4 January 2015

ஓடிப் போன மனைவிக்கு மரியாதை ?

------------------------------------------------------------------------
விசுவாசமிக்க இன்ஸ்பெக்டரோ ?
           ''வீட்டிலே வந்த கொள்ளைக்காரங்க  நாலு பேரில் ஒருத்தரை மட்டும் ,அந்த இன்ஸ்பெக்டர் சுட்டுப் பிடிக்க என்ன காரணம் ?''
           ''மற்ற மூணு பேரும் ஒழுங்கா மாமூல் கொடுக்கிறவங்களாமே!'' 
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
இவங்க வேலை என்னவாக இருக்கும்?
                ''அடிக்கடி மந்திரி சபை மாற்றம் பண்றதாலே நம்ம கட்சியிலே புது அணி ஒண்ணு உருவாகி இருக்கா ,சபாஷ்...அணி பேரென்ன ?''
         ''முன்னாள் மந்திரிகள் அணிதான் தலைவா !''


அண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.
ஜோக்களி யான நீங்கள் என்னை போன்றவகளை பேர்க்களி அக்காமல்
எங்கள் வாய் வழியாகவே நீங்கள் ஒரு சொக்களி என்று சொல்ல துண்டுரிகள்.

கண்டிப்பாக என் தமிழில் தவறு இருக்கலாம் மன்னிகவும் .
ReplyDelete

Replies


  1. சித்திரமும் கைப் பழக்கம் தானே ?விரல் ஓவியம் என்ற அழகான தலைப்பில் எழுத வந்து இருக்கும் நீங்கள் ,விரைவில் தமிழில் பிழையின்றி எழுதி அசத்த வாழ்த்துக்கள் !
    நன்றி
  2. இந்த தொழில்லே கெட்டிக்காரனா இருந்தென்ன செய்ய?

  3. ''அந்தக் கொள்ளைக்காரன் தற்குறி என்றாலும் தொழில்லே கெட்டிக்காரன்னு எப்படி சொல்றீங்க ?''

  4.  ''ஜெயில் கம்பிகளைக்கூட எண்ணத் தெரியாதாம் ,ஆனால் எப்படிப்பட்ட வீட்டு ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவானாமே  !''

  5. இதென்ன கெட்டிக்காரத்தனம்?
    கம்பிகளை வளைக்காமலே லட்சகோடிகளை லவட்டுரவங்கள உங்களுக்கு தெரியாதாஜி?
    ReplyDelete

    Replies

    1. பெயர்தான் வேறு வேறு ,இரண்டு பேரும்அடிக்கிறது கொள்ளைதானே ?
      நன்றி
    2. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....
    3. ஓடிப் போன மனைவிக்கு  மரியாதை !

    ''மனைவி பேரைக் கேட்டா 'காலாவதி''ன்னு ஏன் சொல்றே ?''
    ''ஓடிப் போன கலாவதியை வேற எப்படி சொல்றது?''

  6. வலி நிவாரணி இதைவிட வேறுண்டா?


    பிரசவத்தில்  பிறந்தது  சிசுவுடன்  தாயும்தான்  ..

    சிசுவின் அழுகுரல் ஓசை போக்கியது ...தாயின்  பிரசவ வலியை !












34 comments:

  1. 01. இதுதான் தொழில் தர்மமோ ?

    02. பின்னால் நிற்கிறவங்களும் ''பின்னால் மந்திரிகள் அணிதான் தலைவா !''

    03. வலை ப்பதற்க்கும், வளை ப்பதற்க்கும் வித்தியாசம் போலவோ...

    04. புருஷன் பேரு கலாநிதியா ?
    05. ஸூப்பர்...

    தமிழ் மணம் இ...... வாக்கு ஒ.......

