12 March 2015

முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு :)

----------------------------------------------------------

படிச்சா மண்டைக் காயும் ,பரவாயில்லைன்னா படிங்க  :)

                '''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
        ''காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் வரும்னு தெரியும்  ,புழுக்கை ஏன் காயுதுன்னு  எலியைத்தான் கேட்கணும் !''

 முதல் ராத்திரியிலேயே தெரிஞ்சு போச்சு :)           

                  ''நேற்றுதானே  கல்யாணம் ஆச்சு ?டாஸ்மாக்கிலே வேலைப் பார்க்கிறவரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குன்னு சலிச்சுக்கிறீயே,ஏண்டி ?''

          ''நான் அங்கே பார்க்கிறது பாட்டில்லே இருக்கிறதை கிளாஸ்லே விட்டுக் கொடுக்கிற வேலைதான் ,வீட்டுலே உனக்கு 'விட்டுக் கொடுப்பேன் 'னு கனவு  காணாதேன்னு சொல்றாரே !''
 திண்டுக்கல் தனபாலன்12 March 2014 at 06:53
ஓஹோ...! ஹா... ஹா...

வீட்டுக் - விட்டுக்...?..
MA படிச்சிட்டு ,இப்படி பாட்டில்லே இருக்கிறதை கிளாஸ்லே 'விட்டுக் கொடுக்கிற 'வேலைப் பார்க்கிறோமேன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை அவருக்கு இருக்கிறனாலே, முதல் ராத்திரியே கறாரா இப்படி சொல்லிட்டார்ன்னு நானும் 'விட்டு 'அடிச்சா நீங்க ரசிக்காமலா போய்விடுவீர்கள் ?(இருங்க மூச்சு வாங்கிக்கிறேன் )
PARITHI MUTHURASAN12 March 2014 at 11:00
மது-மாது ஜோக்? கொஞ்சநேரம் கழிச்சுத்தான் புரியுது




  1. ரெண்டுமே போதை சமாசாரமாச்சே ,லேட்டாத்தான் வேலை செய்யும் !
  2. புலவர் இராமாநுசம்12 March 2014 at 14:42
    அறத்துன்பம்!(தர்ம சங்கடம்)

    Bagawanjee KA12 March 2014 at 22:48
    1. அறாக் ஷாப்பினால் வந்த துன்பம்னும் சொல்லலாம் அய்யா !
    2. 'புரிந்துணர்வு ஒப்பந்தம் 'னா புரிங்சுக்கிடணும் !

                ''அந்த காலத்திலே நல்ல நல்ல காரியம் நடந்தது ...இப்போ  எதை எடுத்தாலும் 
    3. ஊழல் .லஞ்சமுமா இருக்கே ,ஏன் ?''
    4.          ''இது 'புரிந்துணர்வு 'ஒப்பந்தம்  போடுற  காலமாச்சே !''

    5. இதுவும் 'குடிக்காதே 'என்பதை போலத் தானா ?



      மக்கள்  தொகையை கட்டுபடுத்த 'கு . க ' திட்டம் கொண்டு வந்த அரசு...
      பாலிதீன்  பை உற்பத்தி தடை சட்டம் கொண்டு வரலாமே ?
      உற்பத்தி செய்வானேன் ?உபயோகப் படுத்தாதே என்பானேன் ?


26 comments:

  1. 01. எள்ளுக்கு உரமாக காயுதோ.....?
    02. இப்படியே போனா அவ, இவணை விட்ருவாளே..... ?
    03. எல்லோருமே புரிஞ்சு நடந்துக்கிட்டா, ஒப்பந்தம் எதற்க்கு ?
    04. அதானே உள்ளுக்குள்ளே நடக்கிறதை நிறுத்திப்புட்டாங்கே, வெளியிலே நடக்கிறதை நிறுத்த முடியலையே....

    ReplyDelete
    Replies
    1. 1.எல்லாக் கழிவுகளும் உரம்தானா :)
      2.கொஞ்ச நாள் விட்டுத்தான் பார்ப்போமே :)
      3. திருமண பந்தம் கூட ஒரு ஒப்பந்தம்தானே :)
      4.அது செய்ய முடிந்தவர்களுக்கு இது செய்ய விடாமல் தடுப்பது எது :)

      Delete
  2. எள்ளு காயுது...ஏன் எலிக் புழுக்கை...
    விட்டுக் கொடுப்பது....
    அருமை யோக்குகள் கோக்குளாக இருக்குது.
    நன்று...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. கோக்கு,மாக்கு ,ஜோக்கு :)

      Delete
  3. காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் வரும்னு தெரியும்
    எண்ணெய் வந்த பின் எஞ்சியது புண்ணாக்குத் தானே
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. புண்ணாக்கா...நல்ல தகவல் அறியத் தந்தீர்கள் :)

      Delete
  4. நான்கையுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் கடமை அழைத்து விட்டது போலிருக்கே :)

      Delete
  5. உற்பத்தியை உபயோகப்படுத்துவதால்...!

    ReplyDelete
    Replies
    1. மூன்றாவதா பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தா விடுகிறோம் :)

      Delete
  6. ஹ ஹ ஹா..................
    தம+1

    ReplyDelete
    Replies
    1. சிரித்து மகிழ்ந்ததற்கு (?) நன்றி :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை இரசித்ததேன் பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் த ம ஐந்து ,ஐந்தருவியில் குளித்த சுகத்தைத் தருகிறதே ,நன்றி :)

      Delete
  8. சட்டத்தால் குக கொண்டுவர முடியுமா. இதற்கும் ஒரு புரிந்துணர்வு வேண்டுமல்லவா/ ஜோக்குகள் அனைத்தியும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தால் முடியாமப் போய்த்தானே காசு கொடுத்து குகாவுக்கு ஆள் பிடிச்சாங்க :)

      Delete
  9. புழுக்கை காஞ்சு உரமாகலாம்னு நினைக்கிறேன் .
    விட்டுக்கொடுத்தார் பெட்டுப்போவதில்லை - னு அவர வச்சிதான் எழுதிருப்பாங்களோ . டிப்சே நாளுக்கு 500 தாண்டும் .
    கவர்ன்மென்ட் நல்லது செஞ்சா மக்கள் எப்படி ஏத்துப்பாங்க . அப்பறம் சில புரட்சியாளர்கள்லாம் பதிவு போடமுடியாமதவிக்கவேண்டியதுதான் .

    அனைத்தும் அருமை அண்ணா .
    தம+

    ReplyDelete
    Replies
    1. விட்டுகொடுப்போர் கெட்டுப் போகமாட்டாங்க ,எடுத்துக் குடிப்போர்தான் ......:)

      Delete
  10. ஹஹஹஹஹஹஹ் ரசித்தோம்! ஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க நேற்று ரசித்ததற்கு ,இன்று நன்றி :)

      Delete
  11. முன்கூட்டியே கனவு காணாதேன்னு சொல்றாரே !' எப்பேர்ப்பட்ட 'பரந்த மனம் உள்ளவர்

    ReplyDelete
    Replies
    1. பரந்த மனம் வாழ்க :)

      Delete
  12. Replies
    1. நன்றல்லது தான் ஜோக்காளிக்கும் பிடிக்காதே :)

      Delete
  13. Replies
    1. சரி ,சரி ,வேறு ஏதோ முக்கிய வேலையில் இருப்பீர்கள் போலிருக்கு ஊமை இல்லை இல்லை ...உண்மைக் கருத்துரையை நாளை இடுங்கள் :)

      Delete