---------------------------------------------------------------
திருடர்களுக்கு எச்சரிக்கை :)
''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
இது உண்மையா ?பெண்கள்தான் சொல்லணும் !
''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''
''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''
''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''
Mythily kasthuri rengan27 March 2014 at 10:22
பொண்ணுங்களை குறைசொல்லலை ன ஆண்களுக்கு தூக்கம் வரதே!
நீங்க மட்டும் டீ கடைல பிரசங்கமா கேட்குறிங்க?
நாங்களாவது அக்கம்பக்கத்து வீடு பத்தி பேசுவோம் , நீங்க ஊர் , உலகவம்பை விவாதம் என்கிற பேர்ல பேசுவிங்க! போங்க பாஸ் போய் பிள்ளைகுட்டிகளை படிக்கவைங்க !
நீங்க மட்டும் டீ கடைல பிரசங்கமா கேட்குறிங்க?
நாங்களாவது அக்கம்பக்கத்து வீடு பத்தி பேசுவோம் , நீங்க ஊர் , உலகவம்பை விவாதம் என்கிற பேர்ல பேசுவிங்க! போங்க பாஸ் போய் பிள்ளைகுட்டிகளை படிக்கவைங்க !
|
|
Tweet |
01. வீட்டுக்காரன் ஏற்கனவே திருடன் வேலை செய்திருப்பானோ....
ReplyDelete02. மொத்தத்துலே யாருக்கும் சொந்த வேலையில்லை.
03. முதல் ஜோக் ஆளுகளுக்குதான் கொண்டாட்டம்.
1.அதுதான் திருடர்கள் மேல் அக்கறை பொங்கி வழியுதா :)
Delete2.இருந்தால் இப்படி ஆசைப் படப் போகிறார்கள் :)
3.அவங்க வசதிதானே ரொம்ப முக்கியம் :)
போர்டு ஹா... ஹா...
ReplyDeleteஏன் ஜி... அங்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வருதா...?
என்ன அக்கறை பாருங்க ,திருடன் ஏமாறக் கூடாதுன்னு :)
Deleteஇங்கே மட்டுமா ,பல ஊர்களிலும் இதே நிலைமைதானே :)
எந்த பேங்குனு போட்ருந்தா திருடவரவனுக்கு இன்னும் உபயோகமா இருந்திருக்கும் .
ReplyDeleteபொரணி பேசுவது என்றால் என்ன ? ஒருத்தர் முன் நின்று நீங்கள் ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டு இந்த பக்கம் வந்து அவரப்பத்தி இன்னொருத்தர்கிட்ட , ஹே அவன் ஒரு கழிசடைப்பானு சொல்றதுதான ? ஆண்கள் மோடிகிட்ட போய் நீங்க ஒரு உத்தமர்னு சொலிட்டு இந்த பக்கம் டீக்கடையில வந்து அவர் ஒரு பம்மாத்து ஆளுயானா சொல்றோம் . இல்லையே . ஆனா பெண்கள் அப்படியா ?
தம+
இன்னைக்கு போறோம் ,நாளைக்கு வர்றோம் ,பேங்கில் இருந்து கொண்டு வந்து வைச்சிருக்கணும் ,இல்லைன்னா நடக்கிறதே வேறன்னு திருடர்கள் பதில் எழுதிப் போட்டாலும் போடுவார்கள் :)
Deleteஇதுக்கு நான் பதில் சொல்றதை விட ,தாய்க்குலம் யாராவது பதில் சொன்னா சரியாயிருக்கும் :)
திருடர்களுக்கு எச்சரிக்கை. நல்ல உத்தி.
ReplyDeleteஎச்சரிக்கையைப் பார்த்து 'மூட் அவுட் 'டாகி பக்கத்துக்கு போய் விடுவார்களோ :)
Deleteமுதல் ஜோக் அருமை. பேசாமல் நாய்கள் ஜாக்கிரதை என்பதுபோல் இந்த போர்டையும் வைத்துவிடலாம்.
ReplyDeleteத ம 4
இந்த வீட்டு உரிமையாளர் எங்கள் வங்கியில்தான் பாதுகாப்பாய் வைத்துள்ளார் என்று பேங்க்காரங்களே விளம்பர போர்டுகள் வைக்கலாமே :)
Deleteஅருமை
ReplyDeleteதம5
பெருமைப் படுத்தியதற்கு நன்றி :)
Deleteஅத்துனையும் அருமை ஜீ,,,,,,,,,,,,,,
ReplyDeleteதிருட்டு ராஸ்கலுக்கு சொன்ன விதமும் அருமைதானா :)
Deleteஎந்த நகையும் வீட்டில இல்ல அதனால தயவு செய்து வீட்ட அலங்கோலப்
ReplyDeleteபடுத்த வேண்டாம் என்று நான் எழுதிப் போட வேணும் என்று கதைச்ச கத
இவருக்கு எப்படித் தெரியும் !!!! அது சரி பெண்கள் ஒரு சுதந்திர மீடியா அது
தான் பக்கென்று விசயம் இந்தியா வரைக்கும் பத்திக்கிச்சு போல அவ்வ்வ்வ் :))))))))))))
நீங்க அங்கே கதைச்சது இங்கே எனக்கு தெரிஞ்சதுக்கு காரணம் ,பதிவர்கள் எண்ணங்கள் உலகமெங்கும் அலைந்து கொண்டே இருப்பதால்தான் :)
Deleteபெண்களைக் கிண்டல் அடித்து பதிவு எழுதுகிறவன் நான்பேசாத வேலைக்காரிகிடைத்தால் எனக்கு விஷய தானம் தருபவரில் ஒருவர் குறைவு. . பெண்களின் வயசைக்கேட்கக் கூடாது என்பதால் யாரும் கேட்பதில்லை. நிலைமைஅப்படி இருக்கும் போது தான் இளமையானவர் என்று சொல்லிக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் ஆகிவிட்டதே,. ரசித்தேன்
ReplyDeleteஉங்கள் பதிவுக்கும் பேஸ்மென்ட் அது தானா :)
Deleteபரீச்சை எல்லாம் முடிந்து லீவுதான் விட்டாச்சே ,மைதிலி டீச்சர் எங்கே போனாங்கன்னு தெரியலையே :)
நன்று!நன்று! நன்று!!
