---------------------------------------------------------------------------
சந்தேகப் பட்டது சரிதானே :)
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
கவர்ச்சி அழகியை தெரியாதென்றால் ஆணுக்கு இழுக்கு தானே ?
''நம்ம சச்சினை யாருன்னே தெரியாது என்கிறார் ஷரபோவா ,ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
''உலகப் புகழ் மாடலை தெரியாதுன்னு சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''
''உலகப் புகழ் மாடலை தெரியாதுன்னு சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''
அழகான பெண் பெயரைச் சுருக்கலாமா ?
''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் எழுதிய ஜோக்கே
வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர்
பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே
கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''
வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர்
பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே
கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''
லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?
எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !
- Chokkan SubramanianTue Jul 08, 09:40:00 a.m.
சத்தியமா எனக்கு நீங்கள் சொன்ன தமிழ் இலக்கணம் தெரியாது. அதுக்காக நான் கவிதை எழுதி லகரங்களை சேர்த்தவர் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.
நான் கவிதை எழுதியிருந்தால்,லகரங்களை சேர்ப்பதற்கு பதில் செலவளித்திருப்பேன்.
|
|
Tweet |
நீங்கள் எழுதிய அந்த 'எனக்குத் தெரியாது'ல் எத்தனை கவிதை,,! எத்துனை தத்துவம்...1
ReplyDeleteஇது உங்களுக்குத் தெரியுமா?
பின்னிட்டீங்க ஜீ...
GOD BLESS YOU
நானும் தெரியாம பின்னிட்டேன் போலிருக்கு :)
Deleteதற்போது "லவ் வுக்கு தேவை லகரம் மட்டுமே!
ReplyDeleteஅப்படித்தானே பகவான் ஜீ அவர்களே!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
லூசுப் பையனை வேறெதுக்கு காதலிக்க முடியும் :)
Deleteசைபர் இருந்தாலும் முன்னேற்றம்...!
ReplyDeleteசைபர் இல்லேன்னா எந்த எண்ணுக்கும் மதிப்பில்லையே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
லுகரத்தைத் தானே :)
Deleteரசித்தேன் தோழரே
ReplyDeleteநம்ம பக்கமும் வாங்க
Pandianinpakkangal.blogspot.com
அசந்து போனேன் ,உங்களால் எப்படி நாலு வலைப்பூக்களில் எழுத முடிகிறது ?
Deleteமேலும் வளர வாழ்த்துகள்:)
வணக்கம்,
ReplyDeleteசைபர் வாங்கினா வேலைகிடைக்கும் ம்ம்,,,,
இலக்கணவிளக்கம் அருமை
அனைத்தும் அருமை ஜீ,,,,,,,,,
வாழ்த்துக்கள்.
நன்றி.
வேலை கிடைக்கும் ,வேலையிலாவது ஓலை வாங்காமல் போனால் சரிதான் :)
Deleteகுற்றியலுகரம் முற்றியலுகரம்
ReplyDeleteஇரண்டையும்
மீட்டுப் படிக்க வைக்கிறியளே!
முற்றாத லுகரத்தை மீட்டுப் படிப்பதில் தவறில்லையே :)
Deleteஒரு கவிதை எழுதி அதை கொஞ்சம் பேரையாது படிக்க வைக்கிறது (குறைந்த பட்சம் பாக்க வைக்கிறது) ரொம்ப கஷ்டம்
ReplyDeleteசைபர் மார்க் வாங்கறது ரொம்ப கஷ்டம் எப்படியாவது ஒரு மார்க்காவது போட்டுடுவாங்க
அடடா என்னா கருணை :)
Deleteஹஹஹஹஹ் ரசித்தோம்....அதுவும் லுகரம் லகரமானதும்...
ReplyDeleteநல்ல வேளை,தகரம் ஆகவில்லை :)
Deleteசைபர் மார்க் !அருமை!
ReplyDeleteநான் இப்படி எழுதி இருப்பது தெரிந்தால் அந்த இன்சு என்னை தேடி வரப் போறார்னு நினைக்கிறேன் :)
Deleteஆ! அதுதான் சிறப்புத் தகுதியோ!
ReplyDeleteஹா...ஹா...ஹா... இதுல இது வேற!
நிஜம்மாவா?
ம்ம்ம்...
இதுக்கே அஞ்சு ஸ்டார் குத்திக்கலாம் :)
Deleteஹாஹாஹா! அருமை!
ReplyDeleteஅருமைக்கு நன்றி :)
Delete