6 November 2014

கணவனை இப்படியும் வேலை வாங்கும் மனைவி ?

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவாளா ?

            ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
               ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

கணவனை வேலை வாங்கும் மனைவி ?

               ''இப்போ பேட்டிங் பண்றது யாருன்னு நம்ம  பையன் கேட்டதுக்கு  'கலுவிதரனா'ன்னு சொன்னேன் ...நீ ஏன்,மீனைக் கொண்டுவந்து என் முன்னாடி வைக்கிறே  ?'' 
                ''கழுவிதரணுமான்னு நீங்க கேட்ட மாதிரி என் காதிலே விழுந்ததுங்க !''

மழலை அறிந்த முதல் ஒலி !

யார் தேற்றியும் அழுகையை நிறுத்தாத மழலை ...
தாயின் தோளில் சாய்ந்ததும் கப்சிப் ஆனது ...
வழக்கமாய் கேட்கும் லப்டப் ஒலி  கேட்டு !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

               ''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே 
என்ன கேட்டார்?''
                 ''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!

டெங்கு ...அந்த பயம் இருக்கட்டும் !

எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும் 
மூடிக் கிடப்பது ,,திருடனுக்கு பயந்து அல்ல ,
கொசுவுக்கு பயந்துதான் !

35 comments:

  1. இரண்டாவது ஜோக் - எழுத்துக்கள் பெரியதாக மாறி அடுத்த வரிசை எழுத்துக்களோடு சேர்ந்து விட்டது. படிக்க முடியவில்லை. அதனை திருத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. திருத்திய மைந்தனானேன் சொக்கன்ஜி :)
      நன்றி

      Delete
  2. மழலை அறிந்த முதல் ஒலி - அருமை.


    ReplyDelete
    Replies
    1. பால் மழலைக்கு புரிந்த பால மொழி அதுதானே :)
      நன்றி

      Delete
  3. Replies
    1. ஜோக் அருவியைப் போன்றே ஜோக் சுரங்கம் என்ற வாசகம் அருமை ,உங்கள் கமெண்ட்டை ரசித்தேன் :)
      நன்றி

      Delete
  4. ஒரு ஆம்லேட் கல்லுக்கு ஆர்டர்
    பண்ணிவிடவேண்டியதுதான் வேற வழி ?
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு கல்லு வாங்கிடலாம் .முட்டை தோசை எதிலே போடுவதுன்னு குழப்பம் வருமே :)
      நன்றி

      Delete
  5. Replies
    1. ரெண்டு கல்லுக்கும் சேர்த்து நீங்க போட்ட ரெண்டாவது வோட்டுக்கு நன்றி :)
      நன்றி

      Delete
  6. ரசித்துச் சிரித்தேன் பகவான் ஜி.

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செய்த மூன்று காரியமும் மிகச் சரியே :)
      நன்றி

      Delete
  7. தோசைக் கல்லுப் போலே
    ஆம்லேட் கல்லு இருக்கோ?

    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்லேட்டை நம்ம தமிழ் பட ஹீரோக்கள், நாயகியின் தொப்புளில் கூட போட்டார்களே,எப்படி வெந்தது என்றுதான் தெரியவில்லை :)
      நன்றி

      Delete
  8. தங்களின் ஆம்லேட்டை ரசித்தேன். மதுரையில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே ,அன்றைய சாப்பாட்டில் ஆம்லேட் வைக்க முடியாததில் வருத்தமே :)
      நன்றி

      Delete
  9. 01. இதையாவது தெரிஞ்சு வச்சு இருக்காளே இதுவே அவன் செஞ்ச புண்ணியம்.
    02. பேராலே வீட்டுல குழப்பம் வந்துடும் போலயே....
    03. தாயின் இதயத்தின் மகிமை.
    04. சந்தேகத்தை தீர்த்து வைப்பது குருவின் கடமை இல்லையா ?
    05. திருடன் வீடும் இதற்க்கு உட்பட்டதா ?

    ReplyDelete
    Replies
    1. 1 ஆம்லேட் கிடைக்காட்டி போகிறது ,புண்ணியம் பண்ணியும் பிரம்மச்சாரி ஆகாமல் இருந்தால் சரி :)
      2.கழுவி ஊற்றாமல் இருந்தால் சரி :)
      3.இந்த மகிமைக்கு மகமை எவ்வளவு தந்தாலும் ஈடாகுமா :)
      4.இப்படி நேரடியாய் தாக்குவது சிஷ்யனின் மடமையில்லையா :)
      5.உட்படாது .இரவில் கடிக்கும் கொசுவுக்கு பயந்துதானே கொள்ளை அடிக்க கிளம்பி விடுகிறான் :)
      நன்றி

      Delete
  10. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை.. பகிர்வுக்கு நன்றி.தம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மழலை அறிந்த முதல் மொழியும் பிடிச்சுருக்கும்னு நினைக்கிறேன் :)
      நன்றி

      Delete
  11. நன்றாக சிரித்தோம் சிந்திக்கவும் வைக்கிறதே...
    தொடரட்டும் நற்பணி

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைத்ததில் மகிழ்ச்சி :)
      நன்றி

      Delete
  12. Replies
    1. என்னை சந்தோசப்படுத்திப் பார்க்க உங்களுக்கும் மகிழ்ச்சி போலிருக்கே :)

      Delete
  13. யாரு கெட்டவன் கொசுவா...?திருடனா....? என்று கேட்கத் தோன்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நம்ம லியோனி தலைமையில் பட்டி மன்றம் நடத்தித்தான் முடிவெடுக்கணும் :)
      நன்றி

      Delete
  14. நம்ம ஜோக்காளிப் பேட்டை பக்கம் வந்ததற்கு நன்றி :)

    ReplyDelete
  15. அஹஹ்ஹாஹ் மிகவும் ரசித்துச் சிரித்தோம்! ஜி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததற்கும் ,சிரித்ததற்கும் நன்றி !

      Delete
  16. சிறப்பான நகைச்சுவைகள்! கலுவிதரனா ஜோக் டைமிங்கில் அசத்துகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அந்த கணவன் கழுவுற தண்ணியிலே நழுவுற மீன் மாதிரி ,அவரையும் வேலை வாங்கிறதுன்னா சும்மாவா :)
      நன்றி

      Delete
  17. குறுவியிடம் கேட்க வேண்டிய கேள்வியை...குருவிடம் கேட்டால் ..............

    ReplyDelete
    Replies
    1. ஏன் ,குருவி என்ன சிட்டுக் குருவி லேகியமா தயாரித்து விற்கிறது :)
      நன்றி

      Delete
  18. மழலை அறிந்த ஒலி - அருமை......

    கொசு - அந்தப் பயம் இருக்கட்டும்! :)

    ரசித்தேன்...

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இதை அன்றே கவனிக்காமல் விட்டு விட்டேனே ,சாரி !
      நன்றி வெங்கட் ஜி :)

      Delete