31 October 2017

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)

*படித்ததில் இடித்தது :)
               ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ?''
                '' நீட் தேர்வு எழுதறவங்க முழுக்கைச் சட்டைப் போட்டுக்கக்கூட   அனுமதி இல்லைன்னாங்க , IAS தேர்வு எழுதப் போறவங்களை 'ப்ளுடூத் 'துடன் தேர்வு அறையில்  செல்ல எப்படி  அனுமதிச்சாங்க ?''
இடித்த செய்தியின் தொடுப்பு ....ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ். அதிகாரி கைது

திறமைக்கேற்ற பரிசு இது :)
          ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''