    ReplyDelete
    Replies
    1. 1.அவருக்குத் தெரிந்த தொழில் தர்மம் :)
      2.இது பெரிய அணியாய்மாறிவிடும் போலிருக்கே :)
      3.ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் ?
      4.பெயர் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு :)
      5.வலி மறந்தவர்கள் சொன்னால் நன்றாயிருக்கும் :)
      இ..ஒ...வுக்கு ந:)

      Delete
  2. வணக்கம்
    இவைகள் எல்லாம் நம் நாட்டு காரர்களுக்கு கைவந்த பழக்கம்.. சொல்ல வேண்டியதில்லை..
    மற்றவை எல்லா வற்றையும் இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சொல்ல வேண்டியதில்லை ,உங்கள் நாட்டிலும் இப்படித்தானா :)

      Delete
  3. Replies
    1. சகோதரி மைதிலி வந்து சொல்லத்தான் போகிறார் ...உங்களுக்கென்ன ,,முட்டையிடும் கோழிக்குத் தானே வலி தெரியும் என்று :)

      Delete
    2. அது !! அது தான் பாஸ்!! சூப்பர் பாஸ்! இப்போ நான் வேற கமெண்டும் போட்டுடுறேன்:)

      Delete
    3. கவிதையில் வேண்டுமானால் நம்மை மறக்கலாம் ,லேபர் வலியை மறக்க முடியுமா :)

      Delete
  4. Replies
    1. வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் ,+யுடன் +சேர்ந்தால் மைனஸ் ஆச்சே :)

      Delete
  5. ஓடிப்போன மனைவிக்கு மரியாதை கொடுக்கிற கனவன்.. நல்ல கணவனாகத்தான் இருந்திருப்பார்.....?????

    ReplyDelete
    Replies
    1. அவரோட ஆண்மையையா சந்தேகப் படுறீங்க :)

      Delete
  6. பிரசவத்தில் சேயுடன் தாயும் பிறக்கிறாள்/ அருமை. அது சரி இத்தனை விஷயக்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கிருந்து வருகுதுவோ என்று ரா .கி.ரங்கராஜன்(அப்புசாமி ,சீதேக் கிழவி தெரியும் இல்லியா ) ஒரு நூல் எழுதியுள்ளார் ,அவரே கேட்டுக் கொண்டிருக்கும் போது நான் எம்மாத்திரம் :)

      Delete
  7. கடைசி விஷயம் நெகிழ்த்துகிறது.

    மற்ற மூன்றும் ஹா...ஹா..... ஹா....

    ReplyDelete
    Replies
    1. வலியை நீக்கிய அழுகுரலை ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  8. Replies
    1. அந்த எஸ்ஸை ஒருவரை மட்டும் சுட்டது நியாயமா:)

      Delete
  9. முதல் மூணு கொல்லைகாரர்கள் ஜோக் இல்லயா பாஸ்!
    கலாவதி இப்படி காலாவதி ஆயிட்டியே....என்னம்மா ? இப்படி பன்னுருங்களே மா:(((

    ReplyDelete
    Replies
    1. மாமூலா நடக்கிறதுதான் :)
      காலாவதி ஆன காரணம் என்னவென்று ஆராய ஒரு கமிஷனை வேண்டுமானால் போடலாம் :)

      Delete
  10. கலாவதி-காலாவதி!சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஒரு கால்கட்டுன்னு சொல்றது உணமைதான் ,கலாவதிக்கும் புதுசா ஒரு கால் வந்ததால் ஓடிருச்சோ ?

      Delete
  11. அனைத்தும் சூப்பர்ஜி. தம9.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி !

      Delete
  12. காலாவதி ஆனா கலாவதி...! அருமை அருமை!

    ReplyDelete
    Replies
    1. கால் முளைத்து ஓடிப் போனது நியாயம்தானே :)

      Delete
  13. அந்த ஓடிப்போன மனைவிக்கு விளக்கம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அவரைப் (கொடியல்ல ) பொறுத்தவரை காலாவதியானது சரிதானே :)

      Delete
  14. ஜெயில் கம்பிகளைக்கூட எண்ணத் தெரியாதாவங்க தான்
    எப்படிப்பட்ட வீட்டு ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவாங்ககளே
    சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளிகள்!

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் தொழிலாளி கணக்கிலே வர மாட்டாங்களே :)

      Delete
  15. மாமூலே வாழ்க்கை என்றாகிவிட்டதே ஜி!

    கலாவதி காலவதி ஆனதன்மர்மம் என்னவோ?!!!!

    இறுதி அருமை!

    ReplyDelete
    Replies
    1. lஅதனால்தான் அவர் வீட்டிலேயே கொள்ளையர்கள் புகுந்து விட்டார்களோ :)

      மர்மம் விரைவில் விலகுமென்று எதிர்ப்பார்க்கலாம் :)

      Delete