19 March 2015

உள்காயம் பட்ட கணவர் என்ன சொல்லுவாரோ :)

  

பயத்துக்கும் ஒரு அளவில்லையா ?

           ''புளிக் காய்ச்சல்  பாக்கெட்டைக்கூட  வாங்க வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
           ''பன்றிக் காய்ச்சல் மாதிரி இன்னொரு காய்ச்சலும் ஊரெல்லாம் பரவிட்டு வருதாமே !''
                                                  

 உள்காயம் பட்ட கணவர் என்ன சொல்லுவாரோ :)             
           ''என் சட்டை ,பனியன் கிழிஞ்சு இருக்கிறதைப் பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிஞ்சு இருக்குமே ?''
           ''என் மனைவியோட கோபம் ,நான் சட்டை பனியனை கழட்டினாத்தான் உனக்கு புரியும் !''



வலிப் போக்கன்19 March 2014 at 12:48
இதையேல்லாம் நிணச்சுதான் என் அம்மா, என்னைய கல்யாணமே பண்ணிக்க வேண்டாம் என்று சொன்னார்களோ,,,,,??




  1. லாஜிக் உதைக்குதே ,அடிவாங்கிய அப்பாவே 'நான் பெற்ற இன்பம் பெறட்டும் என் வாரிசும் 'என்று இருக்கும் போது..நீங்கள் அம்மாக் கோண்டுவாய்  இருப்பது நியாயமா ?
  2. அம்பாளடியாள்வலைத்தளம்19 March 2014 at 13:02
    ஐயோ பாவம் ஈக்குக் குச்சி கீறின கீறலெல்லாம் இருக்குமோ ?..:))))




    1. நீங்க வேற புது பார்முலா சொல்லித் தர்றீங்களே ,ஏன் இந்த கொலைவெறி :)
    2. மாமனாரிடமே  இந்த ஒப்பீடா ?

                ''மாப்பிள்ளே ,நான் வாங்கித் தந்த இன்வர்ட்டர் எப்படி இருக்கு ?''
             ''சத்தமில்லே ஆனா அருமையா வேலை செய்யுது ,உங்க மகளைத்தான் அந்த டைப்பிலே நீங்க வளர்க்கலே !''
    3. வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள் !


    4. இறந்த பின்னும் பெற்றோர்கள் 
      வாழ்கிறார்கள் வாக்காளர் பட்டியலில் ...
      வாழும்போதே பிள்ளைகளால் 
      கைவிடப்பட்ட பின்பும்கூட !


        திண்டுக்கல் தனபாலன்19 March 2013 at 07:12
        காலத்தின் கொடுமை..
      1. இதுக்கே 'காலத்தின் கொடுமை 'ன்னு சொல்றீங்களே ,தேர்தல் நேரத்தில் 'செத்த 'ஓட்டுக்கும் சேர்த்து மகன் துட்டு வாங்கிறது தெரிஞ்சா ,என்ன சொல்வீங்க நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே ?



17 comments:

  1. 01. போறபோக்கைப் பார்த்தால் வீட்டுக்கு எலி மருந்து வாங்ககூட பயமா இருக்கு.
    02. இதுக்குத்தான் நான் இது ரெண்டுமே உபயோகப்படுத்துவதில்லை.
    03. உவமை நல்லாத்தான் இருக்கு...
    04. அருமை ஆனால் வேதனை.

    ReplyDelete
    Replies
    1. 1.எலிகிட்டே மருந்து வேலை செய்றதைவிட மனுசங்ககிட்டே அதிக வேலை செய்யும் :)
      2.அடி வாங்கி வாங்கி உடம்புலே வைரம் பாய்ஞ்சிடுச்சோ :)
      3.இன்வர்டரையும் வாங்கிகிட்டு இப்படி இன்சல்ட் பண்ணலாமா :)
      4.பிணம் விற்ற காசோ :)

      Delete
  2. 1. ஹா..ஹா..ஹா..

    2. ஹா...ஹா....ஹா....ஹா....ஹா...

