இது ஒரு குற்றமாய்யா :)
''நீங்க வெள்ளையை கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''
இவருக்கு தேச பக்தி ஜாஸ்தி !
''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா பிடிக்காதுன்னு சொல்றே,பிறகேன் மேட்ச்
பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
'' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான்
ஆளில்லை வேடிக்கைப் பார்க்கவுமா ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு
தான் ! ''
ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''
கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !
ஸ்ரீராம்.Thu Jul 10, 02:36:00 p.m.- என்னவொரு தேசபக்தி! ஆனால் என்ன செய்ய, கை தட்டித் தட்டியே வளர்ந்த நாடாச்சே..!
- சிரிச்சேன். எப்படிங்கறீங்களா... வாயெல்லாம் பல்லாத்தான்!
- A கிளாஸ் ஜோக்!
- துரை செல்வராஜூThu Jul 10, 02:42:00 p.m.குவைத்தில் நடுப்பகல் (12.10).
வேலை முடித்து விட்டு இப்போது தான் வந்தேன்.. உச்சந்தலை கொதிக்கின்றது. இருந்தாலும் கணிணியைத் திறந்து கொண்டு உட்கார்ந்து ஜி - பக்கங்களுக்கு வந்தால் - ,
1, 2, 3 - இளநீர் குடித்த மாதிரி இருக்கின்றது!..
|
|
Tweet |
Rasithen.....
ReplyDeleteசேலைக் கட்டிய மாதரை நம்பாதேன்னு ஒரு பழைய பாட்டு வருமே ,அதையும் ரசிக்க முடிகிறதா :)
Deleteஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
ReplyDelete''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''
அதனால்தான் தண்ணியிலே எல்லோரும் ஆட்டம் போடுறாங்களா? பகவான் ஜி!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
ஆஹா ,என்ன பொருத்தம் ,இந்த பொருத்தம் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
என்ன விளையாட்டு... நிச்சயம் மணமும் .ஒரு வித அழகும் ஜி... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்ன விளையாட்டு ....goal ஆட்டம்தான் :)
Deleteமணம் என்றால் என்ன மணம்:)
வெள்ளையைக் கறுப்பாக்குவதும் அழகுதான் :)
ஹா...ஹா...ஹா...
ReplyDeleteவேதனையான உண்மை!
ப்ளேடு ஜோக்!
ஹிஹிஹி... என் பழைய கமெண்ட்ஸ் நல்லாருக்கு இல்லே?
:))))
பழைய கமெண்ட்ஸ் நல்லாயிருக்கப் போய்தானே மீள் பிரசுரம் பண்ணியிருக்கேன்
Deleteவேறேதும் கேஸ்(ஷ்) கிடைக்கல போல...!
ReplyDeleteகேஸ் கிடைக்காட்டியும் நம்மாளு கேஷ் பார்த்து விடுவார் :)
Deleteஏற்கனவே..தலை முடி.. இப்போ சேலைக்கா..... கொளுத்துங்க.....!!!!
ReplyDeleteபோகி அன்னிக்கு கூட கொளுத்துற பழக்கம் எனக்கில்லையே :)
Deleteஏன் ஜீ இப்படி?
ReplyDeleteஅடுத்த வாதம் இப்படியா
சேலைக் கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டா இல்லையா
தலைப்பு எப்படி
அனைத்தும் அருமை ஜீ,,,,,,,,,,,
வாழ்த்துக்கள்.
சரி இனி இப்படி வராது ,போதுமா :)
Deleteகண்டு பிடித்துச் சொல்ல ஒரு தருமி(பதிவர் அல்ல!) வர வேண்டும்!
ReplyDeleteஅந்த தருமி ,பிரமச்சாரியாய் இருந்து விடக் கூடாது :)
Deleteஎனகுத் தெரியாது!
ReplyDeleteஎல்லோரும் 'இக்கு'வைப்பார்கள் ,நீங்கள் அதை விடுவதில் இருந்தே உங்க நல்ல மனசு புரிகிறது அய்யா :)
Deleteஎல்லா ஜோக்குகளும் அசத்தல் ரகம்! வாய்விட்டு சிரித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுரேஷ் ஜி ,இன்று வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியுள்ளதற்கும் சேர்த்து , இரட்டிப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் :)
Deleteபெண்ணுக்கொரு வாசமுண்டு மட்டுமா
ReplyDeleteகோபம் வந்தால்
அடுப்பில் எரியும் நெருப்புக் கொள்ளியை
எடுத்துச் சுடும் குணமும் உண்டு
அதற்கும்
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர்!
அந்த அனுபவம் உண்மையாய் எனக்கில்லை :)
Deleteஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்.....கறுப்பு வெளுப்பு அருமை....
ReplyDeleteபின்னூட்டங்களும் ரசனையாக இருக்கின்றன....ஜி!
நான் நார்தான் ,உங்களின் பின்னூட்டங்களினால் மணக்கிறேன் :)
Delete