3 November 2014

பியூட்டிபார்லர் செய்த 'அழகு ' காரியம் !

------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்குச் செலவுக்கு  ஒத்தி காசு சரியா போகுமோ ?                      
               ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
                  ''அதையேன்  கேக்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

அழகு நிலையம் செய்த 'அழகு 'காரியம் !

               ''ஏண்டி ,அந்த பியூட்டி பார்லர் விளம்பரத்திலே ' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
                            ''மாயமாப் போச்சு ,அந்த பியூட்டி பார்லர் !''

ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா ?

இந்தியா இன்ஸ்டன்ட் வல்லரசு ஆகும் கனா 
தகர்ந்துவிட்டது ...
சாமியார் சோபன் சர்க்காரின் அருள்வாக்கை நம்பி ...
ஆயிரம் டன் தங்கத்திற்கு ஆசைப்பட்டு ...
அவர் சொன்ன இடத்தில் பன்னிரண்டு நாட்கள் தோண்டிப் பார்த்தும் ...
 ஒரு கிராம் தங்கம் கூடக் கிடைக்கவில்லை ...
ஒரு சாமியார் கண்ட கனவை நம்பி ...
இவ்வளவு செலவு செய்வதாவென்று சகல தரப்பும் கண்டனம் தெரிவித்தபோது ...
இல்லை இல்லை ,தொல்பொருள் ஆய்வுத்துறை ஏதோ ஒரு உலோகம் அங்கே  அடியில் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளதாக ...
மத்திய அரசு சப்பைக்கட்டு கட்டியது ...
அந்த உலோகமாவது சிக்கியதாவென்றால்அதுவும் இல்லை !
தோண்டும் பணி நடந்து கொண்டிருந்த போது சும்மா இருந்த அந்த சாமியார் இப்போது ...
என் முன்னிலையில் தோண்டினால் மட்டுமே தங்கம் கிடைக்குமென்று மீண்டும் அருள்வாக்கு
கூறியுள்ளார் ...
மேலும் அகழ்வுப் பணி நடப்பதை டீவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார் ...
இந்த 'சர்க்காரின் 'புருடாவுக்கு மத்திய சர்க்கார் முடிவு கட்ட வேண்டுமென்றால் ...
ஆயிரம் டன் தங்கம் கிடைத்துவிட்டால் 
சாமியாரை நாட்டின் முதல் குடிமகன் ஆக்கிவிடுவது ...
கிடைக்காவிட்டால் தோண்டப்படும் குழியையே 
சாமியாரின் ஜீவசமாதி ஆக்கிவிடுவது !
இதற்கு சாமியார் கட்டுப்படுவாரானால் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்து விடலாம் !
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////
          தங்கப்புதையல் ...முந்தையப் பதிவு>>>

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
பசி வந்தா இப்பிடியுமா ?
                          ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?

                      ''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''


24 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும்கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஒத்தி ,அழகு நிலையம் ,தங்கம் ,அட்சதை அரிசி நாலையும் ரசித்தீர்களா,ரூபன் ஜி ?:)
      நன்றி

      Delete
  2. நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார்!
    இது வழமையானது தான்...
    மாயமாப் போச்சு, அந்த பியூட்டி பார்லர்!
    இப்படிப் பல திறப்பதும் மூடுவதுமாய்...

    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்படி திறந்து திறந்து மூடுற விளையாட்டு எப்போதான் முடியுமோ ?:)
      நன்றி

      Delete
  3. ஜீவசமாதி ஐடியா ஜோர்...
    அரிசி ஹ ஹா
    தம ஒன்று

    ReplyDelete
    Replies
    1. ஐடியா ஜோர்தான் ,ஆனால் அவர் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகும் ,அவரை ஒன்றும் செய்ய முடியலையே :)
      நன்றி

      Delete
  4. all posts are good sir. keep rocking!

    ReplyDelete
    Replies
    1. THE VOICE OF MY HEARTன்னு நீங்க ஆங்கிலத்திலே கலக்குறீங்க ,நான் தமிழ்லே கலக்குறேன் :)
      நன்றி

      Delete
  5. ஒத்தி வைத்த வழக்கு அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஒத்திக்கு விட்டவனும் ,ஒத்திக்கு வந்தவனும் போய் மேலே சேர்ந்தால் கூட வழக்கு முடியாது போலிருக்கே :)
      நன்றி

      Delete
  6. 1. நீதிபதியை ஒத்திக்கு எடுக்க முடியவில்லையாமா? ஹா...ஹா...ஹா...