    3. கம்பெனி திரும்பி வாங்கிக்காதாம்மா? ஹா...ஹா..ஹா..

    4. அச்சிச்சோ...

    ReplyDelete
    Replies
    1. 1:)
      2.:)
      3. எக்சேஞ்ச் தந்தா திருப்பித் தர்றதைப் பற்றி யோசிக்கலாம் என்று சொல்றாரே :)
      4..இருக்கும் போது பெற்றவங்களுக்கு காசு தராதவன்,,இறந்த பின் கிடைக்கிற காசையும் விட மாட்டேங்கிறானே:)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    என்ன காய்ச்சலாக இருக்கும் -மர்மகாய்ச்சலோ........
    சண்டைஎன்று வந்தால் அங்க இங்க சட்டை கிழியத்தான் செய்யும்....திறமையான மனைவி...
    மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எப்படி வருதுன்னு தெரியாதவை எல்லாம் மர்மக் காய்ச்சல் தானே :)
      அங்க இங்க மட்டும் கிழிஞ்சாக் கூட பரவாயில்லை..... :)

      Delete
  4. Replies
    1. எதை ,சட்டைக் கிழிந்து தொங்குவதையா :)

      Delete
  5. 1. புலிக்காய்ச்சல் வந்தாலும் வந்துடும்...
    2. நீங்க எந்த ராகம் ஜி?
    3. அது சரி,
    4. கொடுமை தான்

    ReplyDelete
    Replies
    1. 1.பன்றிக் காய்ச்சல் வராம ,புலிக் காய்ச்சல் வந்ததுன்னு நன்றிக் காணிக்கையா செலுத்த முடியும் :)
      2.'பந்து 'வ வராளி ,ராகத்தைதானே கேட்டீங்க :)
      3.மனைவியிடம் வெறும் சத்தம் மட்டும்தான் வருது போலிருக்கே :)
      4.இவன் காசைத் தராமல் உயிரை வாங்கினான் ,அரசியல்வாதி செத்தவனுக்கும் காசு கொடுத்து வோட்டை வாங்கிறானே :)

      Delete
  6. புலிக்காய்ச்சல் வந்தால் என்ன செய்ய? புலி வைத்தியம் தெரியாதே,
    அடி வெளியில் தெரியாமல் அடிக்கனும்.
    என்ன பன்றது?
    அப்படியாவது இந்த உலகத்தில் மரியாதைக்குரியவர்கள்,,,,,,,,,,,,,,
    அருமை. அத்ததுனையும்.

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன ,மிருக வைத்தியரிடம் காட்டிக்க வேண்டியதுதான் :)
      அடியைக் கொடுக்கணுமா,வாங்கணுமா:)
      அப்பன் இருக்கும் போது ஏசிவிட்டு ,பிணத்தை ஏசியில் வைப்பவனா இருக்கானே:)

      Delete
  7. எனக்குத் தெரியும் ,உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாதென்று :)

    ReplyDelete
  8. வலிப்போக்கனுக்கும் ஆப்பு வச்சாச்சா.....!!!!

    ReplyDelete
    Replies
    1. உள்காயம் ..ஓ....அது நீங்கதானா :)

      Delete
  9. புளிக்காய்சல "புள்ளிக்"காய்சல்னு நினைச்சுட்டாங்க போல....ஹஹஹ

    ஹஹஹஹஹ பனியன் பனியன் கிழ்ஞ்சாலே உள் காயம் தெரியத்தானே போகுது....ஹஹஹ்

    ம்ம்ம் சிரிகவிதை மனதை என்னவோ செய்தது...ம்மம்ம்ம்ம் என்னத சொல்ல....

    ReplyDelete
    Replies
    1. நான் அதை புலிக் காய்ச்சல்ன்னு நினைக்கிறேன் ,சரிதானே :)

      சதையைக் கழிச்சாலும் எங்கே தெரியப் போவுது, உள்காயம் :)

      அவர்களுக்கும் வயதாகும் ,அனுபவிப்பார்கள் :)

      Delete