எழுதியே லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் !
பார்ப்பதற்கு ஒயிலாய் காட்சி தரும் இவரை உங்களுக்கு தெரியுமா ?
நம்மைப் போன்றே ப்ளாக் (ஆனால் ஆங்கிலத்தில் )எழுதிக் கொண்டிருந்த இவர் ,தற்போது முழுநேர எழுத்தாளர் ஆகி விட்டார் ....
இவர் பிளாக்கில் எழுதியதை புத்தகமாய் வெளியிட அது சூப்பர் ஹிட் ...
தொடர்ந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா 'வில் மட்டுமல்ல 'ரீடர்ஸ் டைஜஸ்ட் 'டிலும் எழுதி புகழ்பெற்றார் ...
தற்போது பெங்களூரில் கணவர் ,இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் ...
இவர்தான் ப்ரீத்தி செனாய் !
இவர் எழுதிய புத்தகங்கள் நம் நாட்டில் மிக அதிகம் விற்பனையாகின்றன ...
'போர்ப்ஸ் 'பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ...
'இந்தியாவின் செல்வாக்கான முதல் நூறு பிரபலங்கள் 'பட்டியலில் இவரும் ஒருவர்...
இவர் எழுத்தைப் பற்றி இவரே கூறியது ...
'நான் தீவிர இலக்கியமெல்லாம் எழுதாததால் என் புத்தகங்கள் சாதனை புரிகின்றன '
நாமும் .இவரைப் போன்று புகழ் பெற அவரே தந்த டிப்ஸ் ...
ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்க கூடியதாகவும் .அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப் படுத்தக் கூடிய தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் .எழுத சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் ,தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் .போலித் தனம் கூடாது .உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும் .எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப் 'கொடுத்து எழுதவே கூடாது .பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும் ,எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள் .
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் ,எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று !வெற்றி பெற்றால் மட்டும் போதாது ,அதை நாளுக்கு நாள் ,வாரத்துக்கு வாரம் ,மாதத்துக்கு மாதம் ,வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும் .மற்ற எல்லாமே உங்களை தேடி வரும் !
ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !
இவரின் கூற்றுப் படியே ...ஜோக்காளியும் முன்னேறி வருகிறான் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?
- உலகளந்த நம்பிThu Jul 17, 07:25:00 a.m.#ஜோக்காளியும் முன்னேறி வருகிறான் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?#
அதிலென்ன சந்தேகம்?
ஓடுங்கள்...ஓடிக்கொண்டே இருங்கள். உங்கள் பின்னால் நான் வந்துகொண்டே இருப்பேன்.
|
|
Tweet |
வணக்கம் ஜீ,,,,,,,,,
ReplyDeleteஅந்தம்மா உங்களைப் பார்க்கல போல,,,,,,,,
சரி சரி பிழைத்துப்போகட்டும் விடுங்க,,,,,,,,,
அவரின் வார்த்தைகள் உண்மை,
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்,
நன்றி.
அந்தம்மாவை எனக்கு தெரிகிறது .என்னை அவர்களுக்கு தெரியவில்லை...ஏன்னா அவங்க பிரபலமாச்சே :)
Deleteஜீ,,,,,,,,
ReplyDeleteஅந்த நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை
அப்படியா?
வேற எப்படியா :)
Deleteநகைக்சுவையுடன் ஒரு அருமையான வலைப்பூ வாசகரையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteஒரு திருத்தம் ,வாசகர் அல்ல ,பதிவர் :)
Deleteநீங்க கில்லாடி ஜி...
ReplyDeleteநீங்கதான் சொல்றீங்க .......................................:)
Deletenalla thakaval nandri
ReplyDeletevote +
உங்களின் நன்றியும் எனக்கு நல்ல தகவல்தான் :)
Deleteஅருமை நானும் முயற்ச்சித்து பார்க்கிறேன்..
ReplyDeleteநம்ம மொக்கைகளை படிக்க காசு கேட்காம வர்றாங்களேன்னு சந்தோசப் பட்டுகிட்டிருக்கேன் ,நீங்க என்னடானா .... :)
Deleteஜி... முன்னே செல்வது மிகுந்த சந்தோஷம்...
ReplyDeleteநாங்களும் உங்க பின்னே ஊர்ந்து வந்து கொண்டேயிருக்கிறோம்....
முயற்சி ஒரு நாள் திருவினையாகும்...
குமார் ஜி ,நீங்க தொடாத சிகரத்தையா நான் தொட்டுவிட்டேன்?
