19 July 2015

பெண்டாட்டியை இப்படி விட்டுக்கொடுக்கலாமா :)

-------------------------------------------------------------------------------------

  செவ்வாய் தோஷத்தால்  திருமணம்  தள்ளிப் போகுமா :)      
             '' என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
                  
                  ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''


புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?

            ''ரயில் கிளம்பியதில் இருந்து உங்க மனைவி தொதொன்னு 

பேசிக்கிட்டேதான் வர்றாங்க  ,எனக்கு புரியாத மொழியில் 

பேசுறனாலே தலை வலிக்குதே  சார் !''

          ''வலிக்காதா பின்னே ?புரியுற எனக்கே தலைவலிக்குதே !''

சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?

எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 

எந்த சிற்பியாலும் முடியவில்லை !



  1. கோவை ஆவிSat Jul 19, 11:53:00 a.m.
    தன்னை வடிக்கும் அளவிற்கு திறமை உடைய ஒரு சிற்பியை படைக்கத் தவறியது தெய்வத்தின் குற்றம் தான்!! :)




    1. ஆவி ஜி,நம்ம ரெண்டு பேரும் கண்ணாடி போட்டுக்கிட்டு இருப்பதால் தப்பித்தோம் ,இல்லையென்றால் தெய்வக் குற்றம் நம்ம கண்ணைக் குத்திடுமே :)

28 comments:

  1. Replies
    1. ஜவ்வாய் இழுக்கும் என் பதிவுகளையுமா :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    செவ்வாய்தோஷம் பாம்பு தோஷம் எல்லாம் வகுப்பது மனிதன்தான்.. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சென்ற வாரம் ,நாகர்கோவில் என்ற பெயர் வந்ததற்கு காரணமான நாகராஜா கோவிலுக்கு சென்றேன் .நூற்றுக்கணக்கான பாம்புச் சிலைகளின் மீது, பக்தர்கள் பாலை ஊற்றி மஞ்சள் பொடியைத் தூவி வணங்குவதைப் பார்க்க எனக்கு விநோதமாய் இருந்தது :)

      Delete
  3. சண்டே ஸ்பெஷல் மூன்றுமே அட்டகாசம் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசம்தான் ,யார் குற்றம்னு சொல்லலாமே :)

      Delete
    2. நான் ஒரு பெரியாரிஸ்ட்! உங்களுக்குத் தெரியும்னு நினைத்தேன் பாஸ்!

      Delete
  4. Replies
    1. tv சீரியல் போல இதுவும் ஒரு ஜவ்வு :)

      Delete
  5. எதையும் விட்டுப் பிடிக்கனும் சொல்வது போல்பெண்டாட்டியையும் விட்டுத்தான் பிடிக்கனுமோ..என்னவோ...???

    ReplyDelete
    Replies
    1. விட்டா பிடிக்க முடியுமா :)

      Delete
  6. ஜவ்வாய் தோஷம்
    தலை வலி, பாம்பு தோஷம்

    எல்லாம் ரசித்தேன்.
    நன்று சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. ஜவ்வாய் தோஷம் பாம்பு தோஷம் இல்லாத நிலையைப் பார்த்தால் எனக்கு சந்தோஷம் :)

      Delete
  7. ஜவ்வாய்.... தோஷம்! :))) ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. செவ்வாய் என்றால் வெறும் வாய் ,செவ்வாய் தோஷம் என்றால் மட்டும் ஜவ்வா :)

      Delete
  8. Replies
    1. பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் என்று சொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை குமார் ஜி :)

      Delete
  9. ஜவ்வாய் தோஷம் =Means?

    கடவுளே இல்லை என்பவர்கள் பத்தி, நம்புபவர்களில் கடவுளுக்கு வடிவமே இல்லை என்பவர்கள் 99.99%. அப்புறம் சிறப்பிக்கு என்ன வேலை?!!

    ReplyDelete
    Replies
    1. செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு திருமணம் 'ஜவ்வாய்; போய் கொண்டே இருக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள் :)

      வடிவம் இல்லையென்று உணர்ந்ததாய் தெரியவில்லை ,நடக்கும் மதச் சண்டைகளைப் பார்த்தால் !

      Delete
  10. ஜவ்வாய்...அஹ்ஹஹாஹ்ஹ்ஹ்

    எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க

    எந்த சிற்பியாலும் முடியவில்லை !// ஆவியின் பதில் ரசிக்க வைத்தது....உங்களின் பின்னூட்டம் ஹஹ்ஹஹ்..
    அது சரி கடவுள் எப்படித் தன்னை மிஞ்ச விடுவார் அதனால தானே நாம் இன்னும் நம்மை மீறிய சக்தியை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்...!! சரியா ஜி?!!

    ReplyDelete
    Replies
    1. சரி ,கடவுள் மிஞ்ச விட வேண்டாம் ,முட்டாள் மனிதர்களை புரிய வைக்கவாவது ஏதாவது செய்ய வேண்டாமா :)

      Delete
  11. ஜவ்வாய். அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஜவ்வாய் அருமை ,செவ்வாய் வெறுமையோ :)

      Delete
  12. ரசிக்கக்கூடிய ஜவ்வுதான்!

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயதில் கையில் வாட்சு மாடலில் கட்டிக் கொண்ட ஜவ்வு மிட்டாய் போல, இதையும் ரசித்தீர்களா :)

      Delete
  13. ஜவ்வாய் தோஷம்! ரசித்தேன்! சிற்பியின் குற்றமும் ஆவியின் பதிலும் அதற்கு உங்கள் கமெண்ட்டும் ரசிக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்களாவது சொல்லுங்களேன் ,யார் குற்றம் என்று :)

      Delete
  14. Mythily kasthuri renganThu Jul 23, 10:29:00 p.m.
    நான் ஒரு பெரியாரிஸ்ட்! உங்களுக்குத் தெரியும்னு நினைத்தேன் பாஸ்!
    Reply>>>
    ஒரு பெரியாரிஸ்ட்டுக்கு இன்னொரு பெரியாரிஸ்ட்டை தெரியாமல் போகுமா ?அதுவும் தெரியும்,மருங்காபுரி இளவரசி என்பதும் தெரியும் :)

    எந்த சிற்பியும் வடிக்க முடியாததற்கு காரணம் ....இருந்தால் அல்லவா வடிக்க முடியும் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் :)

    ReplyDelete