26 January 2015

காதலி ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் !

----------------------------------------------------------------------------------------------------------------

   ஜோதிடத்தை  எப்படி நம்புறது ?        

             ''அந்த ஜோதிடர் சரியான டுபாக்கூர் போலிருக்கா ,ஏன் ?''

              ''தினசரி  'மணத்'தக்காளிக்  கீரையை சேர்த்துக்கிட்டா  ,திருமணத் தடை நீங்கும்னு சொல்றாரே !''

சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......

குடியரசு ஆனதன் பலன் அனுபவிக்கிறவங்க யார் ?

                       ''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
             ''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

'குடி'யரசு தின நல்வாழ்த்துக்கள் - என்று 'தலைவர்' சொல்கிறார்...? கொடுமை...!


  1. நாடு முன்னேற்றப் பாதையில் போகும் லட்சணம் இதுதான் !


கை மாறிய காதலிக்கு கல்யாணம் !

                ''5 ஸ்டார் ஹோட்டல் ஏசி ஹாலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் ரணும்டா !''
               ''கவலையே படாதே வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''

காதலியிலேயே பழையது, புதியது எல்லாம் உண்டா..
த.ம.1


  1. ஏழையின் பழைய காதலி .பணக்காரனுக்கு புதிய காதலி ஆகிவிடுகிறாளே!
  2. "கை மாறிய காதலிக்கு கல்யாணம்!" என
    அழகான அழைப்பு


    1. காதல்தான் கவிதையா இல்லே ,தலைப்பாவது கவிதையா இருக்கட்டும்னுதான் !
      1. MDக்கு வந்த நல்ல எண்ணம் ?
      2.  ''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
      3.  ''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
      4.  ''ஊஹும் ...சம்பளத்தை பாங்கிலே போட்டுருங்க !''

  1. அதுதானே பார்த்தேன்
    எங்க சட்டைப் பாக்கெட்டை
    கிளிச்சிடுவாரோன்னு நினைச்சேன்






    1. முதலாளி முன் தைரியமாய் யார் அந்தப் பாட்டைப் பாடப் போகிறார்கள் ,அவர் கிழிக்கிறதுக்கு?



    1. காதலியின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் காதலன் !

                ''டார்லிங் , 28  வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''
           
    2.           ''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...
    3. தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''

    4. காரியத்தில் கண்ணா இருக்குது பக்கி!


      1. பழம் நழுவி பாலில் விழுதுன்னு நினைக்கிறானோ ?

            1. நல்ல ருசி 'ராட்டை ' மீன் !


                      1. புலால் மறுத்த காந்தீயவாதிகளும் 
                           விரும்பியிருந்தால் உண்டு இருப்பார் ...
              'ராட்டை ' மீனை !

34 comments:

  1. 01. பழக்க தோஷத்துல உளறிட்டாரோ....
    02. குடி அரசு சரிதானே...
    03. கல்யாணத்துக்குப்போயி பத்த வச்சிடாமே..
    04. பூவாவுக்கு...
    05. மாட்டிருச்சு பச்சி
    06. அருமை.

    ReplyDelete
    Replies
    1. 1.அதானே ,என்னைக்கு அவர் சொன்னது பலித்தது :)
      2.குடிகார அரசு :)
      3.பொய்யாவது சொல் கண்ணேன்னுபாடாம இருந்தா சரி :)
      4.அதுதான் atm கார்டு இருக்கே :)
      5.பக்கிகிட்டேதானே :)
      6.சாப்பிட்டு பார்த்துத்தானே சொல்றீங்க :)

      Delete
  2. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  3. ஹா... ஹா... புது ஜோதிடம் ஜி...

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. புதுசில்லே,பழைய ஏமாற்று ஜோதிடம்தான் :)
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  4. கொடியேற்றியபிறகு, ‘டாஸ்மாக்’ கடைக்கு வருவது தானே நமது வழக்கம்?

    ReplyDelete
    Replies
    1. கொண்டாட்டம் என்றால் அது ஒண்ணுதானா :)

      Delete
  5. வாழ்க நலம்!..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  6. குடிஅரசு பிரம்மாதம் போங்கோ !

