10 November 2014

கனவுக் கன்னி தெளிவாய் தெரியாமல் போயிருப்பாளா ?


-----------------------------------------------------------------------------------------------------------------------   
அந்த உரிமை கபாலிக்குத்தானே ?           
                         ''ரௌடி கபாலி ,போலீஸ்கிட்டே என்ன வாக்குவாதம் பண்றான் ?''
             ''தன்னோட ஏரியாவில் போலீஸ் மாமூல் வசூல் பண்ணக்கூடாதுன்னுதான் !'' 


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா ?

''என்னங்க , தூங்குறப்போ கண்ணாடியை ஏன் மாட்டிக்கிறீங்க  ?''

''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
தானா பேசினா பைத்தியமா?
               ''தானாப்பேசிகிட்டு போறப் பைத்தியங்களை ,பைத்தியம்ன்னு சொல்ல முடியலையா ,ஏன் ? ''

             ''செல்போன் ப்ளுடூத்லே பேசிக்கிட்டு போறவங்களைப் பார்த்தாலும்  அப்படித்தானே இருக்கு!''


இது நேற்று போட மறந்த பதிவு ....

ரஜினியின் ஜப்பானிய ரசிகை தமிழக மருமகளானார்!

நமக்கு ஜப்பானிய புருஸ்லி ஜெட்லியை பிடிக்கும் ...
ஜப்பான் பெண் என்ஜீனியர்  'தனே அபே 'வுக்கு பிடிச்சதெல்லாம் நம்மூர் இட்லி தானாம் ...
சூப்பர் ஸ்டார் ரஜினியையும் பிடிச்சதாலோ என்னவோ ....
அவர் மனசுலேயும் எப்போ வரும் ,எப்படி வரும் தெரியாமல் இருந்த காதல் நிச்சயமாய் வந்தேவிட்டது ...
ரஜினியின் சங்கர் சலீம் 'சைமன் 'கேரக்டரை விரும்பி இருப்பாரோ என்னவோ ...
நம்ம ஊர் ஆண்டனி பிரகாஸ்மேல் காதல் மலர்ந்திருக்கிறது ...
 நான்காண்டுக்கு முன் கன்னியாகுமரிக்கு வந்தாராம் தனே அபே ...
நட்சத்திர ஹோட்டலில் ரூமை உடனே தராமல் காக்க வைத்ததால் வெறுப்பாகி வரவேற்பாளரிடம் வாக்குவாதம் செய்கையில் ...
அப்போது நம்ம ஆண்டனி பிரகாஸ் பிரகாசமாய் 
பிரவேசித்து உள்ளார் ...
உடனே தனே அபேவுக்கு அட்டகாசமாய் உடனே அறை தயார் செய்து கொடுத்துள்ளார் ...
அவரின் கனிவான பேச்சும் ,உபசரிப்பிலும்  மயங்கி விட்டாராம் தனே அபே ...
அதுவும் ஒரே ஒருநாள் பழக்கத்தில் ...
ஜப்பானுக்கு சென்ற பின்னும் செல் ,இ மெயில் மூலமும் தொடர்ந்த நட்பு ,காதலாகி விட்டதாம்...
இதற்காகவே தான் பணி புரியும்  கார் கம்பெனியின் டெல்லி கிளைக்கு  மாறுதலாகி வந்துள்ளார் ...
கன்னியாகுமரியிலும் ,டெல்லியிலும் மாறி மாறி கடலைப் போட்டுக் கொண்டு இருந்தார்களாம் ...
கடலைப் போட்டது  போர் அடித்து நேற்று முன் தினம் ...
இருவீட்டார் சம்மதத்துடன் கன்னியாகுமரியில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளார்கள் ...
நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ...
இந்த இருவரின் காதல் நாடு விட்டு நாடு தாண்டி இருப்பதை நினைக்கும் போது ...
நாமென்ன நினைப்பது ?...
நம்ம ஊர் கலாசாரக் காவலர்கள் தான் நினைத்துப் பார்க்கணும் ! 

37 comments:

  1. 01. ஒரு உறையில இரண்டு கத்தி இருக்க கூடாது

    02. தெரியுறதை தொடைச்சா போதாதா ?

    03. நவீன பைத்தியங்களா ?

    04. நிலைத்தோங்கட்டும் இந்+பான் கூட்டுறவுக் காதல்

    ReplyDelete
    Replies
    1. 1 இரண்டு கத்தி வைக்கிற மாதிரி உறையை தைக்க முடியாதா என்ன :)

      2.முதலில் ஒழுகுற ஜொள்ளை தொடைச்சுக் கிடட்டும்:)

      3.அதுவும் இளம் வயதிலேயே :)

      4.பிறக்கிற குழந்தைக்கு ரஜிலீ ன்னு பெயர் வைப்பாங்களா :)
      நன்றி

      Delete
  2. சார், நம்ம ஊர் கலாசாரக்காவலர்கள் எல்லாம், இப்போது கோலிவுட் பக்கமும், அடுத்த தேர்தலுக்கு கூட்டணி தேடுவதிலும் ‘பிஸி’யாக இருப்பதாக, தகவல்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் எப்போது என்ன செய்ய வேண்டுமென்று திட்டம் தீட்டுவதில் கெட்டிக்காரர்களாச்சே:)
      நன்றி

