15 March 2015

அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ :)

----------------------------------------------------------------------

      தூக்கத்திலாவது  பேசாமல் இருப்பாரா :)        
             ''என்னங்க ,நான் தூங்கினா உங்களுக்கு சந்தோசமா இருக்கா,ஏன் அப்படி  ?
              ''அப்பதானே ,நீ  சைலென்ட் ஃ மோடில் இருக்கே !''

அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ ?

         ''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
      ''துணிக்கு போடுறது  உப்பு சோப்புன்னா, மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே?''
 ஸ்ரீராம்.15 March 2014 at 11:00
:))))))))

எனக்கு நினைவு வந்த ஒரு பழைய ஜோக்!

ஒரு பழைய வி கே ராமசாமி ஜோக் : "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே"

வி கே ஆர் : "அப்ப உப்புள்ள பண்டம் தொப்பையிலா?"




  1. இதுவும் நல்லா இருக்கே ! உப்பு பல பேரை பலவிதமா யோசிக்க வைக்கும் போலிருக்கே !
  2. ஸ்ரீ ராம்ஜி ..அப்படின்னா போலீஸ் தவிர வேறு யாரும் உப்பை போட்டு சாப்பிடுற மாதிரி தெரியலையே !
  3. நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க ?

    ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கு !''
    ''ஏன்?''
    ''மணி  அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேலே ,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''

  4. கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் !

    UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
    இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான் 
    இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !


27 comments:

  1. 01. இவள் பொண்டாட்டியா ? மொபைலா ?
    02. சோப்புல உப்பா ?
    03. இதுக்குன்னாலே கிரிக்கெட்டுல பந்து வீசினாரோ ?
    04. தத்துவம் அருமைதான்

    ReplyDelete
    Replies
    1. 1.இரண்டுமே சைலென்ட் ஃ மோடில் இருக்கும்போது அவருக்கு சந்தோசம் வருதே :)
      2.உங்க பேஸ்ட்டுலே உப்பு இருக்கான்னு கேட்டப்போ எங்கே போனீங்க :)
      3.பந்தைக் கூட ஸ்டம்பைநோக்கித்தானே வீசணும் :)
      4.புல்லரிக்க வைத்திருக்குமே :)

      Delete
  2. // UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
    இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான்
    இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் //

    இருக்கையில் இருப்பவர்கள் ஏன் அதில் இருக்கும் போதே சுருட்டுகிறார்கள் என்பதன் பின்னணி இன்றல்லவா தெரிந்தது. ))

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. அதானே ,சுருட்டுபவர்களுக்கு புரிகிறது ,நமக்குத் தான்:)

      Delete
  3. 1. ஹா..ஹா...ஹா...
    2. ஹா...ஹா.....ஆ...என் பழைய கமெண்ட்! உங்கள் பதிலும் சூப்பர்!
    3.கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று ஒரு ப;அட்டிமன்றம் வைக்கச் சொல்லுங்க!
    4. அது சரி, உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. 1 தூக்கத்திலே குறட்டை விட்டு கழுத்தறுக்காமல் இருந்தா சரி:)
      2 தொப்பையை மறக்க முடியலியே :)
      3.கையில் மணி வைத்துக் கொள்ளாமல் அதை நடத்தட்டும் :)
      4.வரவே பற்றாக்குறை சேர்த்து எங்கே வைக்கிறது என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு :)

      Delete
  4. சைலன்ட் மோட் நகைச்சுவையை சத்தகமாகவே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அடடே ,நீங்களும் நம்ம பார்ட்டிதானா :)

      Delete
  5. