17 March 2015

தாலி கட்டுற முன்னாடி இப்படி கேட்கலாமா :)

              ''என்னங்க ,பேப்பரைப் படிச்சீங்களா ? 15 +7 எவ்வளவு என்ற கேள்விக்கு 17ன்னு பதில் சொன்னவனை ,கட்டிக்கவே மாட்டேன் என்று மாலையைக் கழற்றி எறிஞ்சிட்டாளாமே புதுப் பொண்ணு ?''
                 ''சரியா தானே பதில் சொல்லியிருக்கான் புது மாப்பிள்ளை ?''

இதுக்கு அப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ ?

          ''எங்க கடை ஆப்பிள் மேலே  export qualityன்னு ஸ்டிக்கர் ஓட்டியிருக்கோம் ...அதாவது மேல் நாட்டுக்கு போகும்  தரம்னு ,உங்களுக்கென்ன சந்தேகம் ?''
         ''பிறகேன் ,நேற்று ஆப்பிளை சாப்பிட்டவுடனே என் நண்பர் மேலோகம் போய் சேர்ந்தார்?''
          ''ஸ்டிக்கரைக் கிழிக்காம சாப்பிட்டு இருப்பார்  !''


ஸ்ரீராம்.17 March 2014 at 04:48
:))))

மேலோகத்துக்குப் போக ஸ்டிக்கர்தான் டிக்கெட் போல!.


  1. கொல்ல சதி செய்து ஸ்டிக்கர் பேஸ்ட்டில்  சயனைட்டை கலந்து இருப்பாகளோ ?
  2. an apple a day keeps the doctor away!என்பதற்கு அதுதான் அர்த்தமோ?.


    1. போஸ்ட்மார்ட்டம் பண்ண வேண்டுமானால் டாக்டர் தேவைப் படலாம் !
    2. அந்த ஸ்டிக்கர் மேல Straight to heavenனு எழுதியிருந்துதோ என்னவோ:)


      1. யாருக்கு தெரியும் போய் சேரும் இடம் heavenஆ ,hellஆ என்று ?
      2. இந்த ஸ்டிக்கரை ஒட்டி படாதபாடு படுத்துகிறார்கள்!


        1. நேற்று நான் ஸ்டிக்கரைக் கிழிக்க பட்ட பாடுதான் ,இன்னைக்கு உங்களை இந்த பாடுபடுத்திக்கிட்டிருக்கு !ஆப்பிள் தின்கிற ஆசையே போச்சு !
        2. நடிகையை ரசிப்பதோடு நிறுத்திக்கணும் ,இல்லேன்னா !

               ''கோவில் கும்பாபிசேகம் செய்யணும்னு  
        3. போராட்டம் செய்தவர்களை  கைது
        4. பண்ணிட்டாங்களாமே ?''
        5.         ''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,
        6. நடிகைக்கு கட்டின கோவிலுக்கு ஆச்சே !

        7. டாக்டர் தெய்வமா ,எமனா ?



          டாக்டரை ....
          தெய்வம் என்றார்கள் ...
          ICU வில் கோமாவில் இருந்தவன் ,எழுந்து நடந்ததும் !
          எமன் என்றார்கள் ...
          தலைவலி என்று வந்தவன் ,இறந்ததும் !








32 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி,உங்க கழுகுக் கண்ணில் முதலில் பட்டது குறைப் பிரசவமான பதிவு !
      நீங்க மறுபடியும் ஒண்ணுலயிருந்து ஆரம்பித்து கமெண்டைப் போடுங்க :)

      Delete
    2. 01. இது வேறயா ?
      02. ஆப்பிள்ல ஸ்டிக்கர் ஒட்டுறதுக்கு பதிலா, பாத்திரத்தில் பெயர் வெட்டுவது போல் வெட்டக்கூடாதா ?
      03. குஷ்பாம்பிகாளே போற்றி அப்படினு சரணம்கூட சொன்னாங்கே ஒரு நேரத்துல...
      04. தலைவலிக்கு வந்தவன் ICU வா ?

