16 November 2014

கனவில் வந்த காந்தி 6

             நம்ம கில்லர்ஜி  கனவில் முதலில் வந்த 

காந்திஜி ,கரந்தையார் கனவிலும் வந்துவிட்டார் 

...வந்தவரை நன்றாக உபசரித்து என்னை 

சந்திக்குமாறு சொல்லி விட்டதால் ,இன்று   

 காந்திஜி என் கனவிலும் வந்து கேள்விகள் 

கேட்டார் .விடிந்தபின் ,கனவில் அவர் கேட்டதும் 

,நான் பதில் சொன்னதும் நினைவுக்கு 

வரவில்லை ..ஏற்கனவே கில்லர்ஜி,கரந்தையார் 

ஆகியோரிடம் கேட்ட கேள்விகள்தான் 

என்பதால் ...இதோ காந்திஜியின்  கேள்விக்கு 

,பகவான்ஜியின் பதில்கள் .....

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

              காந்திப் பொட்டலில் ...அது இங்கே மதுரையில் தான் இருக்கிறது ,ஒரு காலத்தில் மதுரை வந்த நீங்கள் ,மக்களின் வறுமை நிலைக் கண்டு உடுத்தியிருந்த ஆடைகளை தூக்கி எறிந்த  இடம்  இது !உங்களை 'அரைகுறை ஆடைப்பக்கிரி 'ஆக்கிய அந்த இடத்தில்  பிறந்து தவழ்ந்தவன்  என்ற மண் பாசம் இன்னும் என்னை விடவில்லை !

 02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

             அந்த பதவியைப் பிடிக்கும் அளவிற்கு  கிரிமினல் புத்தி எனக்கில்லையே ,எப்படி வர முடியும் ?

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்? 

             இந்தியாவில்  இருக்கப்  பிடிக்காமல்தானே அவர்கள் வெளிநாட்டிற்கு போயிருக்கிறார்கள் ,அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார்கள் ?

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

            நிச்சயமா ,இந்தியாவில் முதியோர்களே இருக்கக் கூடாது ,கருணைக் கொலைத் திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் !ஒண்ணு, அவங்களா சாகணும்,இல்லேன்னா கருணைக் கொலை செய்யப் படுவார்கள் !

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

          பதவிக்கு வந்தால் எப்படியும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள் ,தேர்தல் டெபாசிட் தொகையை பதவிக்கு ஏற்றவாறு கோடிக் கணக்கில் கட்டச் சொல்லிட வேண்டியதுதான் !

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?

        மதிப்பெண்ணை  தவறாகக் கூட்டிய ஆசிரியர்கள் 'தூய்மை இந்தியா 'திட்டத்திற்கு சேவை செய்ய அனுப்பப் படுவார்கள் .அவர்களே குப்பையைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, அள்ளும் மோசடியில் ஈடுபட அனுமதிக்கப் பட மாட்டார்கள் !

07 விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?

          அவர்களின் ஆராய்ச்சிக்கு  வேண்டிய  வசதிகளை செய்து தர நமக்கு வக்கில்லை  என்பதால் விஞ்ஞானிகள் அனைவரும் நாடு கடத்தப் படுவார்கள் !

08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

              நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் ,அவர்களுக்கு ,சிந்தனை செய்கிற யாருமே தேவையில்லையே ,டாஸ்மாக் அடிமைகள் தானே தேவை ?..அவன்தான் தண்ணி அடிச்சிட்டு விழுந்துக் கிடப்பானே தவிர லஞ்ச லாவங்களை கண்டுக்க மாட்டானே!

 09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

             கறுப்புப் பணத்தைப் போட வெளிநாட்டுக்கு ஏன் போகணும் ?இங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளும் வகையில் தெளிவான  புதிய பொருளாதாரத் திட்டத்தைக்  கொண்டுவருவேன் ! 

10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?

                   இது வரைக்கும் நல்லாத்தானே கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்க ?திடீர்னு பாவம் புண்ணியம்னு ஏதேதோ சொல்றீங்களே,நியாயமா ?சரி .கேட்டுவிட்டதால் சொல்கிறேன் ....மானிடப் பிறவி முடியாது என்றால் தெய்வப் பிறவியைக் கொடுங்கன்னு கேட்டு வாங்கிக்கறேன் !
-----------------------------------------------------------------------------------------------------------------

 என் பதில்களை கேட்டுக் கொண்டிருந்த காந்திஜி பொறுமை இழந்துவிட்டார் போலிருக்கு ..ஹே,ராம் என்று சொல்லிவிட்டு பறந்து விட்டார் !

