24 November 2014

மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

  -----------------------------------------------------------------------------------------------------------------
   எல்லோருக்கும் வராது ஞானம் !    

               ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
                ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !

           ''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு 

முன்னாடியே ஏன் சொல்லலே ?''
              
             ''சேலையை  கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி 

இருக்கும்ன்னு சொன்னேனே !''


இதற்கு வந்த கமெண்ட் .....

  1. உருவத்தை கிண்டல் செய்து வரும் நகைச்சுவைகள் ஏனோ எனக்கு ரசிப்பதில்லை.. மன்னிக்கவும்!
    ReplyDelete

    Replies


    1. அதில் தவறில்லை ,நீங்களோ கோவை 'ஆவி '!ஆவிக்கு ஏதுஉருவம் ?அதெப்படி உருவத்தைப் பார்க்கும் ?
      உருவத்தை பார்க்காமல் உள்ளடக்கத்தை ரசிக்க உங்களுக்கு சொல்லணுமா?just fun ,take it easy !
      உங்கள் கமெண்ட் இன்னொரு மொக்கையை எனக்கு க்ளிக் ஆக்கிவிட்டது ,இன்னும் சில நொடிகளில் ,,,அது இன்றைய ஸ்பெசல் பதிவாய்...படிச்சுட்டு கமெண்ட்டைப் போடுங்க !
      நன்றி


மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

              ''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்கலைன்னு 

 கிண்டல் பண்றாரா ,எப்படிடீ?''

              ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

புதிரான கவிதையா அவள்?

பாரசீக கவிதையாய்...
 என் விழிகளில் தெரிகிறாய் நீ !
உன் விழிகள் மொழிப் பெயர்த்தால்  அல்லவா 
கவிதை எனக்கு  புரியும் ?

30 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    இரண்டு நகைச்சுவை மிக அருமையாக உள்ளது இரசித்தேன். பகிர்வுக்குநன்றி
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நான்குக்கு இரண்டு பழுதில்லைதானே ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. மண்ணின் மைந்தன் விருது பெற்ற கையோடு வந்து ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  3. இன்றைய நிலைக்கு பலருக்கும் ஆம்புலன்ஸ் தான்...!

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கும் ஞானம் வர்ற மாதிரி தெரியலேயே ,பாஸ் :)
      நன்றி

      Delete
  4. ஐம்புலனை அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
    ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான் வந்தது !''
    படித்ததும் பயங்கர சிரிப்பு... ஜி எனக்கும் ஆம்புலன்ஸ் வேனும்போல் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. அதான், தாராளமாய் உங்களுக்கு சிரிப்பு வருகிறதே ,ஆம்புலன்சை ஏன் தேடுகிறீர்கள் :)
      நன்றி

      Delete
  5. அச்சச்சோ...

    ஹா....ஹா...ஹா... ஆவியின் உணர்வை மதிக்கிறேன்.

    கொஞ்ச நாள் பிரிந்து இருக்கச் சொல்லுங்க... தாப அவதி வந்துடும்! ஹா...ஹா...

    ...ஆனால் இதற்கு மொழிகள் தேவை இல்லையே ஐயா...!


    ReplyDelete
    Replies
    1. ஆம்புலன்ஸ் வந்து நின்றாலே அச்சச்சோதானா :)

      நானும் மதித்து உடனே அடுத்த ஜோக்கைப் போட்டிருக்கிறேனே :)

      எப்படியோ அவதி தீர்ந்தால் சரிதான் :)

      மொழி தேவையில்லைதான் ,தவறாய் புரிந்து கொண்டால் விழி பிதுங்கிவிடுமே அய்யா :)
      நன்றி

      Delete
  6. ''..தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான் வந்தது !''

