அன்பார்ந்த வலையுலக உறவுகளே ,
கடந்த 26.10.14அன்று மதுரையில் நடைபெற்ற வலைப் பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு கலக்கு கலக்கென்று கலக்கிய நமது நண்பர் கில்லர்ஜிஅவர்கள் ,மதுரையை கலக்கியது யாரு என்ற தலைப்பில் ,நிறைய புகைப் படங்களுடன் அருமையான பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் ...
அதை எல்லோரும் பார்த்து ,படித்து ரசிக்க இதோ லிங்க்>>> http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html
பழசை மறக்காத உழைப்பாளி !
''அந்த டீ மாஸ்டர் ,முந்தி கிளினிக்லே வேலைப் பார்த்தவரான்னு ஏன் கேட்கிறீங்க ?''
''இங்கே சரியாக 105 டிகிரி சூடான டீ போட்டு தரப்படும்னு சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா?
''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''
''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'
''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'
தம்பதிகள் சண்டை தெருவையும் தாண்டியது !
தம்பதிகள் சண்டைதெருவுக்கு வரக் கூடாது என்பார்கள் ...
நாகர்கோவில் அருகே ஒரு தம்பதியினரின் சண்டை ரயில் தண்டவாளத்திற்கே வந்த அதிசயம் நடந்துள்ளது ...
சம்பாதித்தது மூக்கு முட்ட குடிப்பதற்கே அவருக்கு போதாதாம் ...
திருந்தாத ஜென்மத்தோடு வாழப் பிடிக்காமல் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டாராம் மனைவி ...
வெளிநாட்டில் சம்பாதித்ததை பிள்ளைகளுக்கே கொடுத்தாளாம் ...
தண்ணி அடிக்க காசு கேட்டால் தராமல் திட்ட வேறு செய்தாளாம் ...
மதிக்காத மனைவிக்கு பாடம் புகட்ட நினைத்து ...
ரயில் தண்டவாளத்தில் இரண்டு பாறாங்கல்லை வைத்துள்ளார் ...
நல்லவேளையாக இஞ்சின் டிரைவர் பாறாங்கல்லை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார் ...
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது ...
போலீசிடம் மாட்டிக் கொண்ட சர்வர் கூறியது பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியது ...
ரயிலை கவிழ்த்தது நான்தான் என்று தெரிந்தாலாவது பயந்து மனைவி பணம் தருவாள் என்பதற்காகத்தானாம் !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
|
|
Tweet |
01. டிகிரி - டிக்கிரி சரிதான்
ReplyDelete02. போலி கிட்னி தெரிஞ்சு போனா புடிச்சு சட்னி ஆக்கிடுவாங்களே...
03. பெரிய அறிவாளிதான்
04. இனியாவது புத்தியோட பொழைக்கட்டும்
எமது பதிவை கலக்கலாய் போட்டு கலக்கிய நண்பர் பகவான்ஜிக்கு கில்லர்ஜியின் நன்றி.
1காபியில் மட்டும்தான் டிகிரி காப்பியா ,.நம்ம மாஸ்டர் டீயிலும் போடுவாரே :)
Delete2.இருக்கிறதே ஒண்ணே ஒண்ணுதான் ,அதையும் கையை வச்சா டாக்டர் மாட்டிக்குவாரே :(
3 அவரை இப்படி அறிவாளி ஆக்கியது டாஸ்மாக்தானே:)
4.அதை சொல்லவே வேண்டாம் ,பயபிள்ளே பொழச்சுக்குவான் :)
என் 'திருமுகத்தை' பல லட்சம் கண்களுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் :)
நன்றி
சிரிப்ஸ் அருமை...
ReplyDeleteஇன்று அண்ணன் கில்லர்ஜி அவர்களைச் சந்தித்தேன்... மிகச் சிறந்த உறவு ஒன்று கிடைத்திருக்கிறது...
அவரின் பதிவைப் பார்த்தேன்... கிட்டத்தட்ட 62 போட்டாக்கள்... ஒவ்வொன்றிலும் யார் என்ற குறிப்போடு... மனிதரின் பதிவுக்கான சிரத்தை கண்டு வியந்தேன்...
அதிலும் சில படங்களில் குறும்பாய் வரிகள் 'கல்லும் கோட்டையும்' என அவருடன் தனபாலன் அண்ணா இருக்கும் போட்டோவில்...