    அதெல்லாம் சரி! 28 வயசு பிள்ளைய எப்படி பெப்பாய்ங்க ?

    தம+

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு குடியரசு என்பதற்கு இதுதானே அர்த்தம் போலிருக்கு :)

      அதைப் பற்றி அவங்களே கவலைப்படலே ,உங்களுக்கு எதுக்கு ?

      Delete
  7. ஹா...ஹா...ஹா... 'மண'ப்பாறை முறுக்கு சாப்பிடலாமாமா?

    ஹா...ஹா...ஹா.... நல்லகுடித் தலைவர் போங்க...

    ஊ..ஹூம். இதுக்குச் சிரிக்க மாட்டேன்!

    இப்போல்லாம் சம்பளம் பேங்க்ல்தான வருது?

    அடப்பாவி... திருமணத்தை ஐந்தாண்டுத் திட்டமாக்கிடாங்களே...!

    ReplyDelete
    Replies
    1. முறுக்குக்கு அப்படி சக்தி இருக்குன்னு சொன்னா நம்புறதுக்கு இங்கே ஆள் இருக்கே :)

      தலைவர் எவ்வழி ,மக்கள் அவ்வழிதானே :)

      ஏன் ,தெய்வீக காதலை தெருவுக்கு கொண்டு வந்துட்டாங்களா :)

      அப்ப ,அந்த பாடலைப் பாட முடியாதே :)

      கடைசியில் நிதி நிலைமை சரியில்லை என்று திட்டத்தைக் கை கழுவுற மாதிரியா :)

      Delete
  8. என்னாது மனத்தக்காளி சாப்பிட்ட மணமாகுமா!!!??? அவர் ஜோசியரா? முன்னால சித்தமருந்து கடை வச்சிருந்திருப்பாரோ??

    ReplyDelete
    Replies
    1. அந்த கடை வைத்திருந்தாலும் இப்படி அள்ளி விடக்கூடாதே :)

      Delete
  9. Replies
    1. மீண்டும் வந்ததற்கு நன்றி :)

      Delete
  10. வணக்கம்
    இரசித்தேன்...
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி,ரூபன் ஜி !

      Delete
  11. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !
      உங்க பதிவைப் படித்து ரசித்தேன் !

      Delete
  12. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய ,உங்களின் குடியரசு கவிதைக் கருவும் இது தானே :)

      Delete
  13. Replies
    1. புதுசா ஸ்மார்ட் போன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ,நல்ல காரியம் பண்ணி இருக்கீங்களே :)

      Delete
  14. ஜோசியரையும் மனத்தக்காளியையும் இணைச்சி......

    உங்க மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுது பகவான்ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. வேறோன்னுமில்லே,நேற்று நான் சாப்பிட்ட மணத் தக்காளிக் கீரைதான் இப்படி வேலை செய்திருக்கு .....அப்படின்னா திருமணத் தடையும் நீங்கி இருக்கணுமேன்னு கேட்டு ,என் குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்க மாட்டீங்கன்னு நம்புறேன் :)

      Delete
  15. மணத் தக்காளி மணத்தடையை நீக்குமா? அதுசரி...
    அனைத்தும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. அப்படியொரு சக்தி அதக்கு இருந்தால் மார்க்கெட்டில் கிடைக்குமா :)

      Delete
  16. கீரை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது ! :)

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு மேலே எதிர்பார்த்தால் தவறுதான் :)

      Delete
  17. ஹஹஹஹ்..மணத்தக்காளிக் கீரை சாப்பிட்டா திருமணம் ஆறது சரி திருமணம் "மணக்குமா"நு கேளுங்க ஜி அந்த சோசியரை...

    குடியரசு தினமா? ஜி "குடி" அரசு தினமாக அரசின் டாஸ்மாக்குகளில் செம கூட்டம் ஜி! லீவு வேற...

    ReplyDelete
    Replies
    1. சென்ட்டு கூட தேவை இருக்காதுன்னு சொல்லக் கூடும் :)

      வியாபாரம் கூடுது ,வருமானம் குறையுதுன்னு அரசு சொல்லுது ,எப்படியோ :)

      Delete