------------------------------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியும் ,வெறுப்பும் தரும் ஒரே வார்த்தை இதுதான் !
''ஒரே வார்த்தைதான் ...டாக்டர் சொன்னப்ப சந்தோசமும் ,ரேசன் கடைக்காரர் சொன்னப்ப கோபமும் வந்ததா,அதென்ன வார்த்தை ?''
'' உங்களுக்கு சர்க்கரை இல்லைங்கிற வார்த்தைதான் !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
ஓடிப் போக நல்ல நேரம்தான் !
''ஐயையோ ,கல்யாணம் பண்ணிக்க ,நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''

''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவராலே கண்டுக்க முடியாது ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''
தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது !
புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...
சிலர் நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள் உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான் உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள் ...
கடைசி நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
காதலில் உண்மை உண்டா?
|
|
Tweet |
01. டாக்டரோட பில்லை பார்த்த பிறகு எப்பூடி ?
ReplyDelete02.. பயணம் போகும் போது பொணம் குறுக்கே போனால் ? நல்லதுதானே,,,,
03. கவிமணி மாயூரம் வேதநாயகம் இந்தக்கதையை எத்தனை தடவை கேட்டாலும் ரசிக்கலாம்
04. வெவரமான காதலியோ கல்யானத்துக்கு கேட்கிறாளே....
1.முதலில் வந்த சந்தோசம் பறந்து போயிருக்கும் :)
Delete2.பொணமா.பணம் கொடுத்து அனுப்பக் கூட அப்பன்காரன் வந்து இருக்கலாம்னு தோணுது :)
3.அந்தக் காலத்திலேயே அவர் இப்படி எழுதி இருக்காரே ,இப்போ இருந்தா ...ஆஹா :)
4.ஏற்கனவே அவனுக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிய வந்திருக்குமோ :)
நன்றி
நீங்களும் த ம வோட்டு போடும் 'வயசுக்கு' வந்து விட்டதற்கு வாழ்த்துகள்:)
Delete1. ஹஹ்ஹஹ சர்க்கரை இல்லைனு நல்ல டைமிங்க் பதில்...
ReplyDelete2. ஹஹஹாஹ் சூப்பர்..
3. வேதநாயகம் பிள்ளை வாசித்திருக்கின்றோம்...ஜி
4. ஹஹஹஹ்....காதல் படுத்தும் பா(ட்)டு?!!!
சர்க்கரை வெளியே இருக்கிற வரைக்கும் சர்க்கரை குறைபாடு உள்ளவங்களுக்கு நல்லது :)
Deleteநன்றி
அருமையான பதிவு
ReplyDeleteசிரித்தோம்
அப்புறம்
சிரித்தபின் அதிர்ச்சி மயூரம் வேதநாயகம் பிள்ளையை பார்த்தவுடன் .. நல்ல தகவல்
அந்த காலத்தில் என்ன எழுதி இருக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தை மாற்றிவிட்டார் வே நா பிள்ளை ?:)
Deleteநன்றி
த.ம இரண்டு ஆனா பணம்தான் இன்னும் வரல
ReplyDeleteபணம்தானே தந்துவிட்டேனே ,ரன் வட்டி,மீட்டர் வட்டியெல்லாம் கிடையாதே :)
Deleteநன்றி
எல்லாமே சூப்பர் சூப்பர்.
ReplyDeleteகுறிப்பா , அந்த காதலிக்கு உங்க அட்வைஸ் அவசியம் வேணுமாம் :)
Deleteநன்றி
பிரதாப முதலியார் சரித்திரத்திலேயே அவர் நகைச்சுவை ஆரம்பமாகி விட்டது இல்லையா ஜி!
ReplyDeleteநீதிபதியாய் இருந்ததால் இந்த செய்தியே நிஜமாய் இருக்கலாம்.
தம + 1
1857லேயே இவ்வளவு நகைச்சுவையாய் தமிழில் முதல் புதினத்தைப் படைத்த வேதநாயகம் பிள்ளை அவர்களின் பணி போற்றத்தக்கது !
Deleteவெள்ளைக்காரன் காலத்தில் இது உண்மையாகவே நடந்திருக்கலாம் :)
நன்றி
சர்க்கரையாய் அனைத்தும் இனித்தது பகவான் ஜி.
ReplyDeleteஇந்த சர்க்கரை பக்க விளைவுகள் ஏதும் தராத பக்கா சர்க்கரையாச்சே :)
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம +1
அருமை ,மாயூராரின் மயக்கும் நகைச்சுவைதானே :)
Deleteநன்றி
1. முதல் ஜோக் அருமை. இது போன்று வரும் ஒரு சொல், இரு இடங்கள் தொகுப்பு உருவாக்கலாம்!
ReplyDelete2. ச்சே... பாவமா இல்லே?