      Delete
    3. 1.நீங்க சொன்னது புது மாப்பிள்ளையைத் தானே :)
      2.நல்ல ஐடியா ,அதையே செய்யச் சொல்லிடலாம் :)
      3.இப்போ சச்சினுக்கு வேற கோவிலாம் :)
      4.பார்க்க வந்தவரே படுக்கையில் இருக்காரே :)

      Delete
  2. புது மாப்ளே நம்ம கேங் போல..!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அதானே இப்படி அற்பமான கேள்விக்கெல்லாமா பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியும் :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    மாப்பிள்ளை.. நம்பர் 1.. போல...
    இருக்கிற கோயிலை கும்பிட நேரமில்லாத காலத்தில் நடிகைக்கு கோயிலா?,.. நல்ல சமுகம் வாழ்க...
    மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நம்பர் ஒண்ணுல்லே,படித்ததே அதுதான் போலிருக்கு :)

      Delete
  4. ஆப்பிள் ஸ்டிக்கரை அப்படியே காட்டி உள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மக்களை ஏமாற்ற இப்படியும் ஒரு ஸ்டிக்கர் ,இப்படியும் ஒரு வாசகம் :)

      Delete
  5. சரியாத்தான் சொல்லியிருக்கானா, செய்திருக்கானா? எஸ்கேப் ஆயிட்டான் என்கிறீர்களா? ஹா..ஹா...ஹா..

    2. ஹிஹிஹி..... என் கமெண்ட்டும்! டாங்க்சுங்க!

    3. அடப்பாவிகளா? அப்போ மதுரை ரசிகர்களாத்தானிருக்கணும்! ஹா...ஹா...ஹா..

    4. ம்ம்ம்ம்.... வாச்சுக்கறதுதான் அமைஞ்சுக்கறதுதான்!

    ReplyDelete
    Replies
    1. புது மாப்பிள்ளை தப்பாய் சொன்னதைக் கூட சரியான பதில் என்று சொல்லும் பழைய மாப்பிள்ளையை என்ன செய்வது :)
      2.தாங்க்ச்சு நானில்லே சொல்லணும் :)
      3.இம்மாதிரி புரட்சிக்கெல்லாம் மதுரை முன்னோடியாச்சே :)
      4.அதுதானே டாக்டரைக் கோளாறு சொல்லலாமா :)

      Delete
  6. டாக்டரின் நேரம் பொறுத்து...?

    ReplyDelete
    Replies
    1. இதற்காக டாக்டரின் ஜாதகத்தையா பார்க்க முடியும் :)

      Delete
  7. மாப்பிள்ளை கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினவராம்.
    எக்ஸ்போர்ட்க்கு இப்பத்தான் சரியான அர்த்தம் தெரியுது
    நல்ல காலம் நடிகைக்கே கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்லலையே
    அப்ப டாக்டர் நல்லவரா,கெட்டவரா?

    ReplyDelete
    Replies
    1. அது பதில் சொன்னதில் இருந்தே தெரியுதே :)
      எதை எக்ஸ்போர்ட் செய்கிறார்கள் என்றுதானே :)
      அதுக்கு நடிகை ஒத்துக்கணுமே :)
      'நாயகன்' கேள்வி மாதிரி இருக்கே இது :)

      Delete
  8. Replies
    1. விடாது ரசிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி :)

      Delete
  9. முதல் ஜோக் எனக்கு புரியலை! ஸ்டிக்கர் ஒட்டி மேலோகம் அனுப்புவது இப்போது வேறு பழங்களில் தொடர்கிறது தெரியுமா? கைது பண்ண வேண்டியதுதான்! கொடுத்தால் நல்லவன், தடுத்தால் கெட்டவன் என்ற மனோபாவம் அது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்டிக்கர் ஒட்டாமல் கூட ,பழங்களை 'கார்பன் 'வைத்து பழுக்க வைத்து ,நம்மை மேலே அனுப்பும் வியாபாரிகளும் இருக்கிறார்களே :)

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    சரியாத் தானே பதில் சொல்லியிருக்கான் புது மாப்பிள்ளை... ஆமாம்... மாப்பிள்ளை சரியாத்தான் பதில் சொல்லி இருக்கான்...புதுப் பொண்ணு கேட்ட கேள்விதான் இந்த பதிலுக்குச் சரியா கேட்க வில்லை...ஓழுங்கா கேள்வி கேட்கச் சொல்லுங்க...இல்லேன்னா... எங்க மாப்பிளை பொண்ணக் கட்டிக்க மாட்டாரு... ஆமாம்... சொல்லிட்டேன்...!

