15 July 2015

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி நிச்சயம் தானா :)

            ''அழகிப் போட்டியில் லிப் ஸ்டிக் பூசுன அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே  உங்களாலே சொல்ல முடிந்தது ?''

          ''வாய் 'மை'யே ஜெயிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கே !''


அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாட்சி வேணும் !

              'அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு 

அக்னாலேஜ்மென்ட் கேட்குறீங்க ?''

             ''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு யாரும்  

சொல்லக்கூடாதில்லே ?''


பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

எந்த விசேசம் என்றாலும் ...

பியூட்டி பார்லருக்கு சென்று 

ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 

அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில் 

அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு 

வருகிறது ...

பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !

  1. அருணா செல்வம்Tue Jul 15, 06:17:00 a.m.
    ஜட்ஜின் கன்னத்தில் வாய்“மை“ இருந்ததோன்னு நெனச்சிட்டேன்....




    1. அப்படி வெளிப்படையா செய்ஞ்சா ,ஜெயிச்சது செல்லாதுன்னு எல்லோரும் போர்க்கொடி தூக்கிடுவாங்களே !

11 comments:

  1. பெண் தலைவிரிக் கோலம் ரசிக்கும் படியாவா இருக்கு :)

    ReplyDelete
  2. வணக்கம்,
    பாட்டி அந்தகாலம்,
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாட்டி போல் காட்சி தந்தது அந்த காலமா :)

      Delete
  3. ஹஹஹஹ் செம மை!!! ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. இந்த மை யாரையும் கவிழ்த்துவிடும் :)

      Delete
  4. நேர்மையில்லை என்பது உண்மைதானே..!! இப்போது..வாய்மைதானே வென்று கொண்டு இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. காரியம் ஆகணும்னா இப்போ இந்த மையைதான் பயன் படுத்தறாங்க :)

      Delete
  5. அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies

    1. வெளியூர் சென்று வந்ததால் அருமைக்கு நன்றி கூற உடன் முடியவில்லை , மன்னிக்கவேண்டுகிறான் இந்த 'பிஸி'மேன்:)

      Delete
  6. வாய்மையே வெல்லும்! ஹாஹாஹா! சூப்பர்! இதை படிச்சதும் எனக்கு ஓர் ஜோக் தோணுது! நாளைக்கு பதிவு தேத்தனுமே! அதனால இங்கே இல்லை! நன்றி! ஜோக் கிடைச்சதுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்க ஜோக்கை காண நானும் ஆவலோடிருக்கிறேன் :)

      Delete