----------------------------------------------------------------------------------------------------
பிள்ளைங்க பரீச்சையில் பாஸ் ஆக இப்படியா உதவுறது :)
''நீ பரீச்சை எழுத ,நான் ஏண்டா உடும்பு மாதிரி சுவரில் ஏறப் பழகணும்?''
''பொறுப்பில்லாம பேசாதீங்க அப்பா ,நாலாவது மாடியில் ஏறி ஜன்னல் வழியா பிட் கொடுக்கிறவங்களைப் பார்த்தாவது திருந்தப் பாருங்க !''
கைவிடக் கூடாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்களா ?
''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''
''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''
கரந்தை ஜெயக்குமார்25 March 2014 at 11:05
ஆகா ஔவைக்கு இந்த நிலையா?
|
|
Tweet |
01. கரணம் தப்பினால் மரணம் போலயே.......
ReplyDelete02. நல்லவேளை எங்க அப்பத்தா அன்னைக்கே செத்துப்போச்சு.
03. அதானே ஓரவஞ்சனை எதற்க்கு ?
04. இப்படியும் இருக்குமோ.....?
1.நாலு மாடி படியேறினால் நமக்கு மூச்சு வாங்குது ,இவனுங்க எப்படி :)
Delete2.இருந்திருந்தா ,இதைப் படிச்சிட்டு போய்சேர்ந்து இருப்பாங்களா :)
3.ஆந்திராகாரனுக்கு மட்டுமென்ன காட்டுறது ,ஆத்திரமா வருது :)
4.எப்படியும் சொல்லிக்கலாம் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நாலாவது மாடி ஜன்னல் வழியே பிட்டு கொடுத்ததைதானே :)
Deleteடைம்லி ஜோக் சூப்பர்
ReplyDeleteபாசக்கார அப்பன்கள்,பிள்ளைங்களுக்கு எப்படியெல்லாம் உதவுறாங்க :)
Deleteவாழ்கையில் பாஸ் ஆகாத பெற்றோர்கள்...!
ReplyDeleteமகனையும் பெயிலாக்கும் பெற்றோர்களும் கூட :)
Deleteஅனைத்தும் அருமை ஜி .
ReplyDeleteதம+
மகன்மேல் எவ்வளவு பாசம் இருந்தால் ,இப்படி தைரியமா ஏறி பிட் கொடுக்கத் தோணும் :)
Deleteஅப்பன் மகனுக்கு இப்ப உதவினால்தானே..பின்னாடி..மகன் அப்பனுக்கு உதவுவான். பிட்டு என்ற விசயத்திலே பெரிய தத்துவமே அடங்கிறது.
ReplyDeleteபடத்தில் உள்ள பய பிள்ளைங்களைப் பார்த்தால் 'சைட்'டுக்கு கொடுக்க வந்த மாதிரி இருக்கே ,காதல் வந்துட்டா ,இமய மலையில்கூட ஏறுவாங்க போலிருக்கே :)
Deleteதேர்வு நேரத்தில் பிட் பற்றிக் கருத்திடப்போய் எனக்கு ஏன் வேண்டாத வம்பு..!
ReplyDelete:))
பிட் அடிக்கிறவங்க போட்டுத் தாக்கி விடுவார்களா :)
Deleteடாஸ்மாக் கடையில் அவ்வையின் ஆத்திசூடி எழுதி இருக்கிறதா.?
ReplyDeleteஒரு குடிகாரன் தெளிவா இருக்கும் போது ,சிந்தித்து எழுதி இருக்கானே :)
Deleteஅத்துனையிம் அருமை. முதல் கேள்வி வேதனை.
ReplyDeleteசான்றோன் ஆக்குதல் தந்தைக்கடனே ...இவன் எங்கே ஆகப் போறான் :)
Deleteநீயும் ஒரு அப்பனா ? என்றான் என் மகன்.
ReplyDeleteதிடுக்கிட்டேன்.
ஏண்டா ?
இங்க பாரு. இனிமேயாச்சும் இவங்களைப் பார்த்தபின்னே ஆவது
பொறுப்பா நடந்துக்க.
நாளைக்கே நான் பாஸ் பண்ணி வேலைக்கு போனா என்னோட சம்பளப் பணத்த மட்டும் வேண்டும் . இப்ப எனக்கு வேணும் அப்படின்னா நீ செஞ்சா குறஞ்சா போயிடுவே.
காலம் டா. .
சுப்பு தாத்தா.
அதானே ,மகன் இக்கட்டான நிலையில் இருக்கும் போது உதவாதவன் எல்லாம் அப்பன் ஆவானா :)
Delete''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு! ஐயோ! பாவம் ஆத்திச் சூடி
ReplyDeleteஇன்று ஔவை இருந்திருந்தால் ,நம்ம பெருமாள் முருகன் மாதிரி ..இதுவரை எழுதிய எல்லாவற்றையும் வாபஸ் வாங்கிறேன்னு சொல்லி இருப்பாங்களோ :)
Deleteஎல்லாமே சிறப்பான ஜோக்ஸ்தான்! பாராட்டுக்கள்!
