7 November 2014

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை !

--------------------------------------------------------------------------------
  பிள்ளைக்குத் தெரிஞ்சது அப்பனுக்கு தெரியலையே !           
            ''என் செல்லக்கண்ணு ,உன்கூட விளையாட தங்கச்சி வேணுமா ,தம்பி வேணுமா ?''
           ''அடப் போங்கப்பா ,அம்மா வயிற்றில் வளர்றதைக் கூட பார்க்கக் கூடாதுன்னு சட்டம்  இருக்கே ,உங்களால் எப்படி நான் வேணுங்கிறதை  தர முடியும் ?!''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

ஒரே  கிட்னியால்  இப்படியும்  நன்மை  இருக்கு !

             ''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான்  

என்னைக் காப்பாற்றி இருக்கா ?''
             
           ''ஒரு கிட்னி தான் உங்களுக்கு  இருக்குன்னு முன் கூட்டியே 

சொன்னதால் ,டாக்டர்  பண்ண இருந்த ஆபரேசனை கேன்சல் 

பண்ணிட்டாரே !''

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை !

எல்லா ஊர்களிலும் விளைநிலங்களை கூறு போட்டு மனைகளாக்கி  விற்கிறார்கள் ...
ஆனால் ,கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மதுரையில் கொத்தனார் ஒருவர் மனைவியையே விற்று இருக்கிறார் ...
பெண் பாவம் பொல்லாததாச்சே ...அந்த பாவத்திற்கு அவரே பலியாகி விட்டார் ...
அவருடன் சேர்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்ற புண்ணியவதிக்கு...
 எதிர் வீட்டு கொள்ளைக்காரனுடன் தொடர்பாம் ...
தாலிக் கட்டியவன் நான் இருக்க ,உங்கள் இருவருக்குள் என்ன ஜோலி என்று ...
நீதியை நிலைநாட்ட நவீன பாண்டிய நெடுஞ்செழியனாய்  பொங்கி எழுந்துள்ளார் கொத்தனார் ...
எல்லார் வீட்டையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரன் ...
தன் மனதை கொள்ளை அடித்தவளுக்காக பேரம் பேசியுள்ளான் ...
ஒண்ண்ரை லட்சம்  விலை நிர்ணயம் செய்யப்பட்டு மனைவி கை மாறி விட்டாள்  ...
பின் தொடர்ச்சி அனுபவ பாத்தியதை ஏதுமில்லை என்று அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டார்களா என்று தெரியவில்லை ...
ஒண்ணரை லட்சம் ஒண்ணரை ஆண்டுகளுக்குள் காலியாகிவிட்டது போலிருக்கு ...
மனைவியை மீண்டும் சொந்தம் கொண்டாட கொத்தனார் வந்த செய்தி ...
வெளியூரில் இருந்த கொள்ளையனுக்குப் போக ...
அடியாட்களின் புண்ணியத்தால் கழுத்தறுபட்டு மேலோகம் சென்று விட்டார் கொத்தனார் ...
கொள்ளையனை மாமியார் வீட்டில் அடைக்க வலை வீசி தேடுகிறார்கள் போலீஸார் ...
மாமியார் வீட்டை மாற்றிக் கொண்ட ஒரே தப்புக்கு...
குழந்தைகளுடன் தெருவில் நிற்கிறாள் தாய் !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
''முத்து குளிப்பதை பார்க்க ஆசையா இருக்குடி!''

''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை?''

''அட நீ வேற!கடல்லே முத்து எடுப்பதை பார்க்கணும்னு சொல்ல வந்தேன் !

தலைஇல்லா முண்டம் ,,இதுதானா?



     '' உங்க மாப்பிள்ளையை இந்த தலை  தீபாவளிக்கு 

ஏன் அழைக்கலே ?

     ''என் பொண்ணை கொடுமை பண்ற அந்த 

'முண்டத்திற்கு 'தலை தீபாவளி ஒரு கேடா ?

26 comments:

  1. சிரிப்பு முத்துக்கள் அருமை...
    மதுரை கொத்தனார்... அடப்பாவி என்று சொல்ல நினைத்து அடப்பாவமே என்று சொல்ல வைத்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. தப்பான உறவுகளுக்கு கிடைத்த சரியான தண்டனைதானே ?
      நன்றி

      Delete
  2. கொத்தனார் நிகழ்ச்சி - கொடுமை.. தலையில் அடித்துக்கொள்ள வேண்டியது தான்

    தப்பா அர்த்தம் எடுக்காதீங்க - நாங்க தப்பாத்தான் அர்க்த்தம் பண்ணிக்கொண்டோம்

    ReplyDelete
    Replies
    1. பண்ணிக்கிட்டதில் தப்பில்லே ,எடுத்துகிட்டாதான் தப்பு :)
      நன்றி

      Delete
  3. முத்துக் குளிக்கிறத பார்கறதா ...
    மூச்சி முட்டி போய் சேரவேண்டியது தான் ...
    தம இரண்டு

    ReplyDelete
    Replies
    1. டிஸ்கவரி சேனலில் காட்டுகிறார்களே அதை வேண்டுமானால் பார்த்துக்கலாம் ,இல்லையா :)
      நன்றி

      Delete
  4. கொத்தனாருக்கு சரியான தண்டனை...

    ReplyDelete
    Replies
    1. நிமிர்ந்தாள் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர் இப்படி விழுந்து விட்டாரே !
      நன்றி

      Delete
  5. உங்கள் ஆசானைப் பற்றி நீங்கள் எழுதியிருந்ததும் அருமைதான் அய்யா !
    நன்றி

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. கொத்தனார் மனைவியின் செயலைத்தவிர. தம5

    ReplyDelete
    Replies
    1. கொத்தனார் மனைவியை விற்றதும் அருமைதானா :)
      நன்றி

      Delete
  7. 01. சில வீடுகளில் அப்பனைவிட குழந்தைகள் புத்திசாலிகள்தான்.

