25 July 2015

மரணமில்லா கனவுக்கன்னிகள் :)

ஹீரோ முத்தக் காட்சியில் நிறைய 'டேக் 'வாங்குவாரோ ?

           ''சூட்டிங்கில் கலந்துக்க மாட்டேன்னு ஹீரோ  கோவிச்சுக்கிட்டு போறாரே ,ஏன் ?''
           ''நேற்று அவரோட டூப்பை போட்டு ,முத்தக்காட்சி எடுத்த விஷயம் அவருக்கு தெரிஞ்சுப் போச்சாம் !''

பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !

                 ''ஏன்யா ,பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு போலீஸ் வேலைக் கிடைத்தும் ஏன் அனுப்பலே ?''
                 ''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு எப்படி போறது ,அது நம்ம பரம்பரைக்கே அவமானமாச்சே !''




மரணமில்லா  கனவுக்கன்னிகள் :)

இருந்தாலும் மறைந்தாலும் கனவுக் கன்னிகள்
நினைவிலும் கனவிலும் வாழ்ந்துக் கொண்டுதான்  இருக்கிறார்கள் !


  1. வலிப் போக்கன்Fri Jul 25, 04:32:00 p.m.
    ஒரிஜினலை விட டூப்பக்குத்தான் மவுசு ஜாஸ்தி......




    1. மரவெட்டி அன்றாடங்காச்சி ,மரவெட்டியா வேஷம் போடுகிற ஹீரோவுக்கு  சம்பளம் கோடிக்கணக்கில் ,டூப்புக்கு மவுசு ஜாஸ்திதான் !டூப்பு யாருன்னு தெரியுதா :)

34 comments:

  1. Replies
    1. டாப்புதானா ,முதலில் தொப்புளான் 'னு வாசித்தேன் :)

      Delete
  2. டூப்புக்கு அடிச்சுச்சே டக்கருடாப்பு...
    போலீஸ் வேலை சூப்பரு...
    கனவுக்கன்னி ம்... என்னிக்குமே க்க்க்க்கன்ன்ன்ன்னிதான் ஜி....

    ReplyDelete
    Replies
    1. டக்கர் ஆப்பர்தானே :)

      சூப்பருதான்,பக்கிரிகிட்டே பருப்பு வேகாதே :)

      அதென்ன க்க்க்க்க்க்க் :)

      Delete
  3. டூப் ரொம்ப ஆபத்தான வேலையத்தான் செஞ்சிருக்காரு..!

    கனவுக் கன்னிங்க உங்க ஜோக் மாதிரி எப்ப படிச்சாலும், எப்ப பாத்தாலும், எப்ப நினைச்சாலும் சந்தோசம் கொடுக்குதே..!

    God Bless YOu

    ReplyDelete
    Replies
    1. எதையும் சந்திப்போம் என்கிற துணிச்சல் அவருக்கு அதிகம் :)

      அப்படியா ,எனக்கு இது சந்தேகத்தைக் கொடுக்குதே :)

      Delete
  4. Replies
    1. தங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. ஏன் இந்த சிரிப்போ :)

      Delete
  6. Replies
    1. எதற்கு இந்த ரசிப்போ :)

      Delete
  7. அந்த மாதிரிக் காட்சிகளில் டூப்பாக நடிக்க நான் ரெடி. நீங்கரெடியா. ? கொடுப்பவர் கை எப்போதும் உயர்ந்துதான் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவா :)

      ஆமாம் ,கர்ண மகா பிரபுக்கள் ஆச்சே :)

      Delete
  8. முத்தக்காட்சி நகைச்சுவை அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு ரோஷப் படலேன்னா ஹீரோ இமேஜ் என்னாகிறது :)

      Delete
  9. மரணமில்லா கனவுக்கன்னிகள் :)அவுகளுக்கு வயசு ஆகாதுங்களா...???