இப்போ ,உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ....இந்த பத்து கேள்விகள் உங்களிடம் கேட்கப் பட்டிருந்தால் உங்கள் பதில் என்ன ?நீங்களும் உங்கள் தளத்தில் சொல்லலாமே ?பத்து பேருக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு என்றில்லை ,யார் வேண்டுமானாலும் சொல்லலாம் !

37 comments:

  1. பதில்கள் பட், படீர், படார்....

    ஐந்தாவது பதிலை நிஜமாகவே நடைமுறைப்படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. காந்திஜி பல வட்ட மேஜை மாநாடுகளில் பல பேரின் கருத்துக்களைக் கேட்டவர் ,ஜோக்காளியின் பதில்களால் நொந்து போயிருப்பாரோ ?

      டெபாசிட் என்பதே ,சம்பாதிக்க செய்யும் முதல்தானே :)
      நன்றி !

      Delete
  2. நண்பரே தங்களது இலக்கம் 6
    மீண்டும் வருவேன்

    ReplyDelete
    Replies
    1. இலக்கத்தை மாற்றிவிட்டேன் !தகவலுக்கு நன்றி !

      Delete
  3. பகவான்ஜி அனைத்துமே படார், படார் என வெடித்ததுபோல் இருக்கிறது பதில்கள் உண்மையிலேயே காந்தி பறந்திருப்பார் அருமை.

    நண்பரே தங்களது தலைப்புஎண் 6 ஆகவே தயவு செய்து மாற்றவும்.
    1. கில்லர்ஜி
    2. கரந்தை ஜெயக்குமார்
    3. Dr. B. ஜம்புலிங்கம்
    4. மைதிலி கஸ்தூரி ரெங்கன்
    5. துரை செல்வராஜூ
    6. பகவான்ஜி

    நன்றி
    அன்புடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் முத்துநிலவன் அவர்களும் உங்கள் பந்துடன் விளையாடியுள்ளார் ,அவரையும் கணக்கில் சேர்த்துக்குங்க :)
      நன்றி

      Delete
  4. ஆஹா சூப்பர் நீங்கள் தெய்வப்பிறவியெனில் வரம் கேட்க இப்பவே ரெடி தோழர்..

    ReplyDelete
    Replies
    1. வரம் வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமாவே பணம் செலவாகும் ,பரவாயில்லையா?:)
      நன்றி

      Delete
  5. தங்கள் பாணியில் பதில்கள் சும்மா அசத்தல் தாங்க...

    ReplyDelete
    Replies
    1. காந்திஜிக்கு ஆயுதபாணியா இருந்தா பிடிக்காது .மற்றவங்க பாணி எனக்கும் வராதே :)
      நன்றி

      Delete
  6. அட!! இந்த பதிவுக்கு ஆளாளும் ஜோக்கடிக்க, நீங்க மட்டும் ரொம்ப சின்சியரா பதில் சொன்னமாதிரி இருக்கு பாஸ்!!!! சூப்பரு!!

    ReplyDelete
    Replies
    1. நானா சின்சியரா ,ஜோக்கடிக்காதீங்க :)
      நன்றி

      Delete
  7. யதார்த்தமான பதில்கள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதுதானே காந்திஜிக்கும் பிடிக்கும் :)
      நன்றி

      Delete
  8. ஆஹா,, தெய்வப்பிறவி.. அருமை!..
    அஸ்திவாரத்தை - பலமாகப் போடுங்கள்!..

    ReplyDelete
    Replies
    1. அதாவது அஸ்திவாரம் ஸ்ட்ராங்.பில்டிங் வீக் ஆகிவிடக்கூடாதுன்னுசொல்றீங்க ,அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  9. முதல் 9 கேள்விகள் வரைக்கும் நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நினைத்தேன். ஆனால் அந்த கடைசி பதிலில் வைத்தீர்களே ஒரு ஆப்பு - நீங்கள் கை தேர்ந்த அரசியல்வாதி தான்.

    ReplyDelete
    Replies
    1. இருங்க ,என்ன சொன்னேன்னு ஞாபகம் இல்லே ,பார்த்திட்டு வந்து சொல்றேன் ....(உடனே இந்த நோய் இருந்தா பக்கா அரசியல்வாதிதான் சொல்வீங்களே )
      நன்றி

      Delete
  10. பத்து கேள்விக்கான பதில்களும் மறக்க முடியாத..மறுக்க முடியாத வைகள்.....