    ஆதாம்... ஏவாளுக்கு கொடுத்த கனியா இருக்குமோ? அந்தக் கனியை உண்டால் மேலோகம் போவது எளிது என்று எண்ணியிருக்கலாம்... போயிட்டு போகட்டும்... விடுங்கள்...!

    ''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது , நடிகைக்கு கட்டின கோவிலுக்கா...நா கூட என்னமோன்னு நெனச்சேன்...அப்படி விளங்கும் படியா சொன்னாத்தானே புரியும்!

    டாக்டர்கள்... முதலில் வந்தவர்... எம்.பி.பி.எஸ் படிச்சவரா இருக்குமோ? இரண்டாமவர் எம்.பி.பி.எஸ். படிக்கனுமுன்னு நெனச்சவரா இருக்குமோ? இவனுக்கு தண்ணியில கண்டம் மாதிரி... எம கண்டம்... எமன் எந்த வடிவத்திலையும் வரலாமுல்ல...?
    நன்றாக இரசித்துப் சிரித்துப் படித்தேன்...!

    -நன்றி.
    த.ம. 9.







    ReplyDelete
    Replies
    1. என் பதிவை விட நீண்ட கருத்துரை கூறியதற்கு முதலில் நன்றி :)

      பத்தும் ,எழும் எவ்வளவுன்னு சுலபமா கேட்கத் தெரியாதவள் கூட எப்படி காலமெல்லாம் சேர்ந்து வாழ முடியும் :)

      அந்த கனியை ஜனங்களை பல்கிப் பெருகச் செய்த 'காமக் கனி'யென்று அல்லவா கூறுவார்கள் :)

      தமிழில் குடமுழுக்கு என்று கூட புரியும்படியா சொல்லி இருக்கலாமோ :)

      எம் .பி.பி.எஸ் படிச்சதாவே நினைச்சுகிட்ட டாக்டர் அவர் :)

      Delete
  11. எக்ஸ்போர்ட் க்வாலிட்டி.. அதிகம் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ்போர்ட் க்வாலிட்டி என்றால்தானே மக்கள் கண்ணை மூடிக் கொண்டு 'பழத்தை' வாங்குகிறார்கள் ?

      Delete
  12. 10 க்கு மேல +1 தானே
    அப்ப நான் +1 ன்னு சொன்ன ஏன் முழிக்குறீங்க ?!!!
    தம +1

    ReplyDelete
    Replies
    1. +1 என்றால் ,அன்பே சிவம் என்கிற தத்துவம் எல்லாம் வராதே,ஒருவேளை 60 + ஒண்ணா:)

      Delete
  13. புரிந்தது மாதிரி இருக்குது.... ஆனால் புரியல ஜி ... அதெப்படி 17...

    ReplyDelete
    Replies
    1. புது மாப்பிள்ளையைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியாச்சே இது :)

      Delete
  14. த ம 100

    கணக்கில் நானும் வீக்கு பகவானே!

    ReplyDelete
    Replies
    1. அது நூறு சதம் உண்மைன்னு தெரியுதே :)

      Delete
  15. அப்போ 15+ 7 17 இல்லையா.?டாக்டர் என்பவன் தெய்வமாகலாம் சில நேரங்களில் யமனுமாகலாம்

    ReplyDelete
    Replies
    1. அப்போ இல்லை ,இப்போதான் 17:)
      வசூல் ராஜாக்கள் எல்லோரும் அப்படித்தானா :)

      Delete