31 October 2012

தின "சிரி" ஜோக் !!!மலை முழுங்கி அவர்தானா?


     nfhQ;r ehisf;F gpwF ,g;gj;jhd; nrhe;j CUf;F te;Nwd;. ahidkiy ];lhg;gpNy ,wf;fptplr;nrhd;dh> fk;khf;fiuapy ,wf;fptpLwpNa!  ,J epahakh fz;lf;lh;?

    cq;f epahaj;ij me;j kiyia cilr;r Fthup mjpgu;fpl;l Ngha;NfS  ,g;g g];i] tpl;L ,wq;Fa;ah!

Udanz  

'சிரி'ப்பாக்கம் ! பெயர் பொருத்தம் ....ரொம்ப சூப்பர் !



30 October 2012

என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை!

என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?

           சந்தேகப் பேர்வழிகளை 'சந்தேகப் பிராணிகள்' என்று நாம் சொல்வது உண்டு.  சொல்லப் படுவதும் உண்டு.  இப்படி ஆறறிவுள்ள மனிதனையே 'பிராணிகள்' வரிசையில் சேர்த்து விட்டதால் மூட்டைப் 'பூச்சி'யையும்அந்த வரிசையில் சேர்க்கலாம்.  காரணம், இந்த மூட்டைகள் பால் கூடக் காய்ச்சாமல் என் வீட்டில் குடியேறி வெள்ளிவிழாவைக் கொண்டாடியும் , பொன்விழாவை நோக்கி வீறு 'கடி' யிட்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
             தாங்கமுடியாத தொல்லை கொசுத் தொல்லையா?  மூட்டைத் தொல்லையா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நடுவர் ஒருவேளை'பெண்டாட்டி'த் தொல்லைதான் என்று தீர்ப்பளிக்கலாம்.  ஆனால் ஜோக்காளி ஆன நான் மூட்டைத் தொல்லைதான் என்று சோடா கூடக் குடிக்காமல் சொற்பொழிவாற்றத் தயார்!

தின''சிரி '' ஜோக் !!!என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்!

''தலைவர் ஜெயிலுக்குப்போய்  கஞ்சாவிற்கு அடிமை ஆகிட்டாராமே ,ஏன்?''

வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் 'உள்ளேபோனா 'சிறை கஞ்சா
  சிங்கம் 'ஆச்சே!''

29 October 2012

தின''சிரி '' ஜோக் !!!அதுக்கு இப்படியும் அர்த்தமா?

''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?''


  ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''

28 October 2012

தின''சிரி '' ஜோக் !!!ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

கர்நாடகாவிலே  எல்லாமே 'ஹள்ளி'ன்னுதான் முடியுதே ,ஏன்?

நம்ம ஊரு அல்லி ராணிக் கூட அங்கே போனாஹள்ளி  ராணி தான் !''

27 October 2012

தின ''சிரி'' ஜோக் !!143ன்னா I love you ஆச்சே !

எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
காதலர்களுக்கு பிடித்த 143வது காந்தி ஜெயந்தி  ஆச்சே!''\

26 October 2012

தின ''சிரி'' ஜோக் !!!கெமிஸ்ட்ரி அப்டேட் டா இருக்கணும்!


"கெமிஸ்ட்ரி பாடத்திலே பர்ஸ்ட் ரேங்க்  வாங்கி பிரயோஜனம்  இல்லையேடி ! 
ஏன் ?"  
"கல்யாணம் ஆனதில் இருந்து சண்டை தான் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகமாட்டேங்குதே   !"

25 October 2012

தின ''சிரி'' ஜோக் !!!வரக்கூடாத அந்நியன்!


"புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலிடுதான்னு நினைக்கிறேன்"
" அப்படின்னா "
" ஒரு அந்நியன் நடமாட்டம் அடிக்கடி  தெரியுதே ! "


24 October 2012

தின'சிரி ' ஜோக்!!ஏன் படம் தயாரிக்கக் கூடாதா


" மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "
" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

23 October 2012

தின'சிரி ' ஜோக்!!!வரக்கூடாத சந்தேகம்!


" மனைவிக்கு எத்தனை சுழி'ன'  போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சு ! "
" ஏன் ? "
" முதல் மனைவியா,  'இரண்டாவது மனைவியான்னு கேக்கிறார் !


22 October 2012

தின'சிரி ' ஜோக்!!!கைது ஆனதன் காரணம்!

''தலைமறைவா  இருந்த தலைவரை ,அவரோட  'சின்னவீட்டு'ல வைச்சு கைது பண்ணிட்டாங்களாமே!

''பாவம் !அவராலே 'தொடுப்பு' எல்லைக்கு வெளியே போக முடியலே போலிருக்கு!''





21 October 2012

தின ''சிரி'' ஜோக் !!!இந்த மொக்கைக்கு 'ஜல்பே 'பரவாயில்லே!

உனக்கு ஜலதோஷம்  பிடிக்குமா?''

''எப்பவாவது  பிடிக்கும்!''

''அப்பிடின்னா எப்பயும் என்ன பிடிக்கும்?'         




  

20 October 2012

தின'சிரி' ஜோக்!!!அதுவும் பாதிஇதுவும் பாதியா?

"நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றிங்களே ,ஏன் ?"

"யானை சைவம்,சிங்கம் அசைவம் சாப்பிடும்,அதனாலேதான் !"

  

19 October 2012

தின'சிரி' ஜோக்!!!தோசைன்னா ரொம்ப ஆசைதான்!

"இரண்டு தோசைகல்லை ஏன் வாங்குறே ?"

"தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்குன்னுதான் !"


  

18 October 2012

தின'சிரி' ஜோக்!!!பழையப் பாட்டை பாடும் மருமகள்!

"உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"

"என்னம்மா , பாடுனா ?"

"கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"



17 October 2012

தின'சிரி' ஜோக்!!! எறும்புக்கு வருமோ மலைப்பு!

"வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வநதிருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"

"இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"


16 October 2012

தின'சிரி' ஜோக்!!!லட்டு போயி களி வந்தது டும் டும்.!

''கண்ணா ,லட்டு தின்ன ஆசையா ?படத்து பேரை ,கண்ணா ,களி தின்ன   ஆசையான்னு மாத்திருவாங்களா ?

ஏன்?

''அந்தப்படத்து  ஹீரோவை கைது  செஞ்சுட்டாங்களே!''


15 October 2012

தின'சிரி' ஜோக்!!!அண்ணாவின் தொண்டர்களுக்கு பிடித்த படம்!

''மாற்றான்படத்தைஅதிமுக,திமுக.மதிமுக  தொண்டர்கள் எல்லாம் பாராட்டுகிறாங்க,ஏன்?''

''மாற்றான்  தோட்டத்து  மல்லிகைக்கும் நல்ல  மனமுண்டுன்னு அறிஞர்   
அண்ணா  சொல்லிஇருக்காரே!''



14 October 2012

தின 'சிரி ' ஜோக் !!!நோகடிக்கும் இரண்டு!

''வர வேண்டியது வர மாட்டேங்குது ,வரக் கூடாதது  வருது!''

''என்ன  சொல்றிங்க?''

  ''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு  காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''






13 October 2012

தின'சிரி' ஜோக் !!!நம்பருக்கு நம்பர்தான் பதிலா?


"அந்த பொண்ணு கிட்டே 143 இன்னு சொன்னதுக்கு  அவங்க வீ ட்டிலே 144  போட்டுட்டாங்க ! "
"என்னடா சொல்ற ?"
"ஐ லவ் யு ன்னு சொன்னதுனாலே அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !"  


12 October 2012

தின'சிரி' ஜோக் !!!இப்படியும் ஒரு பிள்ளை!


"ஷா ஜஹான் மனைவிகாக தாஜ் மஹால் கட்டினார் அவரை அவர் மகன் சிறை யில்  அடைத்து வைத்து இருந்தாராம் இதுலே  இருந்து என்ன தெரியுது ?"
"நல்ல கணவனாஇருந்தா மட்டும் போதாது நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 


11 October 2012

தின'சிரி' ஜோக் !!கேள்வி மேலே கேள்வி கேட்டா கொலையே விழும்!!

''எனக்கு ரெட்டைக் குழந்தை  பொறந்து இருக்கு!''

''மாற்றானா.சாருலதா வா?'' 

''மாற்றான்தான் !''  

''ஒட்டிப் பிறந்தவன்களா?வெட்டிப் பிறந்தவன்களா? ''

''உன்னை வெட்டப் பிறந்தவங்கடா!''

                                                           



தின'சிரி' ஜோக்!!!வலி வர வேண்டும் பெற்றோர்!

'என்னங்க ,மார்கழி முடியப்போகுது , நம்ம பொண்ணுக்கு டெலிவரி ஆகலையே?
'கவலைப்படாதே !தை பிறந்தா 'வலி 'பொறந்திடும்!


9 October 2012

தினசிரி ஜோக் !!!அவசியம் படிக்க வேண்டிய டைரி!

'அடுத்து நீங்க  எடுக்க  போற  படத்து பேர் ''ஒரு பைத்தியத்தின் டைரி ''யாமே ? '

'ஆமாம் ,அதுக்கு நீங்கதான் உங்க டைரியை கொடுத்து உதவணும் ,ப்ளீஸ்!'        

நன்றி; ஜூனியர்விகடன்.                                                                     பகவான்ஜி ,


8 October 2012

தினசிரி ஜோக் !!!ஆளாளுக்கு ஒரு பயம்!

பிறை  நிலாவை  பார்த்ததும்  தலைவர்  துள்ளி  குதிக்கிறாரே ,ஏன் ?
நிலா அபகரிப்பு வழக்கு வந்துடுமோன்னு பயந்துகிட்டு இருந்தார் !!



7 October 2012

தினசிரி ஜோக் !!!வேண்டுதல் பலிக்குமா?

தினசிரி  ஜோக் !!


'தூங்குறதுக்கு முன்னாலே ஏதோ வேண்டிகிறியே ,என்னது ?'  
''உங்களுக்கு முன்னாலே எனக்கு தூக்கம் வரணும்னுதான் ...!''
''ஏன் ?''
''நீங்க  போடற  குறட்டை  சத்தத்தில்  எனக்கு தூக்கம்  வர மாட்டேங்குதே !''

நன்றி: குமுதம் .                                                            பகவான்ஜி

6 October 2012

தினசிரி ஜோக் !!!நாணயம்ன்னா இதுதானா?

தினசிரி  ஜோக் !!!

''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாதுறதிலே  நாணயமானவரு ''|

''எப்படி?''

'ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திகிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமாபெயரை  மாத்தி கிட்டாரே !''

                                                                                           `பகவான்ஜி .                                
பிரசுரம்  செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !

ஜோக் எழுத்தாளர்களுக்கு பரிசு ரூபாய் 500, பம்பர் ஜோக்குக்கு 
ரூபாய் 1000 அள்ளிவழங்கும் தினமலர் வாரமலருக்கு 
ட்ரில்லியன் ட்ரில்லியன் நன்றி !!!!!!!!!!!!!


                      



5 October 2012

தினசிரி ஜோக் !!!அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு ?

தினசிரி  ஜோக் 

உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?

எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !!!!