2 November 2014

இதுவுமா கிரிமினல் குற்றம் ?

 -------------------------------------------------------------------------------------------------------------------------
 சர்வருக்கு வந்த குழப்பம்    !  
           ''என்ன கேக்குறீங்க ,எங்க ஹோட்டலில் இல்லாத 'பொங் 'கொண்டு வரச் சொல்றீங்களே ?''
                ''எப்போ சாப்பிட்டாலும் பொங்கலில் கல்லு வருதுன்னுதான் அப்படி கேட்டேன் !''
               


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
..
இதுவுமா கிரிமினல் குற்றம் ?
              ''வெள்ளையை  கருப்பாக்க  நீங்க உதவுறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
                     ''உங்களுக்கு யாரோ தப்பா  தகவல் கொடுத்திருக்காங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் சார் !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கொன்ற பாவம் போகுமா ?

             ''வீட்டுலே  அட்டகாசம்  பண்ணிக்கிட்டு  இருந்த   
எலியை அடிச்சாச்சு!அந்த  எலிக்கறியே இப்போ 

தின்னுதான் ஆகணும்னு சொல்றீயே ,ஏன்?

                       
              ''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு  


சொல்றாங்களே!!"

16 comments:

  1. கல்லு வருமா ..ஹஹஹா

    கருப்புக்கு இப்படியா ..?

    எலிக்கறி..? அடடே.பாவம் அவர்..

    தம 1
    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி

    ReplyDelete
    Replies
    1. 1.பொங்கலில் கல் வருவதால் பொங் என்று சொன்னது ,சரிதானே :)
      2.அதுதான் தப்பாப் போச்சே :)
      3.இனிமேலே எலியை அடிக்கவே மாட்டார் :)
      நன்றி

      Delete

  2. ''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்களே!!" என்று சொல்கிறீர்கள்...

    ''தின்றால் போச்சுன்னு கொன்றால் பாவம் தானே!!" என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லையே...

    வெள்ளை மயிருக்குக் கறுப்பு டை அடிக்கிறது
    ஆள் மாறாட்டத்திற்கு உதவுவதால்
    கிரிமினல் குற்றம் தானே!

    ReplyDelete
    Replies
    1. பாவம் என்பதை உணர்ந்தால் உயிர்ப் பலி ஏன் கொடுக்கப் போகிறார்கள் ?

      ஓ ,இப்படியும் ஒரு கண்ணோட்டம் இருக்கா ,நன்று !
      நன்றி

      Delete
  3. ஆஹா சூப்பர் சார்..

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் பதிவர்கள் சந்திப்பில் உங்கள் நூலும் சூப்பராய் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டதே :)
      நன்றி

      Delete
  4. ஹஹாஹஹஹ் அருமை ஆனா ஜி அது நடுல என்ன ஜி! ஒண்ணுமே புரியல....ஏதொ க்ரீக் லாட்டின் போல....புரியாத பாஷை...கொன்ற பாவம் போகுமாக்கு மேல.....பின்னும் ஒருமுறை வந்து பர்க்கின்றோம்...அது வருதான்னு...

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணுமே புரியலே ,நானறியாத க்ரீக்,லாட்டின் எல்லாம் வருதா :)
      நன்றி

      Delete
  5. ஹஹாஹஹஹ் அதமிழ்மணம் ஓட்டு போட்டதும் அந்த க்ரீக் லாட்டின் தமிழானது.......

    எலிக்கறி?!! அயைய்யோ....

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை.கூகுள் ஆண்டவர் காப்பாற்றிவிட்டார்!

      அய்யையோவா ,எலிக்கறியை சாப்பிடவும் மனுஷன் இருக்கத்தானே செய்றான் :)
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. பொங்கலில் முந்திரிப் பருப்பு போல் ருசிக்க முடிந்ததா :)
      நன்றி

      Delete
  7. கொன்ற பாவம் போக்க..எதுக்கு..காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் அலைஞ்சிட்டுகிட்டு....இதை கடைபிடிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. காசி ராமேஸ்வரம் போய் அங்கே சாப்பிடுற அசைவத்துக்கு எங்கே போய் பாவத்தைக் கழுவுறது :)
      நன்றி

      Delete
  8. பொங்’கல்’ - :)))

    கொன்றால் பாவம் - உணர்ந்தால் நல்லது.

    டை அடிப்பது குற்றமா? நல்ல கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. பொங்'கல் ' கடிச்சாப் போகுமே பல் :)

      விசேசம் வைக்கிறதே ஆடுஅறுக்கத்தானே,எங்கே உணர்றது :)

      குற்றம் என்றால் பலபேர் தலை வெளுத்து போகும் :)
      நன்றி

      Delete