1 November 2014

'பிணம்தூக்கி' சொன்ன ஒரு திகில் அனுபவம் !

--------------------------------------------------------------------------------------------------------------------------
செல் இல்லையென்றாலும் பழக்க தோஷம் விடாது !
                ''செல்லில் பேசிக்கொண்டே நான் பைக் ஓட்டுவேன்னு எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க ?''
               '' செல் இல்லையென்றாலும் கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சிக்கிட்டுதானே  வண்டி ஓட்டுறீங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

' பிடித்தம் போனா ' புருஷனை எப்படி பிடிக்கும் ?

             ''ஒண்ணாந்தேதி வரவும் உனக்குபிடித்தமானவரே ,பிடிக்காதவர் ஆயிட்டாரா,ஏண்டி ?''
               ''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !''

பிணம் தூக்கியின் திகில் அனுபவம் !

உண்மையில் நடந்த சம்பவம் இது ...
குற்றால அருவியில் குளிப்பது எல்லோருக்கும் சுகமான அனுபவம்தான் ...
ஆனால் அதுவே ஒரு சிலருக்கு துக்கத்தை தந்து விடுகிறது ...
வாலிபக் கோளாறால் சில வாலிபர்கள்  ...
மலைமேலே  வெகுதூரம் ஏறிச் சென்று  
நீர்த் தடாகத்தில்  குளித்துக் கொண்டிருக்கையில் ...
காட்டாறு வெள்ளம் வந்து ஒருவனை அடித்துக் கொண்டு சென்று விட்டதாம் ...
நண்பர்கள் பல மணி நேரம்  தேடியும் அவனைக்
கண்டுபிடிக்க  முடியவில்லையாம் ...
இறந்துஇருந்தால்கூடசடலம்ஒதுங்கிஇருக்கவேண்டும் ...அப்படியும் கிடைக்கவில்லை ! 
இப்படிப்பட்ட சம்பவங்களில் பிரபலமான 
'பிணம் தூக்கி 'ஒருவரின் தேடிச் சென்று
இருக்கிறார்கள் ... 
அங்கேயும் அவர்கள் துரதிர்ஷ்டம் ,அவர் வெளியூர் சென்று இருந்ததால் ...
மூன்று நாட்களுக்குப் பின் சம்பவ இடத்திற்கு வந்து பிணம் தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது ...
அவர் ஒருவிதமான எண்ணையை வாயில் அடக்கிக் கொண்டு ஓடும் தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்தாராம் ...
அந்த எண்ணையை நீரினடியில் சென்றபின் துப்புவாறாம்...
அதனால் LED விளக்கைப் போட்டது போல்  பிரகாசமாய் வெளிச்சம் கிடைக்குமாம் ...
பத்து நிமிடத் தேடலுக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ...
காத்திருந்த எல்லோருக்கும் ஆச்சரியப் படும்படியான  தகவலை சொன்னாராம் ...
'உங்கள் நண்பர் குகை ஒன்றில் இன்னும் உயிரோடு இருக்கிறார் !'
பிறகேன் காப்பாற்றிக் கொண்டுவரவில்லை ?
பிணம் தூக்கி தன் அனுபவத்தைச் சொன்னாராம் ...
'பிணமாய் இருந்தால் தலை முடியைப் பிடித்துக் கொண்டு வாழை மட்டையை இழுத்துக் கொண்டு வருவது போல் எளிதாக கொண்டு வந்து விடுவேன் ...
உயிரோடு இருப்பவனை மீட்பது சிரமம் ,ஏனென்றால் உயிராசையுடன் இருப்பவர் என்னையும் தண்ணீரில் இழுப்பார் ...'
என்று சொன்னவர் ,அதன் பின் பாதுகாப்புடன்  கயிற்றின் உதவியுடன் சென்று ...
அந்த வாலிபரை உயிருடன் மீட்டுள்ளார் ...
மறு ஜென்மம் எடுத்த அந்த வாலிபர் தற்போது அமெரிக்காவில் பணி புரிகிறாராம்...
அவர் தன் திருமணத்திற்கு பிணம் தூக்கியை அழைத்து மரியாதை செய்தாராம் !
மூன்று நாள் உண்பதற்கு ஏதுமில்லாமல் ,வெள்ளம் பாய்கின்ற ஒரு குகையில் உயிர் பயத்துடன் எப்படி இருந்திருப்பார் என்பதை நினைத்தால் ஜிலீர் என்கிறதே !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
            ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில்   புது மொழி சொல்லத்தோணுது!''
           ''எப்படி?''
            ''ஏட்டு தொப்பை கடமைக்கு  உதவாதுன்னுதான்!''