    ''சேலையை கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி

    இருக்கும்ன்னு சொன்னேனே !''
    ரூப அவதி....
    அப்பப்பா!..அருமை! சிரிப்ப சிரிப்பே தான்...
    மிக நன்று
    ரசித்தேன் சகோதரரே ..நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்புலன்சாவது வருதேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான் :)
      வயசிலே கழுதைக்கு தாவணி கட்டினாலும் அழகுதானாமே:)
      ரூபம் படுத்துறப் பாட்டையும் ரசித்தமைக்கு நன்றி !

      Delete
  7. 1. அஹஹஹஹ்..

    ரூப அவதி...அஹஹஹஹ்

    மொழிகள் தேவை இல்லை....

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் அந்த பெயர் வைக்கவே யோசிப்பார்களோ :)
      நன்றி

      Delete
  8. அய்..யோ...!!!ஐம்புலனை அடக்கினால் ஆம்புலன்ஸ்தான் தூக்கிட்டு போகுமா.....????

    ReplyDelete
    Replies
    1. அதுவும் தூக்கிட்டு போகலைன்னா ...சங்குதான் :)
      நன்றி

      Delete
  9. கழுதை கூட, கவிதையாகத் தெரிவது காதலின் இயல்பு
    கவிதையும் கழுதையாகி விடுவது கல்யாண வாழ்க்கையின் இயல்பு!

    ReplyDelete
    Replies
    1. ஆகா !இந்த இரண்டு இயல்பில் எது நல்லது என்று தெரிந்து கொண்டால்தான் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் ,அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  10. 01. ஆம்புலன்ஸ்சாவது வந்துச்சே ? எவனாவது லாரிக்காரன் மோதி நஞ்சு போகாம...
    02. அப்படினாக்கா ? தாவணி போட்டு வந்தால் எப்படியிருக்கும் ?
    03. பேருலயே ரூபா இருக்கும் மனைவி சந்தோஷம்தானே ?
    04. கவிதை அருமை ஜி.
    த .ம. 1

    ReplyDelete
    Replies
    1. 1.வீட்டிலே உட்கார்ந்து ஐம்புலனை அடக்கியதால் தப்பித்தார் :)
      2.மினி சைஸ் மிடி மாதிரி இருக்குமோ :)
      3.இவ ரூபா பிடுங்கிற ரூபாவதியாச்சே :)
      4.புரியாட்டித்தானே அது நல்ல கவிதை :)
      நன்றி

      Delete
  11. ரசித்தேன் தம 7

    ReplyDelete
    Replies
    1. உங்க தளத்தில் செஞ்சு கொடுத்த கார காளிபிளவரும் அருமையாய் இருந்ததே :)
      நன்றி

      Delete
  12. ஐம்புலன்களை அடக்குவது தொடர்பான நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐம்புலனை அடக்குவது கஷ்டம் ,அடங்குவது எளிது போலத் தெரியுதே :)
      நன்றி !

      Delete
  13. அழகான வரிகளில்
    கவிதையா அவள்?
    உருவத்தை பார்க்காமல் உள்ளடக்கத்தை ரசிக்க உங்களுக்கு சொல்லணுமா? நல்ல பதில்!
    ஐம்புலனை அடக்கினாரே
    ஆம்புலன்ஸ் தானே வந்தது!
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உருவத்தை பார்க்காமல் உள்ளடக்கத்தை பார்த்து ரசிப்பவர்கள் என்றால் நம் வலைத்தள உறவுகளுக்கு மிகவும் பொருந்துமே :)
      நன்றி

      Delete
  14. கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கலக்கல் ,ஜோக்காளி தளத்தில் என்றால் தவறில்லைதானே :)
      நன்றி

      Delete
  15. ரொம்ப அடக்கமானவரா இருப்பார் போல!!!!
    அம்புட்டு நல்ல புள்ளயா ஆ.வி!! so கிரேட் மா!

    ReplyDelete
    Replies
    1. நல்ல புள்ளையின் மனதைப் புரிந்து கொள்ளாத பாவி ஆயிட்டேனே என்று எனக்கு வருத்தமாய் இருக்கிறது :)
      நன்றி

      Delete