22 January 2015

பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது :)

டைட்டில் இப்பவே ஹிட் ஆயிடுச்சே :)                    

             '' ஆங்கிலக் கதையை உல்டா பண்ணி படம் எடுக்கிற  அந்த டைரக்டர் இப்ப டைட்டிலைக் கூட உல்டா பண்ணியிருக்காரா ,எப்படி?''

                          ''நானொரு பாகன்னுதான் !''

சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

சேலை எடுக்க புருஷனை கூட்டிட்டுப் போகலாமா ?

                     ''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
                    ''நான் டிசைனை  பார்க்கிறதுக்குள்ளே நீங்க விலையைப்   பார்க்கிறீங்களே !''

ஒரு காமன் ஜோக் உண்டு... எவ்வளவுக்கு வேணும்னாலும் புடைவை எடுத்துக்கோ... ஆயிரம் ரூபாய்க்குள்ள என்று! பணம் செலவழிக்க ரெடியாயிருக்கும் கணவர்கள் கூட மணிக்கணக்கில் காத்திருக்கத் தயாராயிருக்க மாட்டார்கள்! :)))
ReplyDelete

Replies


  1. ஆயிரம்தான் எல்லை என்றாலும் ,பல மனைவிமார்களும் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஆகிறார்களே !
    ஒரு சேலை எடுப்பதற்குள் சேல்ஸ்மேனை படுத்தும் பாடு இருக்கே ,நமக்கே பாவமாத்தான் இருக்கும் !





பதினாறு வயசுக்குள்ளே தேவையா இது ?

               ''அவரோட பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
                 ''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

இக்காலத்தில் எதுவும் நடக்கும்
ReplyDelete


Replies


  1. கல்யாணத்தின் போதே வளைகாப்புமா ?




    1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....


ஒ[பிசிட்டி]ரே கல்லில் இரண்டு மாங்காய் !

பிசிட்டி  குறைப்பதற்கு மிஷினில் ஏறி 
கையை ,காலை ஆட்டி பயிற்சி செய்பவர்கள் ...
நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது 
 பருமனும்.குறையும் ,கைத்தறி புரட்சியும் ஏற்படும் !

26 comments:

  1. இங்கு இருக்கும் கைத்தறிகள் பாதியளவு குறைந்து விட்டது ஜி...!

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு சொல்றேன் :)

      Delete
  2. //நானொரு பாகன்//
    நல்ல தலைப்பு. எதுக்கும் copy right பதிவு பண்ணிடுங்க பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. கும்கியை தொடர்ந்து இதுவும் வரக்கூடும் :)

      Delete
  3. டிடி பொறுப்பாக சிறுமறுப்பு தந்திருக்கிறார் பாருங்கள்!

    அட, என் பழைய கமெண்ட்!! :))))

    ஜோக்ஸ் ஹா ஹா ஹா என்று சிரிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப் பட்டவர்களின் சார்ப்பாக அவர் சொல்லி இருப்பதும் சரிதானே :)

      ரசிக்க வைத்ததாச்சே :)

      :))))))))))

      Delete
  4. 1. சொல்ல முடியாது, இத டைட்டில்ல படம் வந்தாலும் வரலாம்.
    2. தெரியுது,தெரியுது இது சொந்த அனுபவம்னு.
    3. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..
    4. அருமையான யோசனை. ஆனால் இதை கேட்பதற்கு தான் ஆளிருக்காது.

    ReplyDelete
    Replies
    1. 1.வந்தால் செம ஹிட்டாகும் :)
      2.எனக்கு கடைக்குப் போகும் அளவிற்கு பொறுமையே இல்லை :)
      3.ஓ...அடுத்த தலைப்பு இதற்கும் பொருந்துகிறதா :)
      4.நல்லதை யார்தான் ஆதரிப்பார் :)

      Delete
  5. Replies
    1. மொபைலிலேயே நீங்களும் உங்கள் கருத்தை தொடருங்கள் :)

