29 January 2015

தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா :)

  சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
        ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து உன்னாலே இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''



மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !
               ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா 
வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
      ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''

வணக்கம்
தலைவா.....

புத்திமான் பலவான்............ஜீ.....த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDelete

Replies


  1. புத்திமான் பகவான்ஜி ன்னு எனக்கு தெரிந்தது ..ஹீ ஹீ !
  2. மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா?

              ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
  3.          ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''


  4. 'பாம்பு பாம்பு' என்று ஓடும்போது சாதம், சாம்பார், ரசத்தையெல்லாம் கொட்டி விட்டு ஓடாதிருந்தனரே.... :)))
    ReplyDelete



    Replies


    1. முதல் பந்தி முடியும் வரை பாம்பு வரவே இல்லை ,வந்திருந்தா நீங்க சொல்ற மாதிரிதான் ஆகி இருக்கும் !

  5. தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா ...!

             ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
               ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டு பாரேன் !''

  6. மோதிரம் யாருக்கு என்று சொல்லச் சொல்லுங்கள் ஜி! உண்டியல்ல போட்டா ஆஞ்சனேயருக்குப் போகாதே! ஆமாம்! பாவம் ஆஞ்சனேயர் ராமனுக்குத் தூது போனார்!!! இப்பவுமா? பிரம்மச்சாரி எத்தனை பேருக்குனுதான் போவார்!!! காலம் காலமாக.....ஆளை வுடுங்கப்பானு சொல்லாமல் இருந்தால் சரி

    த.ம.
    ReplyDelete



    Replies


    1. மனைவி திரும்ப வந்தா கேட்கிற முதல் கேள்வி ,எங்கே மோதிரம் என்பதாகத்தான் இருக்கும் ! காணிக்கையா போட்டாச்சு என்றால் ...மனைவி மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடும்!வேற வழியில்லை ,இப்போதைக்கு கவரிங்கில் ரெடி பண்ணி போட்டு விட வேண்டியதுதான் !
    2.  கற்பு எனப்படுவது இதுதானோ ?

      அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
      அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !


28 comments:

  1. அந்தக் கண்ணன் தான் சுனாமியா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. நிம்மதி இல்லேன்னா ,கணவனுக்கு மனைவியும் ,மனைவிக்கு கணவனும்தான் சுனாமி :)

      Delete
  2. பல பேர் வாழ்க்கையில் இந்த சுனாமி விளையாடி விடுகிறது போலும்! :)

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இந்த சுனாமி வரலேன்னா அதென்ன தாம்பத்தியம் :)

      Delete
  3. என் பெயருமா? ஆஹா...

    எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பெயர் இல்லாமல் பழைய பதிவு ஏது:)

      Delete
  4. என் பெயருமா? ஆஹா...

    எல்லாவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா சந்தேகம் தீரலே .உங்க பெயரேதான் :)

      Delete
  5. மனைவி திரும்ப வரலைன்னு சந்தோசப்படமா, இப்படியா இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. பாசக்கார கணவராச்சே :)

      Delete
  6. ஒரு படத்தில் “தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்று குதித்த கணவன் நினைவு வந்தது,ஆனால் சுனாமி போல் மீண்டும் வந்து நிற்பாள்./
    /அவனவன் நெஞ்சிலே ஆயிரம் கனவுக் கன்னிகள் ...
    அவளின் நெஞ்சிலோ ஒரேயொரு ....கண்ணன்தான் ! / நிச்சயம் இது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.

    ReplyDelete
    Replies
    1. உங்க வயசுக்கு முடியலைன்னா நான் எல்லாம் எம்மாத்திரம் :)

      Delete
  7. 01. அப்படீனா ? துக்கநாள்னு சொல்லுங்கோ...
    02. அவரு வீட்ல சாப்பிட்தாலதானே... இன்னும் இருக்காரு...
    03. அவரு சமாளிச்சது இருக்கட்டும் மொய் வந்துச்சா ?
    04. வடை மாலையிலே இருந்த வடையை தின்னது பூசாரிதானே... எதுக்கும் அவரை விசாரிங்க...
    05. கண்ணக்கவி கருமை சாரி அருமை.

