----------------------------------------------------------------------------------
வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் '!!!
'' கண் ஆபரேசன் செய்த டாக்டர் நீங்களே என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
''முதல்லே யாரை பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''பொங்கல்னா இதுதான் பொங்'கல் ' ?
''இதுவரைக்கும் நீ இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
''அவ்வளவு டேஸ்ட்டா?''
''அட நீ வேற ...பொங்கல்லே அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''
''அவ்வளவு டேஸ்ட்டா?''
''அட நீ வேற ...பொங்கல்லே அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''
கைத்தறி புடவைய வாங்கி கொடுத்து சகாயம் ஐயா பேர சொல்லி தப்பிக்க பார்த்தா இப்படித்தான், கல்லை போட்டு பொங்கிட்டாங்க!
ReplyDeleteரொம்ப ரிஸ்க் எடுத்து வாங்கித் தந்த பொங்கல் புடவையோ ?
''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி எடுத்தே ?''
''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''
தலைவர் பொண்னோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே !
''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''
டேய். மாடு பின்னால ஓடறேன்னுட்டு மாட்டிக்கிடாதடான்னு அவங்க அம்மா சொன்னது சட்டுன்னு ஞாபகம் வந்திருச்சாம்.
கோபாலன்
ReplyDeleteகோபாலன்
|
|
Tweet |
ஆபரேஷனுக்கு முன்னால நளினாவைப்
ReplyDeleteபார்த்துப் பார்த்துக் கண்ணை நல்லா
கூல் பண்ணி இருக்கார் போல...
டாக்டர் நிச்சயம் எக்ஸ்ரா
பீஸ் போடுவார்னு நினைக்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
டாக்டர் ஃபீசைக் கூட கொடுத்து விடுவார் ,பாரியாள் கொடுக்கப் போற மரியாதையை எப்படி சமாளிக்கப் போறாரோ :)
Deleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதம 1
இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
Deleteஇனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
Delete.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
Deleteவிவரமான ஆளா இருப்பார் போல - அதான் நளினாவை பார்க்கணும்னு சொல்லி இருக்காரு!
ReplyDeleteரசித்தேன்.
த.ம. +1
விவரம் கெட்ட ஆளுன்னு சொல்லுங்க ,இதையெல்லாமா வெளியே சொல்லிக் கொண்டிருப்பார் :)
Deleteஈன்று வெளியாகி இருக்கும் ஜோக்ஸ் எல்லாமே முந்தைய வருடங்களில் வெளியானவை போலிருக்கிறதே(except the first one.)
ReplyDeleteஅதை குறிப்பிட்டு உள்ளேனே ,தினசரி பதிவு கொஞ்சம் நீளமாய் போடக்கூடாதா என்று நலம் விரும்பிகள் பலரும் கேட்டதால் ,இந்த பாணி! பூரிக்கட்டை அடியை இப்பவே வாங்கி முடியலே ,இன்னும் ரொம்பவும் யோசிக்க ஆரம்பித்தால் ?வேண்டாம்.... ,இன்னும் கொஞ்ச நாள் வாழ ஆசை :)
Delete1. ஹா...ஹா...ஹா... அடப்பாவி... !சகோதரி பாசம்!!!
ReplyDelete2. ஹா...ஹா....ஹா... பொங்'கல்லு'!
3. ஹா...ஹா...ஹா... 'எடுத்த' பாவத்துக்கு ஜெயிலுக்கு போயிட்டாரா!
4. ஹா...ஹா...ஹா.... அந்த பயம் இருக்கட்டும்!
1 .அதுதானே ,இவரின் பாசப் பிணைப்பை டாக்டர் புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறாரே :)
Delete2. நல்ல வேளை,கல்லை பெண்டாட்டி தட்டில் வைக்காமல் போனார் :)
3.ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த ரவுண்டுக்கு வந்துவிடுவார் :)
4.பயமா ,சேர்ந்து வாழும் அளவிற்கு சகிப்புத் தன்மை இல்லையே :)
அனைத்தும் அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிருட்டுப் பய வைச்ச பொங்கல்தான் சூப்பர் இல்லையா சுரேஷ் ஜி :)
Delete01. இது நளினா புருஷணுக்கு தெரியுமா ?
ReplyDelete02. பொங் ‘’கல்‘’ இப்படித்தானே இருக்கணும்....
03. அவரு வரும் போதாவது வீட்டுக்கு வருவாரா ? இல்லை வேற ஜவுளிக்கடைக்கு போவாரா ?
04. அதுவும் மாடு... 80 தெரிஞ்சு போச்சோ...
05. உண்மைதான் ஜி.
தமிழ் மணம் 6
1.டாக்டர் சொல்லிடுவார் ,கவலைய விடுங்க :)
Delete2.இத்தனை வருஷம் மௌனமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு என்னாச்சு :)
3.மேட்சிங் பிளவுஸ் எடுக்கப் போவார் :)
4.அதுவும் படியாத மாடாச்சே :)
5.சொல்வதெல்லாம் உண்மை :)
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
Deleteசிரிப்பு பொங்கல் வைத்த தங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதம 8
நேற்று எனக்கு எட்டாத உங்களது த ம வாக்கை , இன்று எட்டும்படி எட்டாவது வாக்களித்ததற்கும்., இனிய வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி !
Deleteபொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே-----பின்னே..ஒலக அழகி என்ற பட்டம் கிடைப்பது சும்மாவா....????
ReplyDeleteஒலக அழகி அவங்கதானா ,நல்லா யோசிச்சுச் சொல்லுங்க :)
Deleteவித்தியாசமான சிந்தனைதான். சகாயம் நிறைய பேருக்கு கசாயம்தான். கசாயம் உடம்புக்கு நல்லது. சகாயம் நாட்டுக்கு நல்லது.
ReplyDeleteஎனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
த.ம.10
நாம் அறிந்த கலெக்டரகளில் சகாயம் போல் இன்னொருவரைப் பார்க்க முடியலேன்னு தோணுது ,பலருக்கும் 'பொங்கல் 'வைத்துக் கொண்டிருக்கும் அவர் சேவை வாழ்க :)
Deleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கு என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். த.ம.11
ReplyDeleteவந்த வாழ்த்துக்கும் ,வராத வாக்குக்கும் நன்றி !
Deleteபொங்கலன்று செம சிரிசிரிபொங்கல் மிஸ் செய்துவிட்டோம்...பிசி....
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி....ஆமாம் நீங்கள் தானே உங்க வீட்டுல பொங்கல் வைச்சீங்க?!!!!!!
நான் வைச்சது கல் இல்லாத பொங்கலாச்சே:)
Delete