42 comments:

  1. Replies
    1. பதிவுக்கு நீங்கள் முதலில் போட்டிருக்கும் பிள்ளையார் சுழியா இது :)
      நன்றி !

      Delete
  2. இந்தச் சம்பவத்தை குற்றாலம் செண்பகாதேவி அருவியில் நடந்தாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் பகவான்ஜி! பிணந்தூக்கி யெனத் தங்களால் குறிப்பிடப்படுபவரின் பெயர் நல்லசிவன் என்று நினைக்கிறேன்.( நல்லசிவமா இருந்தா என்ன கெட்ட சிவமா இருந்தா என்ன என்கிறீர்களா?)
    காப்பாற்றப்பட்டவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதும், பிணந்தூக்கியை அழைத்துக் கௌரவப்படுத்தியுள்ளார் என்பதும் புதிய செய்தி.
    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சவங்களை மட்டுமே தூக்கி வரும் நல்லசிவமே,இம்முறை மூன்று நாளுக்கு பின்னும் உயிர்இருப்பது அறிந்து வியந்து நின்றிருப்பாரோ :)
      நன்றி

      Delete
  3. செல் இல்லையென்றாலும் கழுத்தை ஒரு பக்கமா சாய்ச்சிக்கிட்டுதானே வண்டி ஓட்டுறீங்க ! ..(இது நல்ல பகிடிங்க.....பழக்க தோசம் பொல்லாதது..)..

    ''...எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே !'' பணமில்லாவிடில் பிணமுமுஇகூடவாய் திறவாது....

    உண்மைக் கதை ஆச்சரியமாக உள்ளது...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பழக்கத்தை எல்லோருமே தொடர்ந்தால் பிறப்பிலேயே கோணல் ஆரம்பித்து விடுமோ :)

      பணம் என்றால் பிணம் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன :)

      வியக்க வைக்கும் உண்மைச் சம்பவம்தானே இது ?
      நன்றி

      Delete
  4. பிணம் தூக்கி வாயில் அடக்கிக் கொள்ளும் எண்ணெய், தண்ணீருக்குள் வெளிசசம், குகைக்குள் வாலிபர் – எல்லாம் சேர்ந்து ஒரு அமானுஷ்ய உருவகத்தை தந்து விட்டன.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நீரின் அடியில் வெளிச்சமே இருக்காதே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ,நம்ம பிணம் தூக்கி இப்படி வெளிச்சத்தை உண்டாக்கி கொள்வார் என்பதை அறிந்து வியந்தேன் :)
      நன்றி

      Delete
  5. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பார்கள்.
    ஆனால், நீங்கள்
    ''ஏட்டு தொப்பை கடமைக்கு உதவாதுன்னு தான்!'' என்று சொல்லுறியள்

    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே சரிதானே அய்யா ?:)
      நன்றி

      Delete
  6. அண்ணாஜீ சௌக்யமாஜீ இப்பத்தான்ஜி 2ஜீ பத்தி பதிவெழுதலாம்னு உக்காந்தேன்ஜீ. என் கஷ்டம் இல்லையில்ல சிஸ்டம் கொஞ்சம் சிரமம் தருவதால் வேகமாக வேலை செய்ய முடியலைஜீ...

    ReplyDelete
    Replies
    1. சரி ஜி ,ஒண்ணும் கவலைப் படாதீங்க ஜி ,நானே நாளைப் பதிவில் 2ஜி யைப் பற்றி எழுதுகிறேன் ஜி ...படிச்சு சொல்லுங்க ஜி :)
      நன்றி !

      Delete
  7. தங்களை பதிவர் விழாவிலே சந்தித்ததில் மகிழ்ச்சி.
    நகைச்சுவையும் உண்மை நிகழ்வும் அருமை

    ReplyDelete
    Replies
    1. அனைத்து பதிவர்களுக்கும் உதவும் உங்களுக்கு விருது கொடுத்து சிறப்பிக்க முடிந்ததற்கு நானும் மகிழ்கிறேன் .அன்றைய உங்கள் பேச்சை மிகவும் ரசித்தேன் முரளிதரன் ஜி !
      நன்றி

      Delete
  8. சார், எங்கள் ஊர்ப்பக்கம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலும், இதேபோல் பிணம் தூக்கிகள் இருக்கின்றனர். எந்த பிணமும் சிக்கவில்லையென்றால், உயிரோடு தண்ணீரில் இருப்பவரை, மூழ்கடித்து பிணமாக்கி விடுவதாகவும் அவர்கள் மீது புகார் எழுந்ததுண்டு. இதற்கு பயந்தே பலபேர், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் போனாலும், ஆற்றுக்குள் இறங்குவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பிணம்தூக்கிகள் மீதான புகார் பொய்யாகவே போகட்டும் ,நினைத்தாலே பதறவைக்கும் இப்படிப்பட்ட செயலையுமா செய்வார்கள் ?
      நன்றி

      Delete
  9. 1. ஹா....ஹா...ஹா...