ReplyDeleteஓஹோ ,மூன்றுமே நன்றா :)
Deleteதிருடர்கள் நன்றி தெரிவித்து தார்களா...? இல்லையா...?
ReplyDeleteஅந்த போர்டிலேயே ,தகவலுக்கு மிக்க நன்றின்னு எழுதி இருந்தாங்களே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
திருடர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் ... ஏற்கனவே இந்த தொழிலை செய்து இருப்பார் போல..... மற்றவைகளைஇரசித்தேன்... த.ம10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஃஏப்ரல் ஃ பூல் ஆக்க வேண்டாம்னு எழுதிப் போட்டிருப்பாரோ :)
Deleteஅன்புள்ள பகவான் ஜி,
ReplyDelete‘அனைவருக்கும் கல்வி’ங்கிறது பாஸ்க்கு தெரியாமலே...வருஷம் பாஸாயிடுச்சே...! ஒரு வாரத்தில எழுத்துகளப் படிக்கப் பழகிட்டு...தொழில ஆரம்பிக்கட்டும்...! பிள்ளங்க காசு பணத்த கண்ணுல பாக்காம ஏமாந்திடப் போவுதுக! கவலப்படாதிங்க செல்லம்!
வாயில்லா பூச்சி... வாய் பேசமாட்டா...! கண்ணாலதான் பேசுவா...! கண்மணி அப்படித்தானே!
சும்மா... கரண்ட்...கரண்ட்...ன்னு கேட்டீங்கன்னா... கரண்ட்ட தண்ணியில விட்டிடுவேன்... அப்புறம் தண்ணியில நீங்க பட்டபாடு...சொல்லிப்புட்டேன்... ஆமா!
நன்றி.
த.ம. 11.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அனைவரும் பாஸ்தானா:)
Deleteகண்ணாலே வம்பு பெருசாயிடுமே :)
அய்யய்யோ ,இந்த விளையாட்டுக்கு நான் வரலே ,டாஸ்மாக் தண்ணியில் கூட நீங்க கரெண்ட்டை விட்டாலும் விடுவீங்க :)
போங்க..பாஸ் ...போயி...... பிள்ளகல படிக்க வைக்கிற இடமெல்லாம் காசு புடுங்கிற இடமாச்சுன்னு சொல்லங்க..பாஸ்
ReplyDeleteஅந்த கொடுமை, டீச்சருக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா :)
Deleteஹஹஹஹ் ஜி பேங்க் லாக்கர் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டமோ.....
ReplyDeleteஎங்கள் பின்னூட்டம் ஒன்றும் இங்கு வந்தமைக்கு மிக்க நன்றி ஜி! சகோதரி மைதிலி நிச்சயமாக இளமையானவர்கள் ஏனென்றால் குழந்தைகளுடன் தான் பெரும்பாலும் - மனதை இளமையாக வைக்க உதவுவதுதானே! மட்டுமல்ல அவங்களே சின்னப் புள்ளைதான்...
ஹஹ்ஹ அட ...தண்ணியே இல்லை அப்புறம்ல கரண்ட்.....எப்படிங்க தண்ணி இல்லாம அதுலருந்து கரன்ட் ப்ராஜகட் எல்லாம்...
கண்டுபிடிக்கிறது கஷ்டமில்லை ,உடைப்பதுதான் கஷ்டம் :)
Deleteஅவங்களே சின்னப் புள்ளைதான்.....இதுக்கு சின்ன புள்ளேதான் பதில் சொல்லணும் :)
புனல் மின்சாரம் இல்லைன்னா ,அனல் மின்சாரம் பண்ணலாமே :)
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தன! நன்றி!
ReplyDeleteஅப்படி என்றால் இது டூ இன் ஒண்ணா :)
Delete“ கரண்ட் தண்ணி “ ங்கிறது ஒரு வேளை குடிச்சா மண்டை வரைக்கும் சுர்ர்ன்னு ஏறுற தண்ணியா இருக்குமோ..:))
ReplyDeleteஅப்ப படப்போற பாடு கொஞ்சம் அதிகம் தான்.
ஆஹா ,இதைப் படித்ததும் ...என் உச்சி மண்டையிலே சுர்ர் ருங்குதே :)
Deleteகரண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தா பரவாயில்லை...
ReplyDeleteஇவனுக விடவே மாட்டேங்கிறானுங்களே....
அதானே பிரச்சினை ஜி...
ரசித்தேன்...
#கரண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்தா பரவாயில்லை...#
Deleteஉங்களுக்கு நானும் இதைதான் சொல்கிறேன் ,ஒரு நாள் விட்டுட்டுதானே நீங்களும் இன்றைக்கு வந்து இருக்கீங்க :)