    2. ஹா...ஹா...ஹா...

    3. ஹா...ஹா...ஹா...

    4. அட, சாப்பாடைப் போட்டுட வேண்டியதுதானே... ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. 1 அந்த அளவுக்கு வசதி இருந்தால் ஏன் இப்படி மல்லு கட்டப் போகிறார்கள் :)
      2 ;)
      3 :)
      4. சாப்பாட்டுக் கடையை திறந்துவிட்டால் மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய ஆளிருக்காதே :)
      நன்றி

      Delete
  7. ஹ ஹா ஹா........தம 5

    ReplyDelete
    Replies
    1. த ம அஞ்சா ..ஹிஹி ..நன்றி !

      Delete
  8. வணக்கம் பகவான்ஜி தங்களை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி கடந்த பதிவின் 2ஜி விவகாரத்தில் எம்மையும் இணைத்து உள்ளீர்கள் ஒருபுறம் சந்தோஷமே இருப்பினும் மறுபுறம் கைக்கு காப்பு வருமோ ? என்ற ....

    01. வீட்டை ஒத்திக்கு விடுறதையும் நீதிபதி ஒத்திவைக்கிறதையும் பார்த்தால் அவரே ஒத்திக்குத்தான் இருபாரோனு தோணுது.

    02. விளம்பரத்துல கரும்புள்ளிகள் மாயம்னு போட்டுருந்துச்சா ? இல்லை கருங்காலிகள் மாயம்னு போட்டுருந்துச்சா ?

    03. நல்ல யோசனை இதையே கடைப்பிடித்தால் சுவாமிகளை மலையேற்றி விடலாம்.

    04. இனிமேல் அரிசியில மஞ்சளுக்கு பதில் மிளகாய்ப்பொடியில உபயோகிக்கணும். ஜி.

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும்கவலைப் படாதீங்க ,நீங்கள் அபுதாபியில் இருக்கிறீர்கள் ,காப்பு வந்தால் முதலில் எனக்குத்தான் ....தங்கத்தில் காப்பு போடச் சொல்லி விடுகிறேன் :)

      1.அவராவது காலாகாலத்தில் காலி செய்தால் சரிதான் :)

      2.அதை சரியாய் கவனிக்காததால் தான் இந்த வினையோ :)

      3.அவர் நம்மை வேண்டுமானால் மலை ஏற்றுவார் :)

      4 தும்மலிலேயே நாதஸ்வரம் வாசித்தால் நல்லாவா இருக்கும் :)
      நன்றி

      Delete
  9. ஒத்தி வைச்சிக்கிட்டே போனா அந்த நிலைமைதான் போல! இவங்களும் பைனான்ஸ் கோஷ்டி போல மாறிட்டாங்க போல! சாமியார்களை நம்பும் அரசை என்னவென்று சொல்வது? ஹாஹாஹா! எல்லாமே சூப்பர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஏமாற ஆள் இருக்கும் வரை சாமியாரில் இருந்து பைனான்ஸ்காரன் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் :)
      நன்றி

      Delete
  10. ஹாஹஹஹ்ஹ் நீதிபதி ஒண்டிக்கு ஒண்டினு சொல்லாம விட்டாரே..

    ஹஹ்ஹஹாஹ..

    ஹஹ்ஹஹஹஹ..

    அட சாப்பாடுதனெங்க முக்கியம்/.....ஹஹஹஹ்...

    ReplyDelete
    Replies
    1. இது ஒத்திச் சண்டை ,குத்துச் அண்டை இல்லை :)
      சும்மாவாச் சொன்னாங்க ,பந்திக்கு முந்து என்று :)
      நன்றி

      Delete
  11. Replies
    1. மாயமான பியூட்டி பார்லர் ,அருமைதானே :)
      நன்றி

      Delete
  12. மாயமான ப்யூட்டி பார்லர், அக்ஷதையை உண்ணும் அளவிற்குப் பசி - இரண்டுமே ரசித்தேன்..

    த.ம. 8

    ReplyDelete
  13. அன்புடையீர் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது
    வாழ்த்துக்கள்

    இங்கே கிளிக்குக

    ReplyDelete