    2. ஹா...ஹா... அடப்பாவமே...

    3. ஐயோ... நம்மை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால் 'பகீர்' என்கிறது!

    4. ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. 3.மாட்டிக்கொண்டவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருந்திருப்பார் ,இல்லையா ஸ்ரீ ராம் ஜி ?
      நன்றி

      Delete
  10. வாவ் பதிவு வாழ்த்துக்கள்
    ஆனந்த விகடன் தொடர் நினைவில் வந்தது..

    மலர்த்தரு

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த தொடரை 'பயந்து கிட்டே ' படிச்சுருக்கேன் :)
      நன்றி

      Delete
  11. Replies
    1. உங்களின் இந்த உதவிக்கு நான் கைம்மாறு செய்ய வேண்டாமா ? நம் நண்பர் நாகலிங்கம் அவர்களிடம் ,உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன வாழ்த்தைச் சொல்லிவிட்டேன் !

      Delete
  12. மிகவும் ஆச்சரியப்படும்படியான சம்பவம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வெட்டிப் பேச்சு உங்கள் தளம் .வேதாந்தி உங்கள் பெயர் ..இது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று எனக்கும் ஆச்சரியமாத்தான் இருக்கிறது :)
      நன்றி

      Delete
  13. பிணம் தூக்கியின் திகில் அனுபவம் ,பகீர் உண்மைதான் ஜீ

    ReplyDelete
    Replies
    1. செத்துப் பிழைத்தவர் என்றால் அவரைத்தான் சொல்ல வேண்டும் :)
      நன்றி

      Delete
  14. திகில் அனுபவம் உறைய வைக்கிறது..!

    ReplyDelete
    Replies
    1. செய்தியைப் படிக்கும் நமக்கே இப்படி என்றால் குகைக்குள் ஓடும் தண்ணீரின் இடையே மாட்டிக்கிட்டு உயிரை எப்படித்தான் பிடித்துக் கொண்டிருந்தாரோ ?
      நன்றி

      Delete
  15. திகில் அனுபவம் படிக்கையிலேயே ..சிலீர் என்கிறது.

    தொப்பை கடமைக்கு உதவாது தான்.

    கழுத்து சாய்ந்து போயிடுது பழக்க தோஷத்தில்..ஆம்

    தம்.7

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    ReplyDelete
    Replies
    1. தொப்பை காவலருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உதவாதுதான் :)
      நன்றி

      Delete
  16. ஜோக்ஸ் சூப்பர்! குற்றால அருவி செய்தியை நானும் எதிலோ படித்தேன்! திகிலான அனுபவம்தான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவுக்கு ஜோக் falls என்றே தலைப்பு கொடுத்து இருக்கலாமா :)
      நன்றி

      Delete
  17. மூன்று நாள்-தண்ணீரினுள் உயிருடன்- நல்ல ஜோக்

    ReplyDelete
    Replies
    1. தண்ணீர் புகுந்து வரும் குகையின் உள்ளே அவர் ஒதுங்கி நிற்பதற்கு இடம் கிடைத்து ,மூன்று நாள் தேடுதல் வேட்டைக்குப் பின் காப்பாற்றப்பட்டு இருப்பதால் தானே பிணம் தூக்கிக்கு இந்த மரியாதை செய்திருக்கிறார் ?அது இருக்கட்டும் ,நீங்கள் இதுவரை குற்றாலம் மலை மேல் ஏறிச் சென்று பார்த்து இருக்கிறீர்களா ?
      நன்றி !

      Delete
  18. Replies
    1. என்ன வாத்தியாரே செல்மூலம் கமெண்ட்?வெளியூர் வாசமா ?
      நன்றி

      Delete
  19. Replies
    1. நினைத்தாலே சிலிர்க்கும் அனுபவம் என்றும் சொல்லலாமோ /
      நன்றி

      Delete
  20. ஜோக்ஸ் அருமை! ஜிலீர் அனுபவம் வாசித்திருக்கின்றோம் ஜி! ஐயோ பயங்கரமான அனுபவம் தான்!

    ReplyDelete
    Replies
    1. அந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட பின் ,செண்பகதேவி அருவிப் பக்கம் போகக்கூட பயமாய் இருக்கிறது :)
      நன்றி

      Delete
  21. உண்மைச் செய்தி - ஒரு வித பதட்டத்துடன் தான் படித்தேன்..... அந்த நல்ல மனிதர் வாழ்க....

    தொப்பை - :))))

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மீண்டு வந்த அந்த நல்ல உள்ளமும் வாழ்க !வாழ்க !

      ரசிக்க வைக்கிற தொப்பையா இருக்கே :)
      நன்றி

      Delete