''இதிலே என்ன அதிசயம் ,சீனப்பெருஞ்சுவரில்இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''
31 May 2013
தின 'சிரி ' ஜோக்! 'சீனப்பெருங்''சுவரில் முட்டிக்கணும் போல இருக்கு !
''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
சிரி'கவிதை!வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!
உயரம் அதிகம் ஆக ஆக
விழுந்தால் அடியும் பலமாய் இருக்கும் ...
இந்த எண்ணம் இருக்கும்வரை
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !
30 May 2013
'சிரி'கவிதை!பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !
'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான
பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !
தின 'சிரி ' ஜோக்!ஸ்ரீ தேவி ,கமல்,தீபா ரசிகராய் இருப்பாரோ ?
'' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன் !''
29 May 2013
'சிரி'கவிதை!மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?
என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று
கடலழகில் கண்களை இமைக்க மறந்து
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும்
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?
28 May 2013
தின 'சிரி ' ஜோக்!பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?
''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''
27 May 2013
தின 'சிரி ' ஜோக்!பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?
''என் மாப்பிள்ளை பாசக்காரர்ன்னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
''என் மனைவியே,மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
'சிரி'கவிதை!வண்டிக்கு அவசியம் ஸ்டெப்னி ,நமக்கல்ல !
ஸ்டெப்னி ...
டிரைவர்கள் வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !
26 May 2013
'சிரி'கவிதை!உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?
ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின் எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'
25 May 2013
என்றும் வாழும் TMS !
சில வருடங்களுக்கு முன்னால் எதிர்ப்பார்க்காமல் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது ...
என் உறவினர் ஒருவர் மதுரை கீழவாசல் அருகில் உள்ள கிளினிக்கில் அட்மிட் ஆகியிருந்தார் .அந்த கிளினிக் இருக்கும் இடத்தை யாரிடம் விசாரிப்பது என்று பார்த்தபோது ...சிக்னல் அருகே ஒரு வீட்டில் ,ஈசி சேரில் ஒரு பெரியவர் சாய்ந்து அமர்ந்து இருந்தார் ,அவரிடம் சென்று என் மனைவி விலாசம் கேட்டு வந்தார் .டூ வீலரில் வெளியே நின்று இருந்த என்னிடம் வந்து 'அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது 'என் மனைவி சொல்லவும் நான் அவரை பார்த்தேன் ...அதிசயமாய் இருந்தது ,,அவர் அய்யா TMS தான் !மிகவும் எளிமையாக மேல்சட்டைக் கூட இல்லாமல் இருந்தஅவரை சந்திப்போமென நினைக்கவே இல்லை ..பிறகு அவரிடம் சென்று நலம் விசாரித்து எங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினோம் .
தமிழ் உலகத்திற்கே முகவரியாய் இருந்தவரிடமே இன்னொரு முகவரி விசாரித்தது நாங்களாகத்தான் இருப்போம் .இனி எந்த முகவரியில் அவரை சென்று சந்திப்போம் ?
உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
துக்கத்தில் ...
பகவான்ஜி ,
24 May 2013
தின 'சிரி ' ஜோக்!BIT &BYTE தெரிந்த கம்ப்யூட்டர் எஞ்சினீயர்!
''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்ன்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
''படிக்கிற காலத்திலே, என்கிட்டே 'பிட் 'கேட்டு 'பைட் 'பண்ணி பரிட்சை எழுதிவனாச்சே நீ !
23 May 2013
தின 'சிரி ' ஜோக்!காட்டின் நடுவே 'வன'மூர்த்தி !
''என் முதலாளிகிட்டே கார் ஓட்ட 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கன்னு சொல்றாரே ,ஏன் ?''
''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு சொல்லி இருக்கணும் !
22 May 2013
தின 'சிரி ' ஜோக்!புருஷனை மேலே அனுப்புறதிலே சந்தோசமா ?
''ஹலோ மேடம் ,நான் கீழே இருந்து வாட்ச்மேன் பேசுறேன் ...லிப்ட் வேலை செய்யாததால் பத்து நிமிசத்திலே பத்து மாடி ஏறிக் காட்டுறேன்னுச் சொன்ன உங்க வீட்டுக்காரர் ,மேலே வந்து சேர்ந்துட்டாரா ?''
