20 July 2015

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் :)

-------------------------------------------------------------------

நமது சுதந்திரம் 'அப்படி 'வந்ததுதானா ?

வட இந்திய டூர் - பாகம் 6
பள்ளிப் பாடங்களில் படித்த ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை....
சமீபத்தில்(சிலநாட்களுக்கு முன் &அருகிலும் )சென்று பார்த்தேன்... இது பொற்கோவில் அருகிலேயே ,நடக்கும் தூரத்திலேயே உள்ளது. தற்போது நினைவிடமாய் மாறியிருக்கும் அந்த இடம்...இதோ ...

இந்த வாசலைத்தாண்டி  உள்ளே சென்றால் ,கண் முன்னே தெரிகிறது ..பசுமையாய் தோன்றும் தோட்டத்தின் நடுவே தியாகிகள் நினைவுத் தூண் !




இந்த தூணுக்கு பின்னால் இருக்கும் நிஜமான சோக வரலாறு .....
1919ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய  கொடுமையான 'ரௌலட் 'சட்டத்தை  எதிர்த்து சுமார் இருபதாயிரம் மக்கள் கூடிஇருக்கிறார்கள் ...
இதைக்கூட சகித்துக் கொள்ளமுடியாத ஜெனரல் டயர் சுடும் உத்தரவை பிறப்பித்தவுடன் ....
1650 குண்டுகள் சீறிப் பாய்கின்றன ...
மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் ...
வெளியேற இருப்பதோ ஒரே வாசல் ...
வேறு வழியின்றி உயிர்ப் பிழைக்க அங்கிருந்த ....
இந்த கிணற்றில்தான் விழுந்து உயிர் துறந்துள்ளார்கள்...
இந்த படுகொலை சம்பவத்தில் இறந்தோர் எண்ணிக்கை 379என்றும் ,காயப்பட்டவர்கள்  1500 என்று ஆவணங்கள் சொன்னாலும் .சிகிச்சை  அளித்த ஆங்கிலேய மருத்துவரே இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று சொல்லியுள்ளார் ...
    அந்த கொடூர சம்பவத்தின் எச்சங்களாக குண்டு பாய்ந்த இடங்கள் இன்றும் கட்டம் கட்டி சுவற்றில் ...இதோ ...

 இந்த இடத்தைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த கேள்வி ...கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிணற்றுப் படம் மட்டும் கூகுளில் சுட்டது !

  1. நிச்சயமாய் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தல்ல இந்த சுதந்திரம் ஏராளமான உயிரிழப்புகளின் பின்னேயே பெறப்பட்டது..... காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தின் முன்னும் பின்னும் புதைக்கப்பட்ட உயிர்கள் பல லட்ச்சம்




    1. பகத் சிங் ,சுகதேவ் ,நேதாஜி ,உத்தம்சிங் போன்றவர்கள் சென்றது வன்முறை பாதையென்று அவர்களின் தேசபக்தியை குறைத்து மதிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை !
    2. --------------------------------------------------------------------------------------

      இது சந்தேகம் நியாயமானதுதானே ?
      ''அசைவம் சாப்பிட்டாலும்  ,DVD பார்த்தாலும்  தப்பில்லே ,உனக்கென்ன சந்தேகம் ?''
      '' பிறகேன் ,அதை எல்லாம் ரகசியமா  கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்க ?''



      நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் !

                   ''கல்யாணத்தில் எடுத்த  போட்டோக்களில் எல்லாம்  சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
                  ''சுற்றி நிக்கிறது நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''

      எங்கே வளரணுமோ அங்கே ?

      வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
      வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
      உள்ளங்கை முழுவதும் முடி !


25 comments:

  1. Replies
    1. கருப்பு நிற கேரி பேக் அபுதாபியிலும் உண்டா :)

      Delete
  2. Replies
    1. மூட் அவுட்டான புது மாப்பிள்ளையை நினைச்சு சிரிக்கிறீங்க போலிருக்கே :)

      Delete
  3. ஜாலியன் வாலாபாக் எத்தனை முறை வாசித்தாலும் மனதை மிகவும் வருத்தும் வேதனை மிக்க ஒன்று...

    ReplyDelete
    Replies
    1. வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடூர நிகழ்வை எப்படி மறக்க இயலும் :)

      Delete
  4. வணக்கம்,
    இப்போ வரலாறும் கலந்துவிட்டதா?
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரலாறு ரொம்ப முக்கியம் இல்லையா :)

      Delete
  5. முடி எங்கே வளரணுமோ
    அங்கே (வழுக்கைத் தலையில)
    கையில தைலத்தை விட்டே
    தேய்த்ததில் கிட்டிய பலன்
    உள்ளங்கை முழுவதும் முடியாச்சே!

    ReplyDelete
    Replies
    1. கையிலே காசு வாயிலே தோசை என்பார் ,இங்கே கைமேல் பலன் :)

      Delete
  6. வணக்கம்
    ஜி

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் அதிலும் வழுக்கைத்தலை... காமெடி கலக்கல்.... த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. 'எரும மாட்டினைத்' தேய்த்தாலும் இந்த பலன் கிடைக்காது :)

      Delete
  7. மூட் அவுட் மாப்பிள்ளை ஜோக் கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நடிகையின் டைவர்ச்சை டீல் பண்ண ஒரு வக்கீல் போதாது போலிருக்கு :)

      Delete
  8. ஜெனரல் டயர் துப்பாக்கியால் சுட்ட இடத்தை நீங்கள் கூகுளில் இருந்து சுட்டிருக்கிறீர்கள்! பகத் சிங் ,சுகதேவ் ,நேதாஜி ,உத்தம்சிங் போன்றவர்கள் சென்றது வன்முறை பாதையென்று அவர்களின் தேசபக்தியை குறைத்து மதிப்பிடப்படுவதாக யார் சொன்னது? மக்கள் மனதில் அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.

    கருப்பு நிறக்கவரில் - ஹா...ஹா...ஹா...

    ஹா...ஹா...ஹா... அக்கீளின் கவுனின் நிறமும் கருப்பு!

    உள்ளங்கையில் முடி - ஹா...ஹா...ஹா...

    பதிவை இப்போதெல்லாம் ப்ளஸ்ஸில் ஷேர் செய்வதில்லையோ..


    ReplyDelete
    Replies
    1. ச்சே... கூகுளும் என் அவசரமும்! அக்கீளின் அல்ல வக்கீலின்!!!!

      Delete
    2. வேற நிற பையில் போட்டாலும் பரவாயில்லை ,கருப்பு நிறம் ,எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பல மொழியை நினைவு படுத்துதே :)
      வக்கீல் கருப்பு நிற கவுனும் இதைதான் சொல்லுதோ :)

      Delete
  9. எல்லாவற்றுக்கும் வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. முக்கியம் என்பதால்தான் அதை திரித்துக் கூட ஆரம்பித்து உள்ளார்கள் :)

      Delete
  10. நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நினைச்சு எழுதுறேன் :)

      Delete
  11. ஜாலியன்வாலா பாக் - மனதை விட்டு அகலாத சோகம்....

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. அந்த கிணற்றில் இருந்து மக்களின் கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது :(

      Delete
  12. சுதந்திரத்துக்கு உசிர குடுத்தவங்க, அவங்க குடும்பமெல்லாம் எங்கேயிருக்கோ தெரியலை, ஆனா கருணாநிதி அவரது குடும்பம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி இவங்க எல்லாம் பணத்திலேயே படுத்து புரளுறாங்க.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே உயிரைக் கொடுத்தா ,கிடைத்த சுதந்திரத்தை யார் அனுபவிப்பது :)

      Delete