15 November 2014

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா ?

----------------------------------------------------------------------------------------

கொள்ளையர்களுக்கு பொருத்தமானப் பட்டம்?

              ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட் ன்னு  டாக்டர்களை சொல்ற மாதிரி கொள்ளையர்களையும் சொல்லலாமா ,ஏன் ? ''
             ''சாவியே இல்லாமே எந்த கதவையும் திறந்துடுறாங்களே !''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் ?

             ''திருப்பத்தூர்தான்  அவர் சர்வீசிலே உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''
                    ''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா ?

கற்பழிக்கப் படும் போது ...
அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு பெண்கேட்டால்...ஒரே  ஒரு வார்த்தைச் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார்   கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...
இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...
'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக' அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...
உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?
இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...
பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...
பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கமலின் விஸ்வரூபம் ..சின்னத் திரையிலா ?

                                                       

                   ''விஸ்வரூபம் படத்தை டிவியில்  போட்டா பார்க்க மாட்டேன்னு சொல்றியே ,ஏன் ?''
             ''விஸ்வரூபத்தை 70 mm திரையில் பார்த்தாதானே  பொருத்தமா இருக்கும் !

30 comments:

  1. நாவடக்கம் மட்டுமின்றி அவையடக்கமும் வேண்டும்...
    நமக்குத் தோன்றுவதெல்லாம் சமூகத்துக்கு சரிவருமா
    என்ற சிற்றறிவும் வேண்டும்... நல்லா சொல்லியிருகீங்க...
    ==
    நகைச்சுவை துணுக்குகள் அத்தனையும் கலகல...

    ReplyDelete
    Replies
    1. அது சிற்றறிவா ,பேரறிவாச்சே :)
      நன்றி

      Delete
  2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன ...

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க வைத்தது ஒன்று ,சிந்திக்க வைத்தது இன்னொன்று ..அப்படித்தானே :)
      நன்றி

      Delete
  3. Replies
    1. அந்த ஒன்று ,ஒன்றுக்கும் உங்க ஒன்று ரொம்பப் பொருத்தம் ,நன்றி !

      Delete
  4. பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எங்கே வருகிறது ,முட்டாள்தனமா உளறுகின்ற துணிவுதான் வருகிறதே :)
      நன்றி

      Delete
  5. Replies
    1. ஏகப்பட்ட மருத்துவச் செலவு செய்தவர்களுக்குத் தான் அந்த பட்டத்தின் அருமை தெரியும் :)
      நன்றி

      Delete
  6. 01. அப்படீனாக்கா டாக்டர்களையும் கொள்ளைக்காரங்கனு சொல்ல வர்றீங்களா ?
    02. திருப்பத்தூர் அவரை தூர் வாரிருச்சோ,,,,
    03. நாவடக்கம் மனிதனுக்கு அவசியமே நண்பர் கரந்தையார் அவர்கள் சொல்வதுபோல் பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,
    04. ஆமால, இது தெரியாம நான் மொபைல்ல பார்த்துட்டேனே,,,,

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. 1.சில டாக்டர்களுக்கு பொருந்தத்தானே செய்கிறது ?
      2.பெயர்க்காரணம் அவருக்கு புரிந்து இருக்கும் :)
      3.பதவியில் உள்ளோர் உளறினாலும் செய்தியாகி விடுகிறதே :)
      4.விஸ்வரூபம்கூட மொபைலில் அடக்கமாய் தெரியுதோ?
      நன்றி

      Delete
  7. முக்கிய பதவியில் உள்ளவர்கள் யோசித்துப்பெசாஇட்டால் பின்விளைவுகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. பிறகு மன்னிப்பு கேட்டுக்கலாம் என்றே பலரும் பேசுவதாக தெரிகிறதே :)
      நன்றி

      Delete
  8. Replies
    1. நீங்கள் இருப்பது ஒரிசாவில் ..கலிங்க நகர் என்பது தமிழ் பெயர் போல உள்ளதே ?
      நன்றி

      Delete
  9. இவ்வளவு கேவலாமாக கற்பழிப்பை சித்தரித்த இந்த மாகான் இன்னும் சிபிஐ ன் தலைவராக இருந்க்கின்றார் என்பது நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கேவலம்.

    ReplyDelete
    Replies
    1. பெரிய மனிதர் ...ஆனால் பேச்சு ....?
      நன்றி

      Delete
  10. ''...'கீ ஹோல் ஆபரேஷன் எக்ஸ்பெர்ட்...''
    ''..கமலின் விஸ்வரூபம் ..சின்னத் திரையிலா ?...''
    ஆம் அதெப்படி விசுவரூபம் சின்னத் திரையில்!...
    ரசித்தேன்.
    மிக்க நன்றி..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபத்தை உண்மையில் பார்க்கணும்னா வானத்துக்கும் பூமிக்குமா இருக்குமே :)
      நன்றி

      Delete
  11. ஜோக்ஸ் சூப்பர்! நாவடக்கம் வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்!

    ReplyDelete
    Replies
    1. அந்த மகானின் மொழியில் ,யாரும் நாவடக்கம் வேண்டுமென்று சொல்லவில்லை போலிருக்கே :)
      நன்றி

      Delete
  12. "பதவிவரும் போது
    பணிவு மட்டுமல்ல
    நாவடக்கமும் வர வேண்டும்
    போலிருக்கிறதே!" என்ற வழிகாட்டலே
    இன்றை பதிவின் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பினை சிறப்பாக சுட்டிக்காட்டிய உங்களுக்கு என் சிறப்பான நன்றி !

      Delete
  13. சிரிப்பும் சிந்தனையும்!! சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி !

      Delete
  14. ''விஸ்வரூபத்தை 70 mm திரையில் பார்த்தாதானே பொருத்தமா இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. பிரமாண்டமா பார்க்கணும்னா .70mm திரை சரிதானே :)
      நன்றி

      Delete
  15. பெரும்பாலான அரசியல் வாதிகள் நாவடக்கம் இல்லாதவரே!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஜெயிக்க வேறு செய்வார்கள் ,இது ஜனநாயகத்தின் சாபக்கேடு :)
      நன்றி

      Delete