வட இந்திய டூர் - பாகம் 5
டெல்லியில் இருந்து தாஜ்மகால் பார்க்க ,ஆக்ராவுக்கு ரயிலில் போகலாமா என ஆலோசனை செய்ததில் எல்லோருமே வேண்டவே வேண்டாம் என்றார்கள் .அதற்கு காரணம் ,அங்கு ஓடும் ரயிலில் எல்லாம் முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியில் கூட மக்கள் கணக்கு வழக்கு (?)இல்லாமல் ஏறி விடுகிறார்கள் .இரவில் பயணம் என்றால் அதை விடக் கொடுமை ...நடை பாதையில் கூட படுத்து விடுகிறார்கள் !
கொளுத்துகிற வெயில் பயமுறுத்தியதால் ,ஏசி வேன் பிடித்து பயணமானோம் ... நான்கு மணிநேர பயணத்திற்கு பின் ,ஓரிடத்தில் ஓட்டுனர் இறங்கிக் கொள்ளுங்கள் என்றார் .சுற்றி சுற்றிப் பார்த்தாலும் தாஜ் மகால் கண்ணுக்கு தென்படவில்லை .காரணம் ,நாம்
இறங்குகிற இடம் தாஜ் மகாலில் இருந்து முன் முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது .அங்கேஇருந்து தாஜ்மகால் வளாகத்தின் வாசலுக்கு செல்ல பேட்டரி கார் ,ஒட்டகம் பூட்டிய சாரட்வண்டிகள் அணிவகுத்து நின்றன .அதில் ஏறி ...இதோ நீங்கள் பார்க்கிறீர்களே ...
இந்த கோட்டை வாசலின் முன்புறம் இறங்கி ,தலைக்கு இருபது ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு கோட்டைவாசல் படியேறினால் ...முன்புறம் பச்சை பசேலென்று தோட்டம் விரிந்து கிடக்க ,தூரத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இதோ ,,தாஜ் மகால் !
நாம் இங்கிருந்து நடுவில் உள்ள நீருற்று ,சுற்றியுள்ள செடிகொடிகளை ரசித்துக் கொண்டே ...தாஜ் மகால் முன்னால் மேடைபோல் தெரிகிறதே ,அங்கே சென்றதும் அதிர்ச்சி !
தாஜ்மகால் அமைந்து இருக்கும் கோட்டை கொத்தளத்தின் மீது வெறும் செருப்போ ,சூவோ அணிந்து செல்ல அனுமதி இல்லையாம் ...
செருப்பின் மேல் ஒரு பையைக் கட்டிக்கொள்ள வேண்டுமாம் ,அந்த பை எங்கே கிடைக்கும் என்று கேட்டால் ,நுழைவுச் சீட்டு வாங்கிய இடத்தில் மட்டும்தான் கிடைக்குமாம் ...முதலிலேயே இதையும் நுழைவுச் சீட்டுடன் கொடுத்தால் என்ன ?
எங்களைப் போன்றே பலரும் கொதிக்கின்ற வெயிலில் அவதி அவதியாய் ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருக்கும் ,முன் வாசலுக்கு வந்து செருப்'பையை' வாங்க வேண்டியதாகி விட்டது !
முக்கியச் செய்தி ...தாஜ்மகால் மாடிக்கோ ,மும்தாஜ் சமாதி இருக்கும் கீழ் தளத்துக்கோ செல்ல அனுமதி இல்லை !அங்கே எல்லோரும் நடுத்'தள 'வர்க்கம்தான் !
பயணம் தொடரும் ...
இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?
''நீ காதலிக்கு வாங்கிக் கொடுத்த இளநீரால் காதலே
முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
''அவ குடிச்ச இளநீர் வழுக்கையையும் கீறி ,நானே சாப்பிட்டது
அவளுக்குப் பிடிக்காமப் போச்சே !''
நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...
இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே
-
-
KILLERGEE DevakottaiFri Jul 11, 03:38:00 p.m.
வழுக்கையான காதலோ ? அதான் வழுக்கிடுச்சு....
KILLERGEE DevakottaiFri Jul 11, 03:38:00 p.m.
வழுக்கையான காதலோ ? அதான் வழுக்கிடுச்சு....
|
|
Tweet |
தமிழ் மணம் தளத்துக்கு என்னாச்சு ?நீண்ட நேரமாய் பதிவுகள் முகப்பில் வரவில்லையே ?
ReplyDeleteவிடிவதற்குள் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன் தூங்கச் செல்கிறேன் ...குட் நைட் :)
சரியாகி விட்டது ,தமிழ் மணம் திரட்டிக்கு நன்றி !
ReplyDeleteசில வேளைகளில் இணைவதும் தாமதம் ஆகிறது... ஓட்டுப்போட்டாலும் தாமதம் ஆகிறது... சுற்றும் சுற்றும் சுற்றிக் கொண்டே இருக்கும்... பொறுமையுடன் இருந்தால் தான் ஓட்டு விழும்... தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி விட்டேன்...
