14 July 2015

மணப்பெண் இவள் என்றால் மணப்பவன் எவன் :)

          ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''

           ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு சொல்லி இருந்தீங்க !''
 காக்கா பிடிக்கத்தெரிந்த மனிதனின் மொழி ,காக்காவுக்கு புரியுமா ? 
         ''காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு  தெரியாது போலிருக்கா  ,ஏன் ?'' 
          ''அது இதுவரை பொன் குஞ்சை அடகு வைக்க வரக் காணாமே !''

கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க !

''யாருய்யா நீ ,108க்கு போன் பண்ணி 1000ரூபாய் கடன் கேட்கிறே ?''

''நீங்கதானே அவசர உதவிக்கு போன் பண்ணச் சொல்லி இருந்தீங்க !''

ஜோடிப்பொருத்தம் தேவைதான் ,ஆனால் அதிலும்...

செருப்பிலேகூட வலது ,இடது வேறுபாடு இருந்தால் தான்  ஜோடிப்பொருத்தம் ..
மனிதரில் மட்டும் ஆணுக்கு ஆணும் ,பெண்ணுக்கு பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்ன பொருத்தம் ?


  1. ஒரு வேளை காக்கைக்கு அவசரத் தேவை ஏற்பட்டிருக்காதோ....




    1. Bagawanjee KAMon Jul 14, 09:31:00 a.m.
      அவை விதையோ,யூரியாவோ வாங்கப் போகிறதா ,அறுவடைக்கு கூலி கொடுக்கப் போகிறதா ,அவசரத் தேவையே கிடையாதே ..அவை விதைப்பதுமில்லை ,அறுப்பதும் இல்லையே !

      1. வலிப் போக்கன்Mon Jul 14, 06:58:00 p.m.
        ஆகா...ஆகா...ஜோடி பொருத்தம் நன்றாகவே அமைந்திருக்கிறது




        1. உண்மைதான் ,எட்டு பொருத்தம் ஓஹோ ...ஒன்பதாவது பொருத்தம் பார்க்கவே வேண்டியது இல்லை !

24 comments:

  1. Replies
    1. என்று பாடத்தான் தோன்றுகிறதா :)

      Delete
  2. கல்லறையில் தேடும் ஜோக்!!

    ஹா....ஹா...ஹா...

    ஆஹா.... எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பு...!

    என்ன ஒரு சிந்தனை!

    ReplyDelete
    Replies
    1. கன்னிப் பேய் சுமங்கலியாய் வாழ நினைக்கிறதோ :)

      Delete
  3. அடக்குவதா...? அடங்கி போவதா ஜி...?

    ReplyDelete
    Replies
    1. அடக்கம் அமரருள் உய்க்கும் :)

      Delete
  4. Replies
    1. அடக்கமான பொண்ணை யார்தான் ரசிக்க மாட்டார்கள் :)

      Delete
  5. காக்கையையும் விட்டுவைக்க மாட்டீர் போலும்,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. காக்காதான் நாம செத்தாலும் விடாது போலிருக்கே :)

      Delete
  6. ஜோடிப் பொருத்தம் காலத்துக்கு ஏற்ற பதிவு. காக்கா பிடிக்கத் தெரிந்த மனுஷ்னுக்கு காக்காவின் மொழி தெரியுமா. அவற்றுக்கு அடகு வைக்கத்தேவை இருக்கா.?

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் விரும்புகிறார்கள் நமக்கென்ன என்று இருக்க முடியலியே :)
      அதான் சொல்லிட்டேனே ,அவை அறுப்பதும் இல்லை என்று :)

      Delete
  7. இன்றைக்கு சிரிக்க முடியாது..எம்எஸ்வி மறைந்திட்டாரு..!!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் மனதிலும் ஊடுருவி நிற்கும் மெல்லிசை மனனருக்கு ஆழ்ந்த அஞ்சலி (:

      Delete
  8. இன்றைக்கு காக்கா பிடிப்பவர்களே அதிகம்!

    ReplyDelete
    Replies
    1. பதிவர்கள் நாமும் ஒரு விதத்தில் அதில் சேர்த்திதானே:)

      Delete
  9. Replies
    1. கிட்னியை எடுத்துக்கிட்டு வேணா பணம் தருவாங்க ! இதை உங்களால் ரசிக்க முடிந்ததா :)

      Delete
  10. Replies
    1. இதற்குப் பெயர்தான் கள்ளச் சிரிப்பா :)

      Delete
  11. செருப்பும் ஜோடிப்பொருத்தமும் சரியான தத்துவம் ஜீ..

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. தத்துவங்கள் என்றும் தோற்பதில்லை :)

      Delete
  12. வணக்கம்
    ஜி..

    காக்கா..காமெடி செம கலக்கல் ஜி.... காக்கா குஞ்சை அடகு வைப்பது என்றால் காக்கா ... பிடிக்க அதிக்கம்...ஹா...ஹா.
    த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மனுஷன் ஒரு காக்கையைக் கூட வைக்கமாட்டேனே :)

      Delete