6 July 2015

காதலிக்கு ஆப்பிள் போன்ற கன்னங்களா:)

----------------------------------------------------------------------------

புளிப்பா திங்கணும்னு எப்போ தோணும் :)
               ''சீக்கிரம் காதலி கழுத்துலே தாலியைக் கட்டினா நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
               ''சுண்டல்லே இருக்கிற மாங்காயை மட்டும் தின்னுட்டு ,புளிப்பே இல்லைன்னு சொல்றாளே ,உன் காதலி !''

வட இந்திய டூர் - பாகம் 4

டெல்லியில் இருந்து கிளம்பி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலஹாபாத் போகலாம் என்றார்கள் .அங்கே சென்று நாங்கள் தங்கிய இடம் இதுதான் ...
  
சத்திரம் என்று பெயரே தவிர நவீன வசதிகளுடன் அறைகள் இருந்தன ,நம்ம ஊர் இட்லி ,வடை ,பொங்கல் ,சாப்பாட்டையும் செய்து தந்து அசத்தினார்கள் ...போர்டை உற்று பாருங்கள் ,இது ஆரம்பித்த ஆண்டு 1891,நூறாண்டைக்கடந்தும் அங்கே நல்ல சேவை செய்துவரும் நகரத்தார் வாழ்க இன்னும் பல நூறாண்டு !

அலஹாபாத்தில் ,மூன்று நதிகள் சங்கமமாகும் திரிவேணி சங்கமம் ,அவசியம் பார்க்க வேண்டிய இடம் என்றார்கள் !புறப் பட்டோம் ...
இதோ தூரத்தில் தீவு போல் தெரிகிறதே,அதுக்கு பக்கத்தில் தான் ஆறுகள் வந்து சேர்ந்து  திரிவேணி சங்கமம்  ஆகிறது ...

 படகில் ஏறித்தான் அங்கே செல்ல வேண்டியுள்ளது .அங்கே ..
இரண்டு பக்கம் இருந்து இரு நதிகள்ஓடிவந்து கலப்பது தெரிந்தது ,இன்னொரு நதியைக் காணலியே என்றேன் ...கங்கா ,யமுனா ஆகிய இரு நதிகள் கலப்பதுதான் கண்ணுக்கு தெரியும் ,அடியில் இருந்து சரஸ்வதி நதி  வந்து கலப்பதாக ஐதீகம் என்றார்கள் .இம்மூன்று நதிகள் கலக்கும் புனிதமான இடத்தில் நீராடினால் ...செய்த பாவம் எல்லாம் நதி நீரில் கலந்து ஓடிவிடும் என்றும் சொன்னார்கள் ...
நான் நீராட முடியாது என்றேன் .ஏன் என்று ஒருமித்த குரலில் கேட்டார்கள் .நான்தான் இதுவரையிலும் ஒரு பாவமும் செய்யவில்லையே என்றேன்!பரவாயில்லை ,நீராடி உடல் அழுக்கையாவது போக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள் .இது எனக்கு நியாயமாகப் பட்டது !
இந்த இடத்தில் ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும் !நாங்கள் அங்கே சென்ற நேரம் உச்சபட்ச வெயில் காலம் ,காலை எட்டு மணிக்கே ஆற்றோர மணலில் கால் வைக்க  முடிய வில்லை  ,அவ்வளவு கொதித்தது !
வைரமுத்து ஒரு பாடலில்,தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது என்று எழுதி இருப்பார்(அவர் எழுதி இருப்பது வேறொரு உணர்ச்சியை உணர்த்த )..அந்த வரிகளின் நேரடி அர்த்தத்தை அங்கேதான் உணர்ந்தேன் ...வெயில் கொடுமையை தாங்க முடியாமல் கசகசவென்று வியர்த்திருந்ததால் ஆசை தீர நீராடி ...கண்ணுக்கு தெரியாத  நதி கலக்கும் இடத்தில் ,கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் கரைத்துவிட்டு.. கரையேறி வந்திருக்கிறேன்  ..இப்போ.. நான் ஒரு பாவமும் அறியாதவன் என்பதை  நீங்க தெரிஞ்சிக்கிட்டா சரி !
      அடுத்து ,அந்த ஊரில் நாங்கள் சென்ற இடம் இதோ இதுதான் ....




இதுதான் ஆனந்த பவன் , இது வசந்த பவன்போல் ஹோட்டல் கிடையாது  ...நமது முன்னாள் பிரதமர்கள் நேரு ,இந்திராகாந்தி பிறந்து வளர்ந்த வீடுதான் இது !தற்போது அருங்காட்சியகம் ஆக்கப் பட்டு,பச்சைப் பசேல் புல்வெளியுடன் அருமையாக பராமரிக்கப் பட்டு வருகிறது ,இந்த வளாகத்தில்ஒரு பிளானடோரியமும் உள்ளது !
அரண்மனைப் போன்ற வீட்டில் பிறந்த நம்ம நேரு மாமா ,நாட்டுச் சுதந்திரத்திற்காக  பாடுபட்டு ஒன்பதாண்டு காலம் சிறையில் இருந்தார் ,பரம்பரை சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார் ,,இன்றைய அரசியல்வாதிகளும் சிறைக்கு செல்கிறார்கள் ..வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு கூறப் பட்டு !
       

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?