    ReplyDelete
    Replies
    1. ஔவையாரை இளமையாவும் ,சிலுக்கை கிழவியாவும் நினைச்சுப் பார்க்க முடியுதா :)

      Delete
  10. எந்த நிலையிலும் அவர்களுக்கு மரணமில்லை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கோப்பையில் குடியிருப்பவருக்கே மரணமில்லை எனும் போது,மனக் கோட்டையில் குடியிருப்பவருக்கு எப்படி மரணம் வரும் :)

      Delete
    2. உங்க பின்னூட்ட பதில்களும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

      Delete
    3. ரசிக்க வைக்க முடியவில்லை என்றால் வலைபூவில் இத்தனை நாளாய் குப்பைக் கொட்ட முடியுமா ?
      ஹிஹி ....இன்று இது 1500 வது பதிவு :)

      Delete
  11. அன்புள்ள ஜீ,

    உண்மையைச் சொன்னா அவரு போவாரா...? ஹீரோயினும் டூப்புன்னு உண்மைய சொல்ல வேண்டியதுதானே...சில நேரங்கள்ல்ல உண்மைய பேசித்தான் ஆகனும்... அவுங்களுக்குதான் “தேனிலவு“ சிங்கப்பூர்ல்ல சூட்டிங்...உண்மையாவே போயிட்டாங்க... தெரியாதா...?


    மாமூல் வாழ்க்கை... வாழப் பிடிக்கல...! கைலி கட்டிட்டு டூட்டிக்கு போக முடியுமா?


    தினத்தந்தி ’கன்னித்தீவு’ கனவுக் கன்னிதானே...! அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

    நன்றி,
    த.ம.11




    ReplyDelete
    Replies
    1. தேனிலவு உண்மையா ?அண்மையில் ஒரு படத்தில் பிரசவத்தை உண்மையாய் காட்டியது போல் ,உண்மை தேனிலவையும் படத்தில் காட்டுவார்களா :)

      முடியாது ,ஆனால்காக்கிச் சீருடைப் போட்டுக்கிட்டு கொள்ளை அடிக்க முடியும் :)

      ஆமாம் ,கன்னி கழியாமல் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .இதில் எள் அளவும் ...இல்லை இல்லை ...உயிர் உள்ளளவும் சந்தேகமில்லை :)

      Delete
  12. வாழ்த்துக்கள் ஜி! கொடுக்கிற இடத்துல இருக்கறவங்க வாங்கிற இடத்துக்கு போக யோசிக்கிறது சகஜம்தான்! ஹீரோ புகையிறதுல நியாயம் இருக்குதே!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் எப்பேற்பட்ட நல்ல இடம் :)

      இந்த துக்கத்தை புகை விட்டு ஆற்றிக் கொள்ளட்டும்:)

      Delete
    2. வணக்கம்
      ஜி

      சினிமா நம்மை மடையனாக்கும் செயல்... என்ன செய்வது பொழுது போக வேண்டும் என்றால் பார்த்தே ஆகவேண்டும்...த.ம 13
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்

      Delete
    3. சினிமாவைப் பார்க்கவில்லை என்றாலும் என்ன வாழ்கிறதாம் :)

      Delete
  13. டூப்பு டாப்பு!

    பக்கிரி-பையன்-போலீஸ் - அதானே...கொடுத்துப் பழகிய கைகள் வாங்குமா?!!!

    ReplyDelete
    Replies
    1. லாக் அப் என்றால் கசக்கும் .லிப் லாக் என்றால் டூப்புக்கும் இனிக்கத்தானே செய்யும் :)

      கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களோ :)

      Delete
  14. பிளேடு பக்கிரி ஜோக்கை ரொம்பவும் ரசித்தேன்.
    த.ம.15

    ReplyDelete
    Replies
    1. தன்மானச் சிங்கமாச்சே .பிளேடு பக்கிரி:)

      Delete
  15. கனவுக்கன்னிகள்
    உள்ளத்தில் ஆழமாக உறங்குவதாலோ

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
    Replies
    1. அனேகமாய் அவர்கள் 'சப் கான்சியஸ் மைன்ட் ' வரை ஊடுருவி விட்டார்கள் என்றே நினைக்கிறேன் :)

      Delete