ReplyDeleteகன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு உங்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்த்தேன் :)
Deleteவழக்கம் போல் அனைத்தும் சூப்பர்!
ReplyDeleteத ம 11
வழக்கம் போல இப்படி கமெண்ட் போடாமல் , கொஞ்சம் வித்தியாசமாய் போடலாமே,செந்தில் ஜி :)
Deleteகாலத்திற்கேற்ற கருத்துப்படம், நகைச்சுவையோடு.
ReplyDeleteஇந்த படத்தை பார்த்ததும் ,பூச்சு வேலை நடக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன் :)
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதானாடாவிட்டாலும் தன் தசையாடுமுன்னு சொல்வாங்களே... அது இதுக்காத்தான் இருக்குமோ?
எம்மா உயரத்தில இருக்காங்க... நிச்சயம் தசையாடுங்கிறீங்ளா...? ஒரு வேளை ‘களவும் கற்று மற’ன்னு சொல்லித்தாராங்களோ என்னமோ? அவுங்களப் போயி தப்பா நினைச்சுட்டமே!
பாடங்களைப் படிக்காமலே... சின்னப்பதாஸ்...தாஸ்... நீ... இப்ப பாஸ்... பாஸ்.
ஆபாசமாக ....‘படங்களில் நடிக்க’க் கூடாதுன்னுதானே சொல்றீங்க... ஒரு வேளை அவரு பிற்போக்கான வாதியா இருப்பாரோ என்னவோ?
என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்... கடவுளே! ஆமாம் நீ செஞ்ச தப்புக்கு ஒ கன்னத்தில நீயும் போட்டுக்கிட்ட மாதரி தெரியல... ஒங்க வீட்டுக்காரா அம்மாவும் ஒங்க கன்னத்தில போட்டமாதரியும் தெரியில... இருந்தாலும் இவ்வளவு பயம் கூடாது... கூடவே கூடாது!
நன்றி.
த.ம. 13.
அவருக்கு சதை ஆடுதோ இல்லையோ,நாலாவது மாடி ஜன்னலில் நிற்பவரைப் பார்த்தால் நமக்கு குலை நடுங்குதே:)
Deleteபடங்களில் மட்டும் ஆபாசமாய் நடிக்க வேண்டாம் என்றால் .......:)
ஒருவேளை ,பயப் படுதலே ஞானத்தின் ஆரம்பமா ,ஜேம்ஸ் ஜி :)
1) வேதனையுடன்தான் சிரிக்க வேண்டும் ஜி!
ReplyDelete2) ஹா...ஹா....ஹா... இதுவும் வேதனை வகையறாவில்தான் சேர்த்தி!
3) ஹா...ஹா....ஹா... நியாயமான கேள்வி. நானும் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்!
4) அப்படிக் கூட இருக்குமோ ஜி?
1 துன்பம் வரும் வேளையிலே சிரிக்கத்தானே வேணும் :)
Delete2.துன்பம் தொடருதா :)
3.அப்படின்னா கேஸ் நம்ம பக்கம்தான் தீர்ப்பாகும் :)
4.அதிலும் சுயநலம்தான் :)
ஹஹஹஹ் அனைத்துமே சூப்பர் ஜி! ரசித்தோம்!
ReplyDeleteவாத்தியார் நீங்களுமா ஜன்னலோர பிட்டை ரசிச்சீங்க:)
Deleteமுதல் படம் முதலில் வரவில்லை ஜி! வந்ததும் பார்த்தால்....ஜி! அது ரொம்பவே வேதனை தரும் விஷ்யம் இல்லையா ஜி! நம்ப மானம் கப்பலேறிப் போயாச்சு.....
ReplyDeleteநாலாவது மாடி ஜன்னல் வழியா பிட்டை எப்படித்தான் கொடுப்பார்களோ ,யாருமே தடுக்க மாட்டாங்களா :)
Deleteநாலு மாடி படியேறினால் நமக்கு மூச்சு வாங்குது ,இவனுங்க எப்படி :) வயதான பெருசுகளுக்குத்தான் இந்தத் தொல்லைகள் இளவட்டங்களுக்கு இல்லையே...
ReplyDeleteமாடி ஜன்னலில் உள்ளவர்களை உற்று பாருங்கள் ,கிழடுகளும் இருக்கிறார்களே ,டிவியில் கூட காட்டினார்களே :)
Deleteபிள்ளைங்க பரீச்சையில் பாஸ் ஆக
ReplyDeleteஇப்படியா உதவுறது?
ஒளிப்படத்தைப் பார்த்தாத் தலை சுற்றுகிறதே!
பார்த்தாலே தலை சுற்றுதா ,நீங்கள் எல்லாம் எப்படி ஜன்னலில் ஏறி நிற்கப் போகிறீர்கள் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
எல்லா நகைச் சுவையும் நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்ததோடு நின்று விடாமல் நன்றி சொன்னீர்களே ,அங்கே ,நீங்க நிக்கிறீங்க ரூபன் ஜி :)
Delete