28 July 2015

புதுமணத் தம்பதியர் சிறப்பாய் நடத்தும் 'குடி'த் தனம் :)

இந்திய வல்லரசை கனவு காணச் சொன்ன ,அய்யா அப்துல் கலாம் மறைவுக்கு  ஆழ்ந்த அனுதாபங்கள் :(

---------------------------------------------------------------------------------

அர்த்தம் தெரியாத வார்த்தையை சொல்லலாமா :)
             ''நான் சொன்ன வார்த்தையால் ,எல்லோரும் உன்னிடம்  துக்கம் விசாரிக்கிறாங்களா ,நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் ?''
           ''நான்  அபார்ட்மெண்ட்டுக்கு  போனதை ,அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்கீங்களே !''

சீக்கிரமே இந்த நிலை வந்து விடும் !

               ''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
            ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

        'யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
          ''எது ?''
            'நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ராவா ஒரே மூச்சிலே குடிப்பான்னு ஒருவார்த்தைகூட ஏன் சொல்லலே !''


 கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !

  1. -தோழன் மபா, தமிழன் வீதிMon Jul 28, 04:54:00 p.m.
    செல்லில் வரும் சொல்லே கேட்கிறது என்றால்.....அவர் 'செல்' 'வாக்கான ஆசாமிதான்?!.




    1. ஓ ..ஹாட் லைன் வச்சுகிட்டு இருக்காரோ ?

      1. கும்மாச்சிTue Jul 29, 12:54:00 p.m.
        என்னது க்வாட்டர் அடிக்கும் பெண்ணா? சரிதான் அவருடைய ஹாபுக்கு பங்குக்கு வந்துட்டாப்ல........




        1. பெட்டர் ஹாப்புன்னா சும்மாவா ?

      2. கோவை ஆவிTue Jul 29, 03:35:00 p.m.
        அவங்க தான் உண்மையிலேயே பெட்டர் "ஹாப்".. ஹஹஹா ;)




        1. ஹௌஸ் பாஸை அப்படித்தானே அழைக்கணும் ?

33 comments:

  1. 1. ஹஹஹஹ்ஹ...
    3. பின்னூட்டங்கள் அருமை!

    //உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
    ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''// ஜி இது வெகு உண்மை ஜி! (கீதா: எனக்கு காது கேட்கும் திறன் ஹெரிடிட்டரி காரணத்தினால் குறைவு. ஹியரிங்க் எய்ட் போட்டாலும் சில சமயம் ஒருகுழுவில் பலர் பேசும் போது பல சப்தங்களின் இடையே கொஞ்சம் கடினம் க்ளியராகக் கேட்காது. ஆனால் ஃபோனில் கேட்கும்...ஹியரிங்க் எய்ட் இல்லாமலேயே கேட்கும் ஜி!)


    ReplyDelete
    Replies
    1. அய்யா அப்துல் கலாமின் மறைவு குறித்து ஒரு தனிப்பதிவு தந்திருக்கலாமோ.
      கனவு காண சொல்லி கனவு கண்டவர்.
      அன்னாரது இழப்பு இந்த நாட்டை நேசிக்கும் இந்திய குடும்பங்களுக்கெல்லாம் பேரிழப்பே.

      Delete
    2. *ஹெரிடிட்டரி *
      நடக்கப் போவதைமுன் கூட்டி சொல்பவரை தீர்க்கதரிசி என்பார்கள் ,ஏற்கனவே இருப்பதை கற்பனை செய்யும் என்னை என்னவென்று சொல்வீர்கள் ?

      Delete
    3. அன்பே சிவம் ஜி .
      தனி பதிவு போடவில்லை என்றாலும் ,இன்றைய முதல் வரியாக ,அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் :(

      Delete
  2. தண்ணி அடிச்சா Bitter Half!

    ReplyDelete
    Replies
    1. தம்பதிகள் இருவருமே அடித்தால் Bitter full லா :)

      Delete
  3. அருமையான குவாட்டர் ஜோடிபோல!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
    Replies
    1. குவாட்டரிலுமா ஜோடியிருக்கு :)

      Delete
  4. Replies
    1. உங்க 'ஃ புல்'லுக்கு நன்றி :)

      Delete
  5. ஹா...ஹா...ஹா...

