ஆயிடணுமே. அது தெரியாதா அவங்களுக்கு?

    ReplyDelete
    Replies
    1. தரித்திராக்கள் எல்லா பெயரிலுமே இருக்கிறார்களே!
      நன்றி

      Delete
  7. வாட்ச் பண்ணவேண்டிய விசயந்தான்.

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன செய்ய முடியும் ?நிறுத்தவா முடியும் நம்மால் ?
      நன்றி

      Delete
  8. முற்றிலும் உண்மை. நான்கூட கடிகாரம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. பாவம் கம்பெனிக்காரர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கும் நேரம் சரியில்லாமல் போயிடுச்சே !
      நன்றி

      Delete
  9. செல் போனில் டயம் தெரிவதால்
    பவித்ரா பணத்தை வித் ரா
    சிந்திக்க வைக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. இனி வாட்சை வேறு கட்டிச் சுமக்க வேண்டியதில்லையே !
      நன்றி

      Delete
  10. தங்களிற்கு நீண்ட பதில் இட்டுள்ளேன்.
    வாட்ச் பண்ணுங்கோ...
    மனைவி செலவாளின்னா பணத்தை எடுக்கணும் தான்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட பதிலைப் படித்தேன் கருத்தும் இட்டுள்ளேன் .
      வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தவங்களே வேறு தொழிலுக்கு போய்விட்டதால் நீங்க கவனிங்கோ ...
      உங்க தீர்ப்புக்கு தலை வாங்குகிறேன் !
      நன்றி

      Delete
  11. அருமை.

    மொபைல் வந்த பிறகு இருக்கும் வாட்ச் கட்டுவது கூட இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறுது நாமும் மாறித்தானே ஆகணும்?
      நன்றி

      Delete
  12. சிரிகவிதை அட அட அட......சூப்பர்! ஜி! உண்மைதான்!

    மனுஷன் இன்னும் சோம்பேறி ஆகின்றான்....அதாங்க மொபைல் சும்மா தொட்டாலே அது டைம் பாக்கக் கூட வேண்டாம்...காதுல சொல்லுமாமே!..அப்படியும் வந்து விட்டதாகக் கேள்வி!!!!
    தாம்தமாக வருவதற்கு மன்னிக்கவும்....லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துடுவோம்...அதாங்க லேட்டஸ்டா போடற பதிவும் பார்த்துடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. அடப் பாவமே ,நேரம் பார்க்கக் கூடவா முடியாத அளவிற்கு மனிதன் பிசியாகி விட்டான் ?போற போக்கை பார்த்தால் சாப்பிட நேரமின்றி மாத்திரை தேவைப் படும் போலிருக்கே !
      தாமதம் பரவாயில்லை ,ஆனால் 48மணி நேரத்திற்குள் போடப் படும் வாக்கின் அடிப்படையில் தான்தமிழ் மணத்தில், வாசகர் பரிந்துரை,மற்றும் மறுமொழிகள்
      கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்பதை நம் பதிவர்கள் அனைவருக்கும் இதன் மூலம் 'தொழில் ரகசியத்தை' தெரிவித்துக் கொள்கிறேன் !
      நன்றி

      Delete