14 March 2015

காதலின் எல்லை எது:)

-------------------------------------

அடச் சீ ,அப்பனின் காதல் கடிதங்களை மகனை படிக்க விடலாமா :)

         ''காதலிக்கிறப்போ நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''

         ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

காதலின் எல்லை எது ?

         ''இப்போ அழுது என்ன பிரயோசனம் ? உன் காதலன் உன்னைக்  கை விட  நீதான் முதல் காரணம் !''

           ''என்னடி சொல்றே ?''
       ''உன் மேலே கையை விட அவனை அனுமதிச்சது நீ தானே ?''


சே. குமார்14 March 2014 at 01:05
தப்பு... தப்பேதான்...




  1. தப்பை செய்தவன் தண்ணி குடிப்பான் ,இது இன்றையகாதலுக்கு பொருந்தாது ...காதலிக்கு தண்ணி காட்டிட்டு காதலன் கலர் குடிச்சிட்டு போய்கிட்டே இருப்பான் !

நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் !

                ''பால் எப்படி கிடைக்குதுன்னு ,என் பையனீடம் கேட்டா 'டிப்போவில் 

இருந்துன்னு 'சொல்றான் !''

             ''உங்க  பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற 

பையில் இருந்து 'ன்னு சொல்றானே !''


கொசு அடிக்கவும் கத்துக்கணும் !

பறந்து வந்து ...உடம்பின் மேல்  உட்கார்ந்து ...
கடி இடத்தில் 'லுப்ரிகேசன் 'செய்யும்  வரையிலும்  நமக்குத் தெரியாது ...
மெய் மறந்து ரத்தம் உ றிஞ்சும் கொசுவை அடிக்க வேண்டாம்  ..
மெதுவாக நசுக்கினாலே செத்துவிடும் ...
கொசு சொல்லும் பாடம் ...
பறப்பதை பிடிக்க நினைக்காதே !
சாதிக்க பொறுமை வேண்டும் !
மெய்   மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !

30 comments:

  1. 01. எழவு மயன் யேன் அந்தக் கருமத்தை இன்னும் வச்சிருந்தான்.
    02. இவ மருந்தைக் குடிக்க வேண்டியதுதான்.
    03. மாடு பார்க்காத மண்டுகள்.
    04. கொசு தத்துவம் புல்லரிக்குது.

    நண்பரே தமிழ் மணம் 1 2 3 4 5 6 7 8 9 இப்படி எழுதுவது தேவையில்லைனு நினைக்கிறேன் காரணம் இதை டைப்புவதால் கரண்டு செலவு கூடுது ஆனால் கண்டிப்பாக நமது ஓட்டு விழும் சரிதானே......

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி இப்போதுதான் சரியான முடிவுக்கு வந்திருக்கிறார்!!!!! நான் எப்போதும் நான் செல்லும் தளங்களில் கட்டாயம் வாக்களித்து விடுவேன். படித்து விட்டால் பின்னூட்டமும்!

      Delete
    2. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு உங்களுக்கு ஓட்டு போட முடியவில்லையே.... ஏன் ?

      Delete
    3. செட்டிங்ஸ் மாற்றங்களோடு நாங்கள் போராடவில்லை. அப்படியே விட்டு விட்டோம். எனவே எங்கள் பதிவுகளுக்கு ஓட்டுப்பட்டை வருவதில்லை. நடுவில் கொஞ்சநாட்கள் வந்ததோடு சரி. அதுதான் விஷயம்!

      :)))))

      Delete
    4. செட்டிங்ஸ் மாற்றங்களோடு நாங்கள் போராடவில்லை. அப்படியே விட்டு விட்டோம். எனவே எங்கள் பதிவுகளுக்கு ஓட்டுப்பட்டை வருவதில்லை. நடுவில் கொஞ்சநாட்கள் வந்ததோடு சரி. அதுதான் விஷயம்!

      :)))))

      Delete
    5. 1.பூட்டி வச்சுருந்தது எப்படி இந்த எழவு மகன் கண்லே எப்படிப் பட்டதோ :)
      2.மருந்து குடிக்க இவன்தான் காரணம்னு எழுதி வைச்சிட்டா நல்லது :)
      3.மாட்டைப் பார்த்தால் பாலைக்கூட மறந்து விடுவார்கள் :)
      4.கொசு தத்துவமாச்சே,அரிக்கத்தான் செய்யும் :)

      Delete
  2. 1. பரவாயில்லை, மகன் அவற்றைப் படித்துத் தேர்ந்து விடுவான்... இப்போது அவன் பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொள்வானே...!!

