10 March 2015

கிரிக்கெட்டிலும் ஆணாதிக்க மனப்பான்மையா ?

--------------------------------------------------------------------------

இந்த குணம் புருஷ லட்சணம் ஆகுமா ?

       ''உன்  புருஷனை மாதிரி அல்பத்தை பார்த்ததே இல்லைன்னு ஏன் சொல்றே ?''
''செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொருத்துக்கோன்னு சொல்றார் !''
           ''ஏனாம் ?''
          ''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

செவப்பா இருந்தா மார்பிள் சிலைன்னே சொல்லலாம் !

               ''கடவுள் ஏன் கல்லானார் ?''

          ''இதென்ன கேள்வி ,கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''

 திண்டுக்கல் தனபாலன்10 March 2014 at 07:19
அதானே...!

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்...
உண்டென்றால் அது உண்டு...
இல்லை என்றால் அது இல்லை...
இல்லை என்றால் அது இல்லை...



  1. பாட்டுக்கு எதிர்ப் பாட்டா ,சூப்பர் ஜி !
    நன்றி
    Delete
  2. அம்பாளடியாள் வலைத்தளம்10 March 2014 at 11:10
    இரண்டுபேரும் ஒரு முடிவோட தான் இருக்குறீர்கள் என்று புரியுது :)))))
    வாழ்த்துக்கள் சகோதரா .
    Delete
  3. சினிமாப் பாடல்களை அலசி ஆராய்ந்தவராச்சே நம்ம DD,அவரிடம் நம்ம பாச்சா பலிக்குமா ?

புலவர் இராமாநுசம்11 March 2014 at 12:17
கல்லைக் கண்டா நாயைக் காணோம்-- ஊர் வழக்கு!.



  1. பழமொழி ஊர் வழக்குதான் ,அதன் அர்த்தம் புரியாமல் நாயை அடிக்க கல்லை தேடுவது ஊர் வம்பு தானே அய்யா ?
  2.  ஸ்ரீராம்.10 March 2014 at 12:32
    பக்தி போதை அதிகம் இருப்பவர்களுக்கு கள்ளா இருக்காரோ! :))
    ReplyDelete

    Replies

    1. கல்லிலும் இருப்பார் கள்ளிலும் இருப்பாரோ ?

    2. நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் !

      ''உங்களுக்கு  போன வார ராசி பலன்லே 'கையிலே காசு கொட்டும்'னு இருந்ததே ,பலிச்சதா ?''
      ''உள்ளதும் போனதுதான் மிச்சம் ,அது 'காலை 'வார்ற ராசி பலனாப் போச்சு !''
    3. கிரிக்கெட்டிலும் ஆணாதிக்க மனப்பான்மையா ?

      ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டின்  , நடுவில் ஆடும் 'சியர்ஸ் கேர்ள்ஸ்'களை ரசிக்கும் அளவிற்கு கூட ...பெண்கள்  ஆடும் கிரிக்கெட்டை யாரும் ரசிப்பதாக தெரியவில்லை !




23 comments:

  1. 01.கோயிலுக்கு போக மாட்டாரோ ?
    02. இப்பத்தான் பேப்பரிலும் இருக்காரே.... (கல்லுகூட கடவுளாயிடுச்சுனு சொல்லலாமோ)
    03. அன்றைக்கு கையிலே தேள் கொட்டாமல் இருந்தால் சரி.
    04.இது ஃபுல் கவரேஜ் அதுனாலேதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.சாமி கண்ணைக் குத்திடும்னு பயப்படுகிறாரோ :)
      2.ஸ்ரீ ராம்ஜி சொன்ன மாதிரி ,பேப்பரில் மட்டுமில்லை ,ஃபேக் பைபரிலும் தெரிவாரோ:)
      3.அதானே ,சந்தோசப் படுறதை விட்டுட்டு :)
      4. இதில்மட்டும் ஃபுல் என்றால் பிடிக்காதோ :)

      Delete
  2. Replies
    1. நானும் ரசித்தேன் உங்க பிளஸ்ஸை :)

      Delete
  3. 1. ஹா..ஹா...ஹா.. இப்பல்லாம் கல்யாணத்துல நிறைய பேர்கள் செருப்பைக் காலை விட்டுக் கழட்டறதே இல்லை ஜி! (அது எப்படி உங்களுக்குத் தெரியும்னு கேக்கப்பிடாது! நான் கழற்றாத கோஷ்டியில் ஒருவன்!)

    2. ஆனா மனுஷனப்போரந்தும் நிறையப் பேர் மனுஷனா இல்லையே அது ஏன்ஜி? ஹிஹிஹிஹி..