        ''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ 

ஏன் வரலே ?''
      
            ''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண 

மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா 

வச்சிருக்கேனே !''


 பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !
 ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !


  1. போட்டோவில் திரிவேணி சங்கமம் இடத்தைப் பார்த்தால் 20% பாவமாவது போவுமா? இல்லை, நீங்கள் குளித்ததைப் படித்ததினால் ஒரு 10%? சரி, விடுங்க... தொடர்ந்து படிக்கலாம்.

    தினசிரி ஜோக்கையும் விடாமல் இதில் சேர்த்து விட்டீர்களே...




    1. நான் குளிச்சதை நேரில் பார்த்து இருந்தால் உங்கள் பாவமெல்லாம் கரைந்து போயிருக்கும் ,மற்றவங்களையும் பார்த்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்னு நீங்களே யோசிச்சுக்குங்க !

      தினசிரி ஜோக் ?இருக்கு அள்ளி முடியுறேன் !

27 comments:

  1. அழுக்குத் தீரக் குளித்த திரிவேணி சங்கமம் பற்றி படங்களுடன் பகிர்வு அருமை.
    நகைச்சுவைகள் சுவையாய்...

    ReplyDelete
    Replies
    1. என் உடம்பு சுத்தமாச்சு ,திரிவேணி சங்கமம் .........:)

      Delete
  2. உடல் அழுக்கை போக்கிக் கொள்ள நீராடிய நல்லவர் வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. உடல் அழுக்காவது உண்டுன்னு உணர்ந்த நல்லவர் வாழ்க ,வாழ்க :)

      Delete
  3. ரசித்தேன் நண்பரே
    தமம +1

    ReplyDelete
    Replies
    1. மாயா மாயாவைதானே:)

      Delete
  4. அல்வா கொடுத்து விட்டாரோ...?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு அல்வா சாப்பிட்டவங்க கவலைப் படட்டும் :)

      Delete
  5. திரிவேணி சங்கமம் - அங்கே குளிப்பதில் ஒரு ஆனந்தம். பாபம் போகிறதோ இல்லையோ எது பற்றி நமக்கு எதற்கு கவலை....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அதானே ,பாவம் செய்தவன்தானே அதைப் பற்றி யோசிக்கணும் :)

      Delete
  6. ''சுண்டல்லே இருக்கிற தேங்காயை மட்டும் தின்னுட்டு, புளிப்பே இல்லைன்னு தான் சொல்வாளே ,உன் காதலி!''

    ReplyDelete
    Replies
    1. நான்தான் தப்பா சொல்லிட்டேனோ என்று பார்க்க வச்சீட்டிங்களே :)

      Delete
  7. படித்தேன், ரசித்தேன், வாக்கையும் அளித்தேன்.

    :))))))))

    ReplyDelete
    Replies
    1. மூன்று தேனில் மூன்றாம் தேனை ரசித்துக் குடித்தேன் :)

      Delete
  8. வணக்கம் ஜீ,,,,,,,,,,
    கலக்ககல் அனைத்தும்,

    ReplyDelete
    Replies
    1. கலக்கல்தான் ,ஆனால் என் மறுமொழி ரயில் ,ஒரு நாள் தாமதமாய் ஓடிகிட்டே இருக்கே :)

      Delete
  9. ஆப்பில் போன்ற கன்னத்தில் ஸ்டீக்கர் ஒட்டியிருக்குங்களா...? அதப் பார்த்து.. இயற்கைய.... செயற்கையான்னு தெரியத்தான் கேட்டேனுங்க....

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சுகிட்டு 'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் 'னு பாடப் போறீங்களா :)

      Delete
  10. ஹஹஹ அடடா...மாங்கால புளிப்பு இல்லைனா இப்படியா...அர்த்தம்...அது சாதாரணம் இல்லையா ?!!!! அபடின்னா சீக்கிரமே கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ணுங்கப்பா...

    கல்யாணங்களும் செருப்புகள் மாறுதலும்/காணாமல் போதலும் பிரிக்க முடியாத ஒன்றோ....

    இப்பத்தான் ஆப்பிள் கன்னத்துக்கும் மெழுகு அப்பி பள பளன்னு வைச்சுக்கறாங்களே....ரோஸ் கலர் கூட

    ReplyDelete
    Replies
    1. வயசுக் கோளாறு ,அதான் வாயும் வயுறுமா :)

      அதைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்பதும் :)

      மனுசனை ஏமாற்ற எப்படி எல்லாம் வேஷம் போடுறாங்க :)

      Delete
  11. Replies
    1. பளா பளா ஆப்பிள்தானே:)

      Delete
  12. //ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !//
    பூச்சு இரண்டுக்கும் காமன்!
    அலஹாபாத்தில் மூன்றாண்டுகள் இருந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. பூச்சுக்கும் காமனுக்கும் தொடர்பு இருக்குமோ :)

      அடிக்கடி திரிவேணி குளியல் போட்டு இருப்பீங்களே ,உங்க மூன்று தலைமுறைக்கும் பாவம் சேராதுன்னு படுது :)

      Delete
  13. வணக்கம்
    ஜி
    காதலின் அன்பினால் புளிப்புக்கூட இனிப்பாகத்தான் இருக்கும்....ஜி.... மற்றவைகளை இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இனிக்கட்டும்,தாலி கட்டின பிறகு :)

      Delete