      Delete
  3. Replies
    1. பையன் ஜப்பான் பொண்ணைக் காதலிச்சான் தப்பிச்சான் ,ஜாதி மாறி இங்கேயுள்ள பொண்ணைக் கை பிடித்து இருந்தால் ...ரயில்வே தடத்தில் தள்ளி இருப்பார்களே :)
      நன்றி

      Delete
  4. அதெப்படி கனவு கன்னி..கனவுதால் அம்சமாக தெரிவாள்.. எவர் தொந்தரவும் இல்லாமல் காட்சியளிப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. நம்மாள் HD தரத்தில் பார்க்க நினைக்கிறாரே :)
      நன்றி

      Delete
  5. எங்க கொஞ்சம் அண்ணியின் தொலைபேசி எண்ணைச் சொல்லுங்க
    இந்தக் கனவில நடக்கிற கூத்தச் சொல்லணும் :))))) கனவுக் கன்னி
    தெரியணுமா இனியும் :)))))

    ReplyDelete
    Replies
    1. இளவயது அந்த கன்னிதானே இன்றைக்கு கனவுக் கன்னியாய் வந்துக் கொண்டிருக்கிறாள் :)
      நன்றி

      Delete
    2. அஹஹாஹா!!! என்ன சமாளிப்பு!!!

      Delete
    3. சரி ,நான் சொல்றதை நம்ப வேண்டாம் ,என் கனவில் வருபவரிடம் நீங்களே கேட்டுக்குங்க :)
      நன்றி

      Delete
  6. போலீஸ்காரர்களும், ரௌடிகளோடு சேர்ந்து ஏரியாவை பிரித்துக்கொள்ள வேண்டியது தான்.

    ஓ! அதனால தான் நீங்க 24 மணிநேரமும் கண்ணாடியை போட்டுக்கிட்டே இருக்கீங்களா? (பகல்ல தூங்கும்போது கூட கனவு வரும் இல்ல... )

    ReplyDelete
    Replies
    1. அதிலும் சண்டை வந்த குலுக்கல் போட்டு பிரித்துக் கொள்ளலாமே :)

      அதுக்காக கண்ணாடி போடலே ,ராத்திரி கனவை முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருப்பதை வேற யாரும் பார்க்கக்கூடா துன்னுதான் :)
      நன்றி

      Delete
    2. சொக்கன் சகோ!!! சூப்பரு!

      Delete
  7. மாமூல் தகராறா ! யார் வெற்றி பெற்றார்!

    ReplyDelete
    Replies
    1. யார் வெற்றி பெற்றாலும் தோல்வி மக்களுக்குத்தானே :)
      நன்றி

      Delete
    2. இப்படி ஒவொரு பதிலிலும் கலக்கின நான் என்னதான் தனி கம்மென்ட் டா போடுறது:((( நான் வெளிநடப்பு செய்கிறேன்:(((

      Delete
  8. கபாலியோட மாமூல் அங்க போயிடுமில்ல... அப்பால என்ன?

    ஹா...ஹா...ஹா...

    அது என்னவோ உண்மைதான் ஜி!

    அட!

    ReplyDelete
    Replies
    1. இது DTH காலமாச்சே .கபாலி இடையிலே எதுக்கு :)
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாடு விட்டு நாடு கடந்த காதலை ரசித்தீர்கள் தானே :)
      நன்றி

      Delete
  10. மொத்தமா கபாலி கிட்டயே வாங்கிக்க வேண்டியதுதான்!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. டீலிங் ஒத்து வரலையே :)
      நன்றி

      Delete
  11. கலக்கல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தனே அபு இப்போ என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தவர் யாராவது கூறினால் நல்லாயிருக்கும் :)
      நன்றி

      Delete
  12. Replies
    1. ஜப்பான் மருமகன் எங்கே இருக்கிறார் என்பதை அறிய உங்களுக்கும் ஆவல்தானே :)
      நன்றி

      Delete
  13. செல்போன் ப்ளுடூத்லே பேசினா பைத்தியமா?
    நம்ம ஊர் காதல் தண்டவாளத்தில் முடிந்துக் கொண்டிருக்கிறதா?
    கனவுக் கன்னி தெரியாட்டி கண்ணாடியா?
    ரௌடி கபாலிட ஏரியாவில் போலீஸ் மாமூல் வசூலா?
    இப்படியெல்லாம் போட்டுடைக்கீறீங்களே!

    ReplyDelete
    Replies
    1. போட்டு உடைப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது :)
      நன்றி

      Delete
  14. சிரிப்பூக்கள் அருமை...
    காதலை வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பூக்களின் மணத்தை நுகர்ந்ததிற்க்கு நன்றி !

      Delete
  15. Replies
    1. கடல் கடந்த காதலும் கூட :)
      நன்றி

      Delete
  16. ஹாஹஹஹ்...

    ஆமாம் ஜி! இந்த செல் ஃபோன் ப்ளூடூத்ல பேசிக்கிட்டுப் போறப்ப..ஒருவேளை நம்மகிட்டத்தான் பேசறாங்களோன்னுத் திரும்பிப் பார்த்ததுண்டு.....அப்படி இருக்கும் சில சமயம் அந்தப் பேச்சுக்கள்...ஹஹஹ் !

    ReplyDelete
    Replies
    1. நாமளும் 'ஒரு நொடிப் பைத்தியமாகி' போய்விடுகிறோமோ :)
      நன்றி !

      Delete