    3. பெண்கள் ஆடும் கிரிக்கெட்டில் ஆண்களை சியர்ஸ் பாய்ஸ் ஆக ஆட விட்டால் ரசிப்பார்களோ?

    ReplyDelete
    Replies
    1. மனுஷனப்போரந்தும் - "மனுஷனாப் பொறந்தும்"

      :))))))

      Delete
    2. 1.மணமக்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யச் சொன்னாலும் ,செருப்பைக் கழட்ட யோசிக்கணும் :)
      2.சுருட்டுவதில் ஒரு பாகத்தைக் கொடுத்தால் , பாவமன்னிப்பு கிடைச்சுருங்கிற தைரியம்தான்:)
      3.பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை ஒழித்துக்கட்டி விடும் போலிருக்கே ,உங்கள் யோசனை :)

      Delete
  4. புருஷர் செருப்புக்கடை வைத்திருக்கிறாரோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. புது செருப்பு கடிக்கும் ,பழைய செருப்புக்கு இங்கே வாங்கன்னு கடை முன்னால் போர்டும் வைச்சிருக்கார்:)

      Delete
  5. Replies
    1. தேர்வு நேரம் என்பதால் உங்கள் பதிவுகள் வெளிவர தாமதமாகிறதா :)

      Delete
  6. இந்தியாவுல விளையாட்டுனாலே கிரிக்கெட் மட்டும்தான் . அதுல பெண்கள் அணிக்காச்சும் பரவால்ல , மற்ற விளையாட்டுகளுக்கு அந்த அளவுகூட மரியாதை இல்லை .

    தம+

    ReplyDelete
    Replies
    1. தேசீய விளையாட்டுக் கூட மறந்து போயிடும் போலிருக்கே :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    இப்படியான .இடத்தில் ஆட்ட போட ஒரு கும்பல் உள்ளது... அந்த கும்பலில் சேர்ந்தவரா..இந்த கணவர்... இரசிக்கவைக்கும் பதிவு த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. என் செருப்பு வார் அறுந்து விட்டது. ஆனால் அடுத்து சில நாட்களுக்கு திறுமணம் எங்கும் நடக்கப் போவதாகத் தெரியலையே. கிரிக்கட் விளையாட்டில் சீயர் கெர்ல்ஸ் க்கு பதில் சீயர் பாய்ஸ் வந்தால் யார் ரசிப்பது.?

    ReplyDelete
    Replies
    1. எதுக்கும் நாலு கல்யாண மண்டபங்களில் விசாரித்துப் பாருங்க ..முடிவு எடுத்தா செயல் படுத்தணுமா வேணாமா :)

      Delete
  9. அன்புள்ள அய்யா
    இந்த கூழாங்கல்லின் தமிழ் மணம் வாக்கு 10
    அளித்து விட்டேன். கருத்தினை பிறகு தருகிறேன்! நன்றி
    அன்பன்
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நம்பி ஜி அவர்களே ,கூலாங்கல்லின் வழுவழுப்பை ரசித்தேன் :)

      Delete
  10. அனைத்தும் ரசித்தேன்.. 'தேன்'... ஜி.

    ReplyDelete
    Replies
    1. தேனுக்கு இப்படியும் ஒரு அர்த்தமா :)

      Delete
  11. ஹஹஹஹஹ்... கல்யாணத்துல யாரு ஜி செருப்பெல்லாம் கழட்டறாங்க? மண மேடைக்குச் செல்லும் போது மட்டும கழட்டறாங்க. அவ்வளவுதான்.

    ஹஹஹ நல்ல அட நல்ல பதில்........ஆமாங்க மனுஷங்க சும்மாவா இருக்காங்க....எப்பா பாரு கடவுள கூப்பிட்டு கூப்பிடு ஒப்பாரி அது வேணும் இது வேணும்னு கொடுத்தது போதாம பேராசை பிடிச்சு அலைஞ்சா கடவுளுக்கும் ஐயோ இதுங்கள தெரியாம படைச்சுட்டோமோ......ராங்க் நம்பர்னு சொல்லி சொல்லி அலுத்துப் போய் கல்லாயிட்டரு

    ஹௌ அபௌட் பாய்ஸ் சியர்ஸ் சொன்னா....பொண்ணுங்க பாக்க மாட்டாங்களா என்ன?!?!?!?

    ReplyDelete
    Replies
    1. செருப்பைக் காப்பாற்ற மணமேடையில் கூட ஏற முடியாத நிலைமை வரும் போலிருக்கே :)

      கல்லாகிற முன்னாடி எப்படி இருந்தாரு :)

      அப்படித்தான் ஆகிப் போச்சு உலகம் :)

      Delete