''உன் புருஷனை மாதிரி அல்பத்தை பார்த்ததே இல்லைன்னு ஏன் சொல்றே ?''
''செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொருத்துக்கோன்னு சொல்றார் !''
''ஏனாம் ?''
''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''
''செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொருத்துக்கோன்னு சொல்றார் !''
''ஏனாம் ?''
''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''
|
|
Tweet |
ஆகா அருமை
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி வாத்தியாரே !
ReplyDeleteஅது எப்படி ஆகும்...?!!!! ஹா...ஹா...
ReplyDeleteஅதனால் தான் அந்த அம்மா, அய்யாவை செருப்பை கழற்றி எறிவது போல் எறிந்து விட்டதாக கேள்வி !
Deleteநன்றி !
பதிவர் விழாவிலே தானே குட்ட்ப்போறேன் அப்படின்னு சொல்லிட்டு,
ReplyDeleteஇங்க்னவே குட்டிட்டீகளே?
எது எது எங்க எங்க சல்லிசா கிடைக்குமோ அது அதுக்காக பொறுத்து இருப்பது தாங்க பெருமை தரும் அப்படின்னு வள்ளுவர் சொல்லி இருக்காரே...
ஆனா ஜோக் என்னவோ நல்லாத்தான் கீது.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
ரொம்ப சூரி...இல்லை இல்லை ..சாரி சூரி சிவா !ரொம்ப வலிக்குதா சுப்புதாத்தா ?இங்கே இருந்தே உங்களுக்கு 'ரெய்கி 'பண்றேன் ...இப்போ வலி போயிருக்கணுமே !
Deleteஊஹூம்,,திருவள்ளுவர் சொன்ன மாதிரி தெரியலே ,யாரோ ஒரு தெருவள்ளுவர் சொன்னதா இருக்கும் !
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
அருமை
ReplyDeleteதங்கள் நகைச்சுவைப் பதிவைத் தினமும் எதிர்பார்க்கும்
நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி
தள்ளி விட்டாலும் துள்ளி எழும் ரசனைக்காரராச்சே நீங்க !மிக்க நன்றி !
Deletetha.ma 3
ReplyDeleteதாமா திரீக்கு நன்றி ரமணி சார் !
Deleteஎனக்கும் ஒண்ணு ஏற்பாடு பண்ணுங்க
ReplyDeleteகாலுக்கு செருப்பையும் ,தாலிக்கு பெண்ணையும் அவங்கஅவங்கதான் தேடிக்கணும் ...ஏன்னா,பிறகு கடிக்குதேன்னு வருத்தப் படக் கூடாதில்லே?
Deleteநன்றி !
பதிவர் விழாவுக்குப் போவோரின் செருப்புக்கள் ஜாக்கிரதை. அவ்வ்வ்
ReplyDeleteஎனக்கு கவலை இல்லை ...நான் கேன்வாஸ் சூவை கழற்றி வைச்சாத்தானே வம்பு ?எப்ப்பூடி நம்ம ஐடியா ?
Deleteநன்றி இக்பால்!
காலுக்கு செருப்பையும் ,தாலிக்கு பெண்ணையும் அவங்கஅவங்கதான் தேடிக்கணும் ...ஏன்னா,பிறகு கடிக்குதேன்னு வருத்தப் படக் கூடாதில்லே
Deleteஅருமை
என் கமென்ட் பதிலையும் படித்து ரசித்து பாராட்டியதற்கு நன்றி ரமணி சார் !
Delete