    மறுபடியும் ஹா ஹா ஹா... இந்நிலை நிஜம்!

    ஹா...ஹா...ஹா... சரி ஜோடி! குடி ஜோடி!

    நாமும் இரும்புக்கை மாயாவி போல மாறி விடுவோமோ!

    ReplyDelete
    Replies
    1. போயும் போயும் கொசுவை அடிக்க இரும்புக்கை தேவை படுகிறது :)

      Delete
  6. அனைத்தும் அருமை. செல்போன் மிகவும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. செல்போன் எல்லோருக்கும் பிடிக்கிறதே :)

      Delete
  7. Replies
    1. அபார்சனுக்கு போன பெண்ணைத்தானே:)

      Delete
  8. தங்களின் ஜோக்குகளை வாசித்துப் பெற்ற மகிழ்ச்சிக்கிடையே அறிவியல் அறிஞர் அப்துல்கலாமின் மறைவு மனதில் வருத்தத்தைத் நிரப்புகிறது. கனவுகளை நனவுகளாக்கிய அந்தப் பெருந்தகையின் நினைவுகளை என்றென்றும் போற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. தன்னுடைய உதவியாளரை கடைசி நிமிடத்தில் கூட Funny man என்று
      நகைச்சுவையாக கூறி மறைந்த மேதைக்கு ஜோக்காளியின் சிரம் தாழ்ந்த அஞ்சலி :(

      Delete
  9. அர்த்தம் தெரியாம பேசுவதில் எவ்வளவு பிரச்சனைகள்?

    ReplyDelete
    Replies
    1. சிலர் அர்த்தம் தெரிந்து பேசிகூட கழுத்தை அறுக்கிறார்களே :)

      Delete
  10. ”நான் அபார்ட்மெண்ட்டுன்னுதான் சொன்னேன்...ஓ மாமியாதான் அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்காங்க... ஏ காது கேக்காதா...“
    “அவுங்களும் அதேதான் சொல்றாங்க...”


    “ அப்ப...செல்லும் இடமெல்லாம் சிறப்புன்னு சொல்லுங்க...!“


    “நா... ஒரே பொய்யச் சொல்லி ஆயிரம் கல்யாணம் நடத்தினவனாக்கும்...!“


    ஆண் கொசுதான் கடிக்காதில்ல... அங்கேயும் பெண் கொசுதான் கடிக்கிறத பாத்திங்களா...? சும்ம விடக் கூடாது...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. மருமகள் மேல் உள்ள பாசத்தால் இப்படி சொல்லியிருப்பார்கள் :)

      செல்லும் இடமெல்லாம் அவர்கள் சிறப்பாய் சாப்பிடட்டும் ,நமக்கு ஊறுகாய் போதும் :)

      வேறு வழியில்லை ,இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதுதான் :)

      Delete
  11. சொல்லும் ஜோக்கெல்லாம் அருமை....

    ReplyDelete
    Replies
    1. வெளியே சொல்லாத ஜோக் இன்னும் அருமையாய் இருக்குமோ :)

      Delete
  12. எல்லாமே சிற(ரி)ப்பு ஜி

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு வருகை தந்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி :)

      Delete
  13. அசத்தல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க டைப் கமெண்ட்டை ,rmn ஜி முன்னாடியே போட்டுட்டார் போலிருக்கே :)

      Delete
  14. குடி பொருத்தமான ஜோடி!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தானே அய்யா சமுதாயம் சீரழிஞ்சு கிடக்கு :)

      Delete
  15. 'பெட்டர் ஹாப்'பைத் தானே:)

    ReplyDelete
  16. செல்போன்லே பேசுறது காதுக்குக் கேட்கலையா?
    சீக்கிரமே இந்த நிலை வந்து விடும்!
    அப்ப
    காதை வெட்டி எறியவா
    அல்லது
    செல்போனை உடைத்து நொருக்கவா


    டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete
  17. நீங்க சொன்ன இரண்டு காரியத்தையும் செய்யாமல் விட்டாலே போதும் :)

    ReplyDelete