    2. ஹா...ஹா...ஹா... இன்னும் கொஞ்சநாள் கழிச்சு "பாலா? அப்படீன்னா?" என்பார்கள்!

    4. அதாவது ஒரு கொசுவைக் கொல்ல, அது இரண்டு சொட்டு ரத்தம் உறிஞ்ச ஆரம்பிக்கும்வரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. 1.ஜெராக்சும் எடுத்து வைத்துக் கொள்வான் :)
      2.மாட்டுப் பாலா என்று முகம் சுளிப்பார்களோ :)
      3.???
      4.எத்தனை சொட்டு ரத்தம்தான் அது உறிஞ்சும் :)

      Delete
  3. பொறுமைக்கு தந்த தத்துவம் சூப்பர் ஜி...!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் 'வாழும் கலை" பயிற்சிதானே :)

      Delete
  4. Replies
    1. உங்களின் உ வே சா .பதிவை நானும் ரசித்தேன் :)

      Delete
  5. ஹஹஹஹஹ்ஹஹ்....

    காதலில் இதெல்லாம் சகஜமப்பா...இது அந்தக்காலம் அதாங்க இப்ப கூட விஜு ஆசான் அவர்கள் அழகாக விளக்கம் சொல்லி வருகின்றாரே சங்க காலத்திலிருந்து இப்ப வரைக்கும் தான்.....

    பரவாயில்லை ஜி நல்ல காலம் பையன் "பால் வடியும் முகம் " என்று பாடி என் முகத்திலிருந்துதான் நு சொல்லலியே....

    அட அட அட என்ன ஒரு தத்துவமப்பா கொசு விடமிருந்து...ஹஹஹஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. காதலில் எது சகஜம் ,மொக்'கை 'ப் போடுவதா :)

      Delete
  6. தப்பை செய்தவன் தண்ணி குடிப்பான்....எந்தத் தண்ணி...????

    ReplyDelete
    Replies
    1. தண்ணி அடிக்கிறதே தப்பு ,அப்புறம் தண்ணீ வேற குடிக்கணுமா:)

      Delete
  7. நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் !தப்பில்லை! சொன்னது உண்மை அதுதானே!

    ReplyDelete
    Replies
    1. ஏட்டுக்கல்வி அறிவுக்கு உதவுமா :)

      Delete
  8. கொசு சொல்லும் பாடம்..சூப்பர்

    தம +1

    ReplyDelete
    Replies

    1. நம் ரத்தம் குடித்து,நமக்கே பாடம் சொல்லும் குருவாச்சே கொசு :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    இப்போது இவை யெல்லாம் சர்வ சாதரணமாகிவிட்டது... ஏன்டா படித்தனி என்றால் அப்பா தவறுதலாக படித்து விட்டேன் என்று சமாளிப்பது அதிகம்... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் படிக்காததையா கடிதத்தில் படித்து விடப் போகிறான் :)

      Delete
  10. வணக்கம்
    த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பத்தும் பத்தாததற்கு இன்னொரு முறையா :)

      Delete
  11. கொசு மகாத்மியம் அருமை. காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும்வரை என்று ஒரு பாட்டு கேட்ட நினைவு. இப்போதைய பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல நெல்லும் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. பாலும் தெரியாது நெல்லும் தெரியாது ,ஆனால் குடிக்க ,சாப்பிட மட்டும் தெரியும் :)

      Delete
  12. காதலின் எல்லை எது என்றால் அப்பனின் காதல் கடிதத்தை படிப்பதை தாண்டி..........

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பெரிய காதல் காவியம் ,பேரப் பிள்ளைங்களும் படிக்கட்டும் :)

      Delete
  13. கொசு கடிப்பது மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால், அதற்குப் பின் இவ்.வளவு பெரிய பொறுமை ரகசியம் இருப்பது தெரியவில்லை. தெரிய வைத்த பகவான்ஜிக்கு நன்றி !
    த.ம.12

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,உங்க மொக்கைக்கு கொசுக்கடியே தேவலேன்னு சொல்லாமல் விட்டீர்களே :)

      Delete