    ReplyDelete
    Replies
    1. நம்ம சொக்கன் ஜீக்கு புரியற மாதிரி நீங்கதான் சொல்லணும் :)
      நன்றி

      Delete
  11. உங்களுக்கு விழுந்த குண்டை எல்லோர் தலையிலும் போட்டு வெடிக்க வைச்சிட்டியளே! நானும் முயன்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயகோ ,இங்கே விழுந்த குண்டு அங்கேயும் விழுந்து விட்டதா :)
      நன்றி

      Delete
  12. ஜி! நல்ல நகைச்சுவை. உங்கள் கனவுதேசத்தில் முதியோர்களே இருக்க மாட்டார்கள்.
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. நானே இருக்க மாட்டேனே :)
      நன்றி

      Delete
  13. ஜோக்காளியின் பதில்கள் பார்ப்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் சீரியஸாகவே இருக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆழமா யோசிக்கிறீங்களே ,சுரேஷ் ஜி :)
      நன்றி

      Delete
  14. ///கள்ளப் பணத்தைப் போட வெளிநாட்டுக்கு ஏன் போகணும் ?இங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளும் வகையில் தெளிவான புதிய பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுவருவேன் ! ///

    நான் ரசித்த பதில்... அருமை

    ReplyDelete
    Replies
    1. இப்போ மாட்டும் என்ன வாழுது ?கறுப்புப் பணம் உள்நாட்டிலேயே பினாமி பேரில் சேர்ந்து கொண்டேதானே இருக்கு ?:)
      நன்றி

      Delete
  15. பகவான்ஜியின் பதில்கள் அனைத்தும் பலே... பலே...

    ReplyDelete
    Replies
    1. பலே ,பலேன்னு நீங்கதான் சொல்றீங்க ,காந்திஜி ஒண்ணும்சொல்லாம போயிட்டாரே :)
      நன்றி

      Delete
  16. பத்தாவதை மிக மிக ரசித்தேன் பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் சொல்றதோ ,வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த மாதிரின்னு :)
      நன்றி

      Delete
  17. ஹஹஹ் இது இது இது இதுதான் பகவான் ஜியின் அக்மார்க் பதில்கள்! சூப்பர் ஜி! கலக்கிட்டீங்க போங்க!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் காந்திஜி என்பதால் பயபக்தியோடு பதில் சொல்ல ,நான்தான் பயமும் ,பக்தியும் இல்லாமல் பதில் சொல்லிட்டேன் போலிருக்கே :)
      நன்றி

      Delete
  18. ஐயா பகவான்ஜி,

    எல்லாகேள்விகளுக்கும் உங்களின் பதில் அதிரடியாக இருந்தது.

    முதியவர்கள் விஷயத்தில் கொஞ்சம் அவசர பட்டிட்டிங்கலோனு நினைக்கிறேன்.

    கொஞ்சம் தொலை நோக்கு பார்வை இருந்திருக்க வேண்டுமோ.

    அந்த பதில் நாளைக்கு நமக்கே ஆப்பாக மாற வாய்ப்பு உண்டல்லவா.

    அருமையான பதில்கள், பத்தாவது பதில் , வரம் கொடுத்தவன் தலையிலே கைய வைக்கிற உங்க தைரியத்தை என்ன சொல்வது.

    இப்பவே நீங்க பகவான் தானே பின்ன எப்படி அடுத்த பிறவியிலும் அதே.?

    வாழ்த்துக்கள் ஜி.

    நன்றி

    கோ.

    ReplyDelete
    Replies
    1. முதியவர்கள் படும் பாடை நினைத்துத்தான் அப்படி சொன்னேன் .பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் ,அரசாங்கமும் கண்டுக்காத நிலையில் எப்படி வாழமுடியும் ?போதும் ,இந்த துயரமென்று செத்துப் போக நினைத்தாலும் 'கருணையுள்ள 'சட்டம் தடுக்கிறதே !
      அடுத்த பிறவி என்று இருக்கிறதா ?தூங்கினாலே எங்கே இருக்கிறோமென்று தெரியவில்லை !அடுத்த பிறவியை எப்படி நம்புவது ?
      நன்றி

      Delete