''மேலே வரவே இல்லை ,ஒருவேளை மேலேயே போய்ச் சேர்ந்து விட்டாரான்னு பார்த்து சொல்றேன் !''
21 May 2013
தின 'சிரி ' ஜோக்! !அனுமந்து OK ! அரவிந்து NO!
''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம், 'அரவிந்து 'ங்கிற பெயரை நாங்க செலக்ட் செய்ததுதான்னு எப்படி சொல்றீங்க ?''
''அரவிந்த் ன்னு நீங்க சரியா நினைக்கலையே !''
20 May 2013
தின 'சிரி ' ஜோக்!மனுஷன் சாப்பிடலாமா நாய் பிஸ்கட்டை ?
''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்க நாயே உங்களை ஏன் கடிச்சது ?''
''அதோட பிஸ்கட்டை நானும் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்குப் பிடிக்கலைப் போலிருக்கே !''
'சிரி'கவிதை!புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !
ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட
சீனர்களும் சிங்களர்களும்
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !
19 May 2013
தின 'சிரி ' ஜோக்!A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை !
''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''
18 May 2013
தின 'சிரி ' ஜோக்!இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை !
''யாரும் வாங்க வரலேன்னா அந்த ஸ்வீட் கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''
''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''
''யாராவது வந்தா ?''
''அப்பவும் ஈ ஓட்டித்தான் ஆகணும் !''
சிரி'கவிதை!கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா ?
பிளைன் பிரியாணி வாங்கக்கூட
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !
17 May 2013
தின 'சிரி ' ஜோக்!இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது !
''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''
'சிரி'கவிதை!மகிழ்ச்சி தந்த காதல் துககமாகுமோ ?
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !
16 May 2013
தின 'சிரி ' ஜோக்!பெருசு, வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா ?
''மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...என் வீட்டு வாசல்லே எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
''உங்க பொண்ணு தலையிலே ரோஜாப்பூ இன்னைக்கி இருக்குமான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
'சிரி'கவிதை!மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் !
சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !
15 May 2013
தின 'சிரி ' ஜோக்!பழசை மறக்க நினைத்தாலும் ....!
''டேய் மச்சி ,H B D ன்னு பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
''நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''
14 May 2013
தின 'சிரி ' ஜோக்!புருசனுக்குத்தான் தலைஎழுத்து ,வேறவழியில்லையே !
''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''
''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே எனக்கும் கொடுக்கிறாங்களே !''
13 May 2013
தின 'சிரி ' ஜோக்!அக்னி வெயிலினால் வந்த மறதி !
''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு வந்து இருக்கீங்களே ,கொண்டு போன குடை என்னாச்சு ?''
''இதோ இருக்கே ...கோடை வெயிலை தடுக்கத்தானே அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் !''
'சிரி'கவிதை!இழப்பதற்கு ஒன்றுமில்லையா இதை தவிர ?
வெட்டப் பட்டு மடியில் விழும்
முடிகளைப் பார்க்கையில் ,,,
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால்
இன்றைய 'மன்னர்களுக்கு '...
பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?
12 May 2013
'சிரி'கவிதை!ஐன்ஸ்டீனும் செய்யாத வடை ஆராய்ச்சி !
வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன்
ஆஞ்சனேய பக்தனாகத்தான் இருக்கணும் ...
வடையை மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !
தின 'சிரி ' ஜோக்!கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் !
''இன்ஸ்பெக்டரான உங்க வீட்டுக்கு வந்த நான்கு கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் ஏன் சுட்டீங்க ?''
''மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்காக் கொடுக்கிறாங்களே !''
11 May 2013
'சிரி'கவிதை!பெண்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் !
வயசுப் பொண்ணு வீட்டில் இருந்தால் ஒரு வசதி ...
வாலிபப் பசங்க வீட்டை சரியாக அடையாளம் காட்டி விடுவார்கள் !.
10 May 2013
9 May 2013
Subscribe to:
Posts (Atom)