16 July 2015

புருசன் மேல் இவ்வளவு நம்பிக்கைக் கூடாது :)


                      ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் நாய் 

மாதிரி கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட 

வாழ்ந்து கிட்டிருக்கே ?''

                     ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற   

நம்பிக்கையிலேதான் !


புருசன் வேணாம் ,வேலைக்காரி வேணும் !

           ''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''

           ''வேலைக்காரி வேலைக்கு வராத நாள்லே ருந்துதான் !''

             ''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''

            ''வேற வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதான் !''


உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !

இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ தெரியவில்லை ...
 என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !
  1. Chokkan SubramanianWed Jul 16, 08:36:00 a.m.
    குறைக்கிற நாய் கடிக்காது தான். ஆனா குறைத்துக்கொண்டே இருக்கும் நாய் மீது வெறுப்பு ஏற்பட்டு, கல்லால் அடித்தால் (பூரிக்கட்டையால் அடித்தால்)!!!!!

    எழ முடியவில்லையா - பார்த்து காலு ஓடைஞ்சிருக்கப்போகுது...
    1. அப்போதும் ஓடிப் போகுமே தவிர கடிக்காது !

      சிறகே முளைச்ச பிறகு கால் இருந்தாலென்ன ,உடைஞ்சாலென்ன?

26 comments:

  1. நல்ல நம்பிக்கை தான்...

    இந்த வேலைக்காரி வேலையை காலி பண்ண வழியில்லை... அவளா போனா தான்

    கண்ணை மறைத்த பின் என்ன தெரியும் சரி தான் ஹிஹிஹி...

    1

    ReplyDelete
    Replies
    1. இந்த நம்பிக்கைதானே வாழ்க்கை :)

      அவளா எங்கே போறது ,அதான்,அவரையும் சேர்த்து தலை முழுகியாச்சே:)

      காமம் கண்ணை மறைக்கும்னு சரிதானோ :)

      Delete
  2. நகைப்பணி தொடர்க
    தம +

    ReplyDelete
    Replies
    1. நாளும் கிழமையும் தொடரும் நகைப் பணி :)

      Delete
  3. Replies
    1. தமிழக சுற்றுப் பயணம் முடிந்ததா :)

      Delete
  4. அனைத்தும் அருமை. நாய் நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் தைரியமாய் நாயை எதிர் கொள்ளலாமா :)

      Delete
  5. Replies
    1. DD யின் தெய்வீகச் சிரிப்புக்கு நன்றி :)

      Delete
  6. வணக்கம்,
    1 க்காக, த.ம 5
    சூப்பர்,
    வாழ்த்துக்கள் நன்றி,

    ReplyDelete
    Replies
    1. கணவன்மார்களை பஞ்சர் செய்தாலே சந்தோஷம்தானா:)

      Delete
  7. குரைக்கிற நாய் கடிக்காது! சரியாத்தான் சொல்றாங்க! ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. அடிக்கிற கைதான் அணைக்கும் ,இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் :)

      Delete
  8. cat walk கவிதை சூப்பர் ஜீ...

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. உண்மையில், பூனை நடையை நான் ரசித்து பார்த்ததில்லை :)

      Delete
  9. ரசித்தேன். ரசித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முத்தேனுக்கும் நன்றி :)

      Delete
  10. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நாயும் பூனையும் உங்களுக்கு பிடித்ததா :)

      Delete
  11. அப்போ , கடிக்கிற நாய் குரைக்காதா !

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொன்னால் குரைக்கிற நாய் கடிக்காது ,கடிக்கிற நாய் குரைக்காது ,ஏன்னா ,ஒரே நேரத்தில் ரெண்டு வேலையை நாயால் செய்ய முடியாதே :)

      Delete
  12. ஹ ஹ ஹா

    புலவர் ஐயா முந்திக்கொண்டார்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இனிமேலாவது புலவர் அய்யாவை முந்த விடாதீங்க :)

      Delete

  13. நாய் மாதிரி கத்திகிட்டே இருக்காரே ,
    எப்படி அவர்கூட வாழ்ந்து கிட்டிருக்கே?
    குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற - தமிழ்
    கருத்தின் நம்பிக்கையிலே தான்! - அப்ப
    புருசன் மேல நம்பிக்கை இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை இல்லாமல் அவர் கூட வாழ்த்துக் கொண்டிருக்கிறார் :)

      Delete