    02. இனிமேல் ஹாஸ்பிட்டல் போனால் நாமலும் உபயோகப்படுத்தலாம்.

    03. ஆகமொத்தம் எல்லோருக்குமே கூலி கிடைத்து விட்டது ஆனால் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்

    04. சொல்லும்போதே கடல்ல முத்துக்குளிப்பதைனு..... சொல்லியிருக்கலாம்.

    05. பொருத்தமான பதில்தான்

    ReplyDelete
    Replies
    1. 1.அந்த சில வீடுகளில் என் வீடும் ஒன்று ,எனக்கு ஜோக்காளி தளத்தை உருவாக்கி கொடுத்ததே என் மகன்தான்:)
      2.ரெண்டு கிட்னி இருக்க இல்லையான்னு ஸ்கேனில் பார்த்து விடுவார்களே :)
      3.பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேரும் என்பது இதுதானா ?
      4.சொல்லி இருக்கலாம் ,நீங்க நானும் வர்றேன்னு சொல்லிட்டா என்ன செய்றதுன்னு யோசிச்ச மாதிரி தெரியுது :)
      5.முண்டத்திற்கு ஏது தலை (தீபாவளி )?
      நன்றி

      Delete
  8. அம்மா வயிற்றில் வளர்றதைக் கூட
    பார்க்கக் கூடாதுன்னு சட்டம் வந்தாச்சா
    எனக்குத் தெரியாமலே போச்சு!
    தலைஇல்லா முண்டத்திற்கு
    தலைத் தீபாவளி ஒரு கேடா?
    என்ன தான் இருந்தாலும்
    இப்படிக் கேட்கக் கூடாதே!

    ReplyDelete
    Replies
    1. ஸ்கேன் மூலமாய் சிசுவின் வளர்ச்சியை மருத்துவர் ஆய்வு செய்யலாம் .பெண் சிசு என்று தெரிந்தால் கருப் பையிலேயே சமாதி கட்டும் கொடுமை நடப்பதால் ,பாலினத்தை வெளியே சொல்லக்கூடாதுன்னு சட்டம் இங்கே உள்ளது ,இலங்கையில் எப்படியோ ?
      புது மாப்பிள்ளை எவ்வளவு கொடுமை பண்ணி இருந்தால் மாமனாருக்கு இப்படி சொல்லத் தோணும் :)
      நன்றி

      Delete
  9. 1. அப்படிப் போடு குழந்தை! ஹா...ஹா..ஹா...

    2. அடப்பாவிகளா.... ஹா...ஹா..

    3. (மறுபடியும்) அடப்பாவிகளா... ஹா...ஹா..

    4. யார் அந்த முத்து என்று சொல்லி விட்டால் உத்தமம்! ஹா... ஹா..

    5. முண்ட தீபாவளி என்று பெயர் மாற்றம் சித்துவிட வேண்டியதுதானே... ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. 1.இவ்வளவு விவரமான குழந்தையிடம் கேட்டது தப்புதானே :)
      2.டாக்டர் நினைச்சது நடக்கலே போலிருக்கே :)
      3 காமப்பித்து தலைக்கு ஏறியதால் வந்த வினை !
      4.முத்துக் குளிக்கிற ஊரில் விசாரித்தால்தான் தெரியும் :)
      5.புதுத்துணி வாங்க வேண்டி இருக்காது ,பழசையாவது உடுத்திக்கலாமா :)
      நன்றி

      Delete
  10. கூமட்ட அப்பன. என்ற பட்டம் தரலாமா............

    ReplyDelete
    Replies
    1. பட்டம் தரலாம் ,ஆயிரம் கூமுட்டயையும் பரிசா தரலாம் :)
      நன்றி

      Delete
  11. ஜோக்ஸ் சூப்பர்! குழந்தைகள் எல்லாம் ரொம்ப புத்திசாலியாத்தான் இருக்குது! கொத்தனார் செய்தி இப்படியெல்லாம் நடக்குதா என்று கேட்கவைத்தது! கடைசி ஜோக்! கிரேட்!

    ReplyDelete
    Replies
    1. நடக்கக் கூடாதது எல்லாம் நடப்பதால் தான் தினசரிகள் இன்னும் காலம் தள்ளுகின்றன :)
      நன்றி

      Delete
  12. அக்ரிமெண்ட போட்டுக் கொள்ளாததால் வந்த ( விணையோ)விலையோ.........கொத்தனார் கொள்ளையனை போட்டுத்தள்ளியது.

    ReplyDelete
    Replies
    1. என் பெண்டாட்டியை ஒண்ணரைலட்சத்துக்கு இவரிடம் விற்கிறேன் என்று அக்ரிமென்ட் போட்டு எந்த பத்திர ஆபீஸில் பதிவது?அங்கேயும் தள்ள வேண்டியதை தள்ளினால் இதையும் பதியக்கூடும்:)
      நன்றி

      Delete
  13. சட்டம் தெரிந்த சட்டாம்பிள்ளை!

    முண்டத்திற்கு எதற்கு “தலை” தீபாவளி! :)

    ரசித்தேன் நண்பரே.

    த்.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இவனைப் பெத்ததுக்கு கொடுத்துதான் வச்சிருக்கணும் :)

      அதானே :)

      நன்றி !

      Delete
  14. இரசித்தேன்!

    ReplyDelete