      Delete
  6. 01. சந்தர்ப்பம் பார்த்து அடிக்கிறது டைரக்டர் மட்டுமல்ல ஜோக்காளியும்தான்.
    02. விலையோட வேதனை இவணுக்குத்தானே தெரியும்.
    03. என்னைப்பொருத்தவரை இந்த கற்பனை அதிசயமில்லை நண்பரே... 35 வருஷத்துக்கு முன் ஒரு திருமணம் காலையில் தாலி கட்டு, மாலையில் பிரசவம் அந்தக் குடும்பத்துல ஒரே நாளில் இரண்டு விஷேசம் கல்யாணநாள், பிறந்தநாள் விளையாட்டுக்கு எழுதவில்லை நடந்த உண்மை.
    04. ஸூப்பர் ஐடியா, பகவானே...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. 1.அதுதானே ரசனை :)
      2.எதுக்கு போகணும் ,bpயை ஏற்றிக்கணும்:)
      3.நானும் கூட படித்தேன் ,பிரிட்டனில் பதினைந்து வயது பொண்ணுக்கு பிள்ளை பிறந்ததாம் ,அந்த நல்ல காரியம் செய்தவன் வயதோ பதிமூன்று தானாம் :)
      4.சொந்த தொழில் செய்தது மாதிரியும் இருக்கும் :)

      Delete
  7. இததான் பதி...நாறு சமா...ச்சாரமா...???

    ReplyDelete
    Replies
    1. பதினாறும் நிறையாத பருவ மங்கைன்னு பாடி நாறடிச்சிட்டானே:)

      Delete
  8. வணக்கம்
    பதினாறின் இரகசியம் இதுவா.....த.ம7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரகசியம்தான் வெட்ட வெளிச்சமாகி விட்டதே :)

      Delete
  9. அட ஆண்டவா அழகான இந்தச் சொல்லைப் பிரித்து மேய்ந்து
    அதற்குள்ளும் கடி ஜோக்கா !?..:)நடக்கட்டும் நடக்கட்டும் நக்கீரனாரிடம்
    பத்த வைக்கிறனா இல்லையா என்று பொறுத்திருந்து பாருங்க ஜீ ...:))

    ReplyDelete
    Replies
    1. பத்த வைங்க ,அப்பவாவது அந்த டுபாக்கூர் ,நெற்றிக் கண்ணைத் திறப்பாரான்னு பார்க்கிறேன் :)

      Delete
  10. மாதொரு பாகனுக்கு விளம்பரந்தானே...?
    இனி குழந்தை தாலி எடுத்துக் கொடுக்க கட்டினாலும் ஆச்சர்யமில்லை ஜி...
    புடவை எடுக்க கடை கடையா ஏறி இறங்குனாத்தானே தெரியும்.. டிசைன்னைப் பாக்குறதுக்கு விலையைப் பாக்கமா நேரத்தைப் பாக்கணும் ஜி... அது ஒரு சுகமான் சுமைதான்...
    மிஷின் ஜோக் அருமை ஜி.... நல்லாத்தான் யோசிக்கிறீங்க...

    ReplyDelete
    Replies
    1. உலகப் பெற்ற பிறகு நான் வேறு விளம்பரம் செய்யணுமா :)
      இந்த பேறு எத்தனைப் பேருக்கு கிடைக்கும் :)
      கட்டைப் பையில் இருக்கும் சுகமான சுமையை வீடு வரைக்கும் பொறுப்பா கொண்டு வர்றதை சொல்றீங்களா :)
      நின்ன இடத்திலே நின்னுகிட்டு சைக்கிள் வேறு ஓட்டுகிறார்கள் :)

      Delete
  11. நானொருபாகன் ஆ இல்லை நானொரு பாகன்? முதல்னா எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கங்க..அஹஹஹஹ் நானொரு பாகன் அப்படின்ன பாகன் சங்கத்துல ரெஜிஸ்டர் பண்ணிக்கங்க...அது சரி எப்ப யானை வளர்க்க ஆரம்பிச்சீங்க ஜி! அஹஹ்ஹ் தீனி போட்டுக் கட்டுபடியாகாது...

    ReplyDelete
    Replies
    1. மனைவிக்கு வலம் கொடுக்கலாம் ,இடங்கொடுப்பதில் ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்றீங்களா :)
      யானைப் பாகன் சங்கத்திலே சேர்ந்தா ,சங்கத்தின் வளர்ச்சியில் நானும்ஒரு முக்கிய பாகன்னு சொல்லிக்கலாமோ :)

      Delete
  12. மெஷின் அருமை ஜி! அப்படியாவது தொழில் வளர்க!

    ReplyDelete
    Replies
    1. தறி நெய்பவர்கள் எப்போதும் 'ஃ பிட்'டாக இருப்பது, உடல் உழைப்போடு உடற் பயிற்சியும் சேர்த்து செய்வதால் இருக்குமோ :)

      Delete
  13. நானொரு பாகன்.... :)

    ஒபிசிடி குறைய நல்ல வழி!

    ReplyDelete
    Replies
    1. நானொரு (யானை )பாகன் என்றும் சொல்லலாமா :)

      நாடு முன்னேறவும் :)

      Delete