3. ஹா...ஹா... சூப்பர். படிக்கத் தொடங்கும்போது எனக்கு இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது. அம்மாவுக்கு ஃபோன் செய்வாள் மகள். "அம்மா நேத்து ராத்திரி எனக்கும் இவருக்கும் ஒரே சண்டை... ரொம்ப முத்திப் போச்சு"
அம்மா சொல்வாள், "ஆரம்பத்துல இதெல்லாம் சகஜம்டா கண்ணா... அப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாகி விடும்"
மகளின் கேள்வி, "அது சரிம்மா... பாடியை என்ன செய்யறது?"
4. நேற்று மின்சார ரயிலில் சென்றபோது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. டார்ச்சர் காதல் ஒன்றைப் பார்த்தேன்!
1.உருவாக்குவது சிரமம் என்றாலும் ரசிக்கும்படி உருவாக்கலாம் !
Delete2.பாவமாத்தான் இருக்கு ,கண்ணுக்கு பொண்ணு ஓடிப் போறதை கண்டும் காணாமல்இருக்காரே என்று :)
3.அடிப் பாவி ,கதையை முடிச்சிட்டு இப்படி ஒரு கேள்வியா :)
4.நகர்மயமாதலின் கோர முகங்களில் இதுவும் ஒன்று !
நன்றி
டாக்டரின் பில்லை பார்த்தவுடன் வந்த சந்தோசம் எங்கு ஓடும் என்பது தெரியுமா.....???
ReplyDeleteஎன்ன பிரசர் ஏறும் ,அதுக்கும் ஒரு மொய் வச்சி செக் பண்ணிக்க வேண்டியதுதான் :)
Deleteநன்றி
\\''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னுதான் !''\\ "நீதான் உலகிலேயே சிறந்த அழகி"-இது பொய்தான், ஆனாலும் இரசிக்கக் கூடியது!!
ReplyDeleteஇப்படி சொல்லி கவுக்கப் போறான்னு தெரிஞ்சுகிட்டா சரிதான் :)
Deleteநன்றி
சக்கரை ஜோக் டாப்.
ReplyDeleteகவிமணியை திரும்ப நினைவூட்டியமைக்கு நன்றி.
பின்னூட்டக்காரர்களும் உங்களுக்குச் சளைக்காமல் ஜோக்கடிப்பார்கள் போலிருக்கே.. நான் ஸ்ரீராமைச் சொன்னேன்
ஸ்ரீ ராம் ஜி அவர்களின் பின்னூட்டத்திற்கு நானும் அடிமை ,அந்த பூவோட சேர்ந்து இந்த ஜோக்காளி நாறும் மணக்க ஆரம்பித்து விட்டது :)
Deleteநன்றி
அது சரி...
ReplyDeleteசர்க்கரை...
ஓடிப்போயி கல்யாணம்...
தண்ணிக்குள்ள...
காதலில் உண்மை
என எல்லாமே ரசிக்க வைத்தாலும் குளத்துக்குள் ஓடி விழுந்த சிரிப்பு அருமை.....
ஒரு ஒற்றுமை ,மாயூராரின் முதல் தமிழ் புதினத்திலேயே காதல் ஜோடி ஓடிப் போற மேட்டர் வந்து விட்டது :)
Deleteநன்றி
ஜோக்ஸ் எல்லாமே கலக்கல்! மாயூரம் வேதநாயகம் அன்னைக்கே இப்படி எழுதியிருக்காரா பலே!
ReplyDeleteஎன்னாலும் முதலில் நம்ப முடியவில்லை இது .ஆங்கில தழுவலாய் இருக்குமென நினைத்தேன் :)
Deleteநன்றி
வேதநாயகம் பிள்ளை த கிரேட்.
ReplyDeleteசர்க்கரை செம.
தம 12
கிங்ராஜ்-ம் த கிரேட் தான் செமயா ,த ம 12 போட்டதால் ::)
Deleteநன்றி
சர்க்கரை ஜோக் மிக அருமை.
ReplyDeleteகவிமணி சொன்ன ஜோக்கா - நம்ப முடியவில்லை.
1857 ம் வருடமே அவர் எழுதிய,தமிழின் முதல் புதினமே ,இன்றைய மெகா சீரியல் சப்ஜெக்ட் போலத்தான் இருக்கிறது !
Deleteநன்றி
கவிமணி மாயூரம் வேதநாயகம் அவர்களின் கதை நன்று.
ReplyDeleteசர்க்கரை இல்லைங்கிற செய்தி
தூக்கத்திலே நடக்கிற வியாதி
காதலன் சொல்றதெல்லாம் பொய்னு
என்றெல்லாம் பின்னியிருக்கிறியளே!
வலைப் பின்னல் உலகில் ஏதோ நானும் கொஞ்சம் பின்னிப் பாரக்கணுங்கிற ஆசைதான் அது :)
Deleteநன்றி