28 November 2014

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி ?

------------------------------------------------------------------------------------------------------------------------
சொல்றதுக்கு  நல்லாவா இருக்கும் ? 

                ''பத்து வீடு பார்த்ததில் நடுத்  தெருவிலே இருக்கிற வீடு நல்லாயிருக்கே ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''

             ''நடுத்  தெருவிலே இருக்கேன்னு சொன்னா எல்லோரும்  சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வேண்டாத மேனேஜரை விரட்டும் வழி ?

               ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
               ''புதுசா வந்த மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்கதானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...
1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 
அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !


இதற்கு வந்த ,ரசிக்க வைத்த கமெண்ட்.....




    1. அமெரிக்கத் தம்பதிகள் இப்படி வாழ்கிறார்கள் என்றால் ,அது அவர்கள் செய்த தவம்தான் இல்லையா ?
      நன்றி
      Delete
  1. தவம் எல்லாம் கிடையாது..பகவான்ஜி! இது ரொம்ப சிம்பிள்! தமிழ் அறிவு இல்லை என்றால் கீழ் கண்ட வாக்கியம் புரியாது!

    உண்மை தான்: ஆணுக்கு ஜான் [John] மிக முக்கியம்!
    க+
    ReplyDelete

    Replies


    1. ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பதும் எல்லோருக்கும் புரியும் பழமொழி ஆச்சே !
      நம்ம ஜானுக்கு சறுக்கலே இல்லைன்னு உங்கள் விளக்கத்தின் மூலமாய் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் !
      நன்றி

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...


இதுவும் பழிக்கு பழியா ?

          ''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் 
வைச்சு இருந்தாராமே?''
             ''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது 
அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!'' 


 திருமண அகழி !

மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனையே male !

30 comments:

  1. 01. அப்படினாக்கா வடக்குத் தெருவுக்கு போங்களேன்..

    02. வேட்டு மேனேஜருக்கா ? அப்பனோட வேலைக்கா ?

    03. ஜான் ஸூப்பர் ஐயா ஜியெம்பி கதையில் வந்ததும் இப்படியே....

    04. பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம்

    05. ஸூப்பர் மேன் Sorry Male

    த.ம. நாளை.

    ReplyDelete
    Replies
    1. 1. வடக்'கத்தான் '' என்று மனைவியைத் தவிர வேறு யாராவது சொன்னால் வேறுமாதிரியா கேக்குமே :)
      2.சின்ன பையன் ,உங்க கோணத்தில் யோசிக்கலே :)
      3.நீங்க GMB அய்யாவை நினைத்ததாலோ என்னவோ ,அவரும் (கீழே)கமெண்ட் போட்டிருக்கிறாரே :)
      4.அதுக்காக இப்படியா ?நாய்க்கு பேர் வைக்கிறது :)
      5.சூப்பர் male என்று சொல்ல முடியலியா:)
      நாளையா?திருநாளைப் போவார் நாயனார் மாதிரி ஆயிடாதீங்க :)
      நன்றி

      Delete
  2. பழிக்கு பழி சூப்பர். அவர் இந்தியான்னு தான் பேர் வச்சு தப்பிச்சுட்டாரு. வேற ஒரு அரசியல்வாதியோட பேரை வச்சிருந்தாருன்னா!!!!

    ReplyDelete
    Replies
    1. ஜிம்மி கார்ட்டர் பிறக்கிற முன்னாடி இருந்தே ,நாய்க்கு ஜிம்மின்னு பேர் வச்சதால் நாம தப்பிச்சோம் :)
      நன்றி

      Delete
  3. Replies
    1. தங்களுக்கு வந்த ஆசானின் கடிதத்தை நானும் ரசித்தேன் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. வலையுலக நண்பர் கில்லர்ஜி உடனான உங்கள் நட்பை நானும் ரசிக்கிறேன் :)
      நன்றி

      Delete
  5. ஹஹ்ஹஹஹ அனைத்துமே ரசித்தோம்......

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  6. மேனஜரை விரட்ட நல்ல வழி...ஹி..ஹி

    ReplyDelete
    Replies
    1. இப்பவே வெடி வைச்சா ,டிரான்ஸ்பர் ஆகி போகும் போது பெரிய வெடியா போடுவாரோ :)
      நன்றி

      Delete
  7. எனக்கு மற்ற ஜோக்ஸ் சை விட பூனை ஜோக் ரொம்ப பிடிச்சுருக்கு:)))) நான் அமெரிக்க பூனையை சொல்லல பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. அகழியில் விழுந்த பூனை கதி ,அதோ கதிதான் ...என்பதில் அப்படி ஒரு சந்தோசமா :)
      நன்றி

      Delete
  8. பாருங்க... எதெல்லாம் பிரச்னை ஆவுதுன்னு!

    நல்லவேளை, வெங்காய வெடி லெவல்லயே நிக்கறாங்களே...

    கமெண்ட் ரசிக்கச்சிரிக்க வைத்தது!

    ஹா....ஹா.....ஹா...

    ஹிஹிஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. சின்னப் பிள்ளைங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதோ :)

      பொடி வைத்து கமெண்ட் போடுவதற்கு நம்பள்கிக்கு சொல்லியாத் தரணும் :)
      நன்றி

      Delete
  9. ஆஹா ...சூப்பர் சார்.நடுத்தெருவுல இருக்கேன்னு சொல்வது கடினம் தான் ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. எதிர்மறையான அர்த்தம் தரும் தெருவில் எப்படி இருக்க முடியும் :)
      நன்றி

      Delete
  10. இதையெல்லாம் ‘ரூம்’ போட்டு யோசிப்பீங்களோ.? எனக்கு சுட்டுப் போட்டாலும் இம்மாதிரி யோசிக்கவோ எழுதவோ வராது. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இப்படி மொக்கை போடவுமா ரூமைப் போடணும் :)
      நன்றி

      Delete
  11. முதல் ஜோக் கலக்கல்! பையன் அப்பாவோட வேலைக்கு வேட்டு வச்சுருவான் போலிருக்கே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேட்டு,இரண்டு வேலை செய்யும் போலிருக்கே :)
      நன்றி

      Delete
  12. Replies
    1. ஏற்கனவே ,முதல் கமெண்ட்டில் சொன்னது கனவேதானா :)
      நன்றி

      Delete
  13. Replies
    1. ஜி ,கில்லர்ஜி காலையிலேயே கமெண்ட்போட்டு இப்போ வோட்டு போட்டார் ,நீங்க இப்போ வோட்டு போட்டு ,நாளைக்கு கமெண்ட் போடுவீங்களா :)
      நன்றி

      Delete
  14. நடத் தெருவு...எனக்கு புரியலீயே.............

    ReplyDelete
    Replies
    1. நடுத்தெருவில் வந்து போராடுகிற உங்களுக்குமா புரியலே :)
      நன்றி

      Delete
  15. நடுத்தெருவில் (திருச்சி மேலசிந்தாமணியில் ஒரு தெருவின் பெயர் நடுத்தெரு) வசிப்பவர்கள் , நாங்கள் MIDDLE STREET இல் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வாரகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது சரியா போச்சே :)
      நன்றி

      Delete