Deleteபிரித்தி செனாய் தரும் டிப்ஸ்கள் அருமை! ஜோக்ஸ் சிறப்பு! நன்றி!
ReplyDeleteநமக்கே தெரிந்த விசயம்தான் என்றாலும் ,ஆனாலும் பிரபலம் ஒருவர் சொல்ல வேண்டியிருக்கு :)
Deleteஎழுதுவது கடினமல்ல . தொடர்ந்து எழுதுவதுதன கடினம் .
ReplyDeleteஇதைத்தான் நானும்
தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
தொடர்ந்து பதிவு இடல்
என்று எழுதி இருந்தேன்.
ஆஹா ,உங்க வலைக்குறள் அருமை :)
Deleteமம்மி கூட இருக்கிறவரை எல்லாருமே டம்மி தானே பாஸ்!!! நான் அரசியல் பேசலைங்க:))))
ReplyDeleteடம்மிக்கள் என்றாலும் சேர்த்திருக்கும் சொத்து கொஞ்ச நஞ்சமா :)
Delete\\\ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !///
ReplyDeleteபார்த்தேன் பார்த்தேன் நன்றாகவே உள்ளது. கடைப் பிடிக்க முயற்சி செய்கிறேன்\\\ இவரின் கூற்றுப் படியே ...ஜோக்காளியும் முன்னேறி வருகிறான் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?///
ம்..ம்..ம் நீங்க பகவான் இல்லையா ஜி நம்பித் தானே ஆகணும். நகைச்சுவை மன்னர் ஆச்சே. நல்ல டிப்ஸ் எல்லாம் கூட தருகிறீர்கள் மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!
பார்த்தேன் பார்த்தேன் என்றால் ?இப்படி கலர் ஃபுல்லா இருக்கிற ஒருவர் சொன்னால்தானே ,நாலு பேருக்கு பார்க்க ...தப்பு தப்பு ....படிக்கத் தோன்றுகிறது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
நல்ல ஐடியா.... தொடருங்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்களும் ஐடியாவை தொடருங்கள் :)
Delete"இவரின் கூற்றுப் படியே ...ஜோக்காளியும் முன்னேறி வருகிறான் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?"
ReplyDeleteஜீ.. ஜோக்காளி முன்னேறி வருகிறான் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது பன்முனைத் திறன்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று தெரியுமோ.. ஒரு சர்கசில் இருக்கும் கோமாளிக்கு அந்த சர்கசில் இருக்கும் அத்தனைபேர் செய்யும் வித்தைகளை தானாய்ச் செய்ய்த் தெரியுமாம். எங்கோ படித்திருக்கிறேன்.
G0d Bless You
நீங்கள் படித்ததை கூகுளில் தேடிய போது கண்ணில் பட்டது .....63 வயதான சர்க்கஸ் கோமாளி துளசிதாஸ் சவுத்ரி ''கை விரல்கள் அசைக்க முடியாத காரணத்தால் உயரத்தில் நின்று செய்யும் பயிற்சிகள் செய்ய முடியாது. அப்படியும் சர்க்கஸ் கலைகளை கற்றுக் கொண்டேன். முழு நேரமும் சர்க்கசில் மூழ்கியிருந்த காரணத்தால் திருமணமும் செய்யவில்லை. மற்றவர்களை சிரிக்க வைப்பதாலோ என்னவோ, என் வாழ்க்கையில் சிரிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது,'' என்று சொல்லி இருக்கிறார் !
Deleteஅவருக்கு வாழ்க்கையில் சிரிப்பு இல்லாமல் போனது ,வருத்தம் அளிக்கும் விஷயம் ,எனக்கு இல்லாமல் போய்விட்டது நேரம்தான்:)
அட ஷெனாய் ப்ரீத்தி டிப்ஸ் அருமை! அனைத்தும் ரசித்தோம் ஜி...
ReplyDeleteஅருமைதான் ,ஆனால் ,தமிழில் எழுதி கடைந்தேற முடியுமா :)
Deleteப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தவர்கள் பெரிய பதிவர்களாக வாய்ப்புண்டு.
ReplyDeleteமுயன்று பார்க்கிறேன்.
வாய்ப்புண்டுன்னுதான் தோன்றுகிறது ,(அடுத்த கருத்து போட்டிருக்கும் ) நம்ம ஜெயதேவ் தாஸ் ஜியின் கருத்தைப் படித்தால் :)
DeleteI never expect anything great from women in the field of literature.
ReplyDeleteஉண்மைதான் ,இதுவரை நமக்கு ஒரே ஒரு கவிக்குயில் தான் கிடைத்திருக்கிறார் :)
Delete