    தமிழ் மணம் – 4 + 1
    (நண்பரே நேற்று ஓட்டுச்சாவடி நடந்த கலவரத்தால் ஓடிவிட்டு இன்று வந்து ஒரு நல்ல ஓட்டும், ஒரு கள்ள ஓட்டுமாக 2 போட்டேன் 80தை வெளியில் சொல்லி விடவேண்டாமென கேட்டுக்கொள்(ல்)கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. 1.துக்க நாள் ஊர் உலகத்திற்கு ,இவருக்கு மோசம் போன நாள் :)
      2.வெளியிலே சாப்பிட்டா சாவு அட்வான்சா வந்திருமா :)
      3.மொய் வேண்டிய அளவுக்கு வந்ததால்தானே இந்த பிளான் பண்ணினார் :)
      4.ஓ,அதனால்தான் பலனில்லாமல் போச்சா :)
      5.நீங்களும் ராதையை நமபலையா :)
      இன்றைய பதிவுக்கு வாக்களித்தோர் பட்டியலில் உங்கள் கள்ள வோட்டு பதிவாக வில்லையே >>>
      dindiguldhanabalan joinmegu@gmail.com venkatnagaraj bagawanjee killergee chennaipithan santhi8564@gmail.com

      Delete
  8. நம்மாலுங்க பாம்புக்காக சோத்த விட்டுட்டு ஓடுவாங்களா ? அப்படியே ஓடினாலும் அதுக்கும் சேர்த்து சாப்பிடாம போகமாட்டாய்ங்களே அண்ணே !

    தம +

    ReplyDelete
    Replies
    1. அதானே ,சோறுன்னா சோழவந்தானுக்கே மதுரையில் இருந்து நடந்து வருவாங்களே :)

      Delete
  9. இல்லறம் என்னும் சுனாமி!
    தம 6

    ReplyDelete
    Replies
    1. சுனாமிக்கு அஞ்சாமல் வாழ்வதுதானே வாழ்க்கை :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    சுணாமி போலதான் மனித வாழ்க்கை என்ற கருத்தை சொல்லாமல் சொல்லி விட்டிங்கள்.. அருமை இரசித்தேன் ..பகிர்வுக்கு நன்றி த.ம8. என்ன ஜி தமிழ்மணம் 2 வது நிலையில் உள்ளது.... கவலை.. கவலை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இந்த சுனாமியிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது ?

      Delete
  11. நண்பரே நேற்றைய பதிவுக்கு போய்ப்பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய பதிவுக்கு வாக்களித்து இருந்தால் அதுவும் நல்ல ஒட்டுதானே :)
      சாரி நண்பரே ,நேற்றைய வாக்களித்தோர் பட்டியலை பார்க்க முடியாமல் போய்விட்டது ,இப்போது எப்படி பார்ப்பது என்கிற டெக்னிகல் விசயத்தில் நான் ரொம்ப மண்டு :)

      Delete
  12. சுனாமி வந்ததால் சோகம் இவருக்கு மட்டுமல்ல.
    பந்தியில பாம்பு.... மொய் வச்சவங்க திட்டிகிட்டே போய் இருப்பாங்களே
    வடை மாலை@ மனைவி ஊருக்கு போன சந்தோஷத்தில சாத்தியிருப்பார்,,சும்மா வெளிய அப்படி சொல்லி இருப்பாரோ? +1

    ReplyDelete
    Replies
    1. சோகம் பெண்டாட்டிக்குமா :)
      பரவாயில்லே ,அந்த பாம்பையும் பிடிச்சு சூப் வச்சுக் கொடுங்க என்று சொன்னதாக தகவல் :)
      அப்படியும் இருக்கலாமோ :)

      Delete
  13. சிரித்து வாழ்நாளை நீட்ட உதவும், நகைச்சுவை சுனாமிதான் உங்களின் பதிவுகள் பகவானே!
    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை சுனாமி ...இந்த பட்டமும் நல்லாயிருக்கே :)

      Delete
  14. சுனாமியே பரவாயில்லையோ...ஹஹஹ

    கல்யாண ஹால்லயே பாம்புன்னா நிறைய பேரு ஓடிருப்பாங்களே ஜி! ஹஹஹ

    எங்களையும் குறிப்பிட்டு நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. அந்த சுனாமி ஒரே நொடியில் கொன்னுடுமே :)

      ஹாலில் பாம்பு என்றால் பந்தியில் இடம் பிடிக்க போய் விடுவார்களே :)

      உங்க மோதிரத்தை மறக்க முடியலியே :)

      Delete