கழுத்து வரை கல்லாக்கிய என்று என்னை வேறு கலாய்த்து இருக்கிறாரே :)
Deleteஉங்கள் புது உறவு தொடர வாழ்த்துகள்!
நன்றி
காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் வாய்ப்பு எத்தனை பெண்களுக்கு கிடைக்கும். thanks பாஸ்:))))))
ReplyDelete#காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் வாய்ப்பு எத்தனை பெண்களுக்கு கிடைக்கும்#
Deleteஎன் இல்லாளும் காலையில் இப்படித்தான் 'சுப்ரபாதம் ' சொல்லி டீயை தருகிறாள் ,அதிலும் ஒரு தனிச்சுவை இருக்கத்தான் செய்கிறது :)
உங்கள் நன்றியில் பாதியை கூகுள் ஆண்டவருக்கு பாஸ் செய்துவிட்டேன் ,அவர்தான் நமக்கெல்லாம் மூலவர் ,நாமெல்லாம் உற்சவ மூர்த்திகள் (இதற்கு பெண்பாற் சொல் ?)தானே ?
நன்றி
நண்பர் கில்லர்ஜியின் பதிவு கண்டு ரசித்தேன்
ReplyDeleteஉண்மையிலேயே மதுரையைக் கலக்கியது அவர்தான்
நன்றி நண்பரே
தம 2
அவரே கலக்கியது யார் என்று கேட்பது நியாயமில்லைதான் :)
Deleteநன்றி
எல்லாமே அருமை.
ReplyDeleteலிங்கை சொடுக்குங்கள் ,அதுவும் அருமை :)
Deleteநன்றி
ஜி... கில்லர்ஜி கலக்கி விட்டார்...!
ReplyDeleteகேட்டால்,நாம்தாம் அவரை கல்லாக்கி விட்டோமாம் :)
Deleteநன்றி
105 டிகிரி சூடான டீ குடிச்சா எப்படி இருக்கும்?
ReplyDeleteபோலி நோயாளியா?' கிட்னி விற்க வந்தவரா?
சைட் அடிக்கிறது தப்புன்னு
கோவிலுக்குப் போவதை விட்டாச்சா?
இப்படியெல்லாம் போட்டு
மூளைக்கு வேலை கொடுக்கிறியளே!
அதுக்கு காரணம் ,மூளைக்கு வேலைக்கொடுத்துகிட்டே இருந்தால்தான் ,அது தன் முழு அறிவுத் திறனை வெளிப்ப்டுத்துமாமே :)
Deleteநன்றி
நன்று!
ReplyDeleteஇன்று மட்டுமல்ல ,(நான் என் பதிவை பீற்றிகலே) என்றுமே வேண்டும் அய்யா உங்கள் ஆதரவு !
Deleteநன்றி
கில்லர்ஜி...பகவான்ஜி
ReplyDeleteஒ...இதுதான் 2 ஜி..யா?
இதற்கு பொருத்தமாய் ,என் பையனும் கணினி மூலம் JEE தேர்வுக்கு அப்ளை செய்கிறேன் என்று உங்களுக்கு மறுமொழி கூற எனக்கு தாமதத்தை ஏற்படுத்தி விட்டான் :)
Deleteநன்றி
மதுரையை கலக்கிய 2ஜி க்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!!
ReplyDelete2 ஜி க்களுடன் சேர்ந்து நின்று நீங்களும் கலக்கி இருக்கிறீர்களே :)
Deleteநன்றி
தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் பதிவினுக்கு இணைப்பு தந்தமைக்கு நன்றி். காலையில்; உங்கள் பதிவின் வாயிலாகத்தான் அவரது பதிவினைப் பார்த்தேன். எல்லாம்... சரி! நீங்கள் உங்கள் பார்வையில் மதுரைப் பதிவர்கள் சந்திப்பினைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரையை எப்போது தரப் போகிறீகள்?
ReplyDeleteத.ம.7
தர வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் ,'ஆணி பிடுங்கிற வேலை கூடிப் போச்சு 'என்பதால் ஆசையை (நம் )தணிக்க முடியலே ...இரவு ௦௦ .39 க்கு வந்த கருத்துக்கு இப்போதான் மறுமொழி கூற நேரம் கிடைத்து இருக்கு ..என் பாணியில் துண்டு துண்டாய் புகைப படங்களைப் போட்டிருக்கிறேனே :)
Deleteதிருவிழாவை வெளிச்சம் போட்டுக் காட்ட உங்க பதிவே போதுமே !
நன்றி