ReplyDeleteஇதனால் ,வாக்கு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்பது நேற்றைய பதிவின் போதே தெரிந்து விட்டது :)
Deleteதாஜ்மகால் டூர்! ! நீங்க கைடா!! அப்போ சுப்பரா இருக்குமே! சுத்திபாத்துடுவோம்:)
ReplyDeleteமினி டூர்தான் ,சூட்கேஷ் எல்லாம் வேண்டாம் ,எனக்கும் சேர்த்து கேஷ் மட்டும் கொண்டு வாங்க :)
DeleteHi... Hi...
ReplyDeleteஎதை ரசித்து சிரித்தீர்கள் :)
DeleteHi... Hi...
ReplyDeleteமீண்டுமா :)
Deleteசெருப்புப் பை அறிந்து கொண்டேன்நண்பரே
ReplyDeleteநன்றி
தம +1
செருப்புக்கு மரியாதை :)
Deleteகால் பைகளை இப்போது மேடைக்கு அருகேயே தருகிறார்கள் அய்யா...
ReplyDeleteதம +
இதை செய்ய இப்போதான் ........:)
Deleteஎனக்கும் செருப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது . அப்போது செருப்பை வசதி இல்லை. மேடைக்கு வெளியே விட்டுத்தான் செல்லவேண்டும் . என் செருப்பும் காணமல் போய்விட்டது
ReplyDeleteமறக்க முடியாத தாஜ் ,இல்லை இல்லை ,செருப்பு :)
Deleteஇளநீர் குடித்தவள் அவளாச்சே
ReplyDeleteகோம்பை சூப்பினவர் (வழுக்கை சாப்பிட்டது) நானாச்சே
காதலே முறிஞ்சுப்போச்சு!
தண்ணி காட்டியவளும் அவள்தான் :)
Deleteதாஜ்மகால் சென்றுள்ளேன். இருப்பினும் உங்களுடன் இப்போது பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
ReplyDeleteசக பயணியாய் தொடர்வோம் ,ரயில் சிநேகம் ஆகிவிடாமல் :)
Deleteதமிழ் மணத்திற்கு வயதாகி விட்டது.அதனால்தான் சட்புட்டுன்னு வரமுடிய வில்லை.பொருத்தருள்க...!
ReplyDeleteஒரு நல்ல வோட்டு போடுவதற்குள் நமக்கே தலை சுற்றத் தொடங்கி விடுகிறது ,அப்படித்தானே :)
Deleteஇளநீரைச் சேர்ந்து குடித்ததைப் போல் வழுக்கையிலும் ஒன்றாய் நீந்தி இருக்க வேண்டும்....!எந்தக் கையால் சமைத்தால் என்ன இடது கையால் சாப்பிடமட்டும் கூடாது.
ReplyDeleteவாழ்க்கையை நீந்திக் கடக்கணும் என்பார்கள் ,வழுக்கையையுமா :)
Deleteவலது கை வருத்தப் படும் ,அப்படித்தானே :)
ரசித்தேன்.
ReplyDeleteதேன்தான் இளநீரும் ,ஆனால் வழுக்கை ?
Deleteதாஜ்மகால் - சில வருடங்கள் முன்பு வரை , வாயில் வரை வாகனங்கள் அனுமதித்தார்கள். வெள்ளைக் கல் முழுவதும் வாகனங்களின் புகை பட்டு வண்ணம் மாறிக்கொண்டு வர நிறுத்தி விட்டார்கள். தற்போது பேட்டரி வாகனங்களும், குதிரை வண்டிகளும் இருக்கின்றன. தில்லியிலிருந்து ஒரு நாள் பயணமாய் செல்லும் பல சுற்றுலா பேருந்துகள் மதியம் 11-12 மணிக்கு - கால் வைக்க முடியாத அளவு சூடு இருக்கும் போது தான் தாஜ் செல்வார்கள்! :)
ReplyDeleteஆமாம் ,இதற்கு முன்பு ஒரு முறை சென்ற போது இவ்வளவு தூரம் நடந்ததில்லை .
Deleteதாஜ் ம'கால் ' லை மறக்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்களோ :)
காதல்னாலே கொஞ்சம் அவதிதான் போல!
ReplyDeleteகொஞ்சமா ?தூர நின்று ரசித்தால் சுகம்தான் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செருப்பினால் வந்த வெறுப்பைத் தானே :)
Deleteநள பாகம் நாயகனாவதற்கு அடிப்படைத் தகுதி
ReplyDeleteகைகள்தானே?
இன்றையை மணமகள் எதிர்பார்ப்பு ஏற்புடையதே! பகவான் ஜி!
த ம 15
நட்புடன்,
புதுவை வேலு
கைகள் பின்னிப் பிணைந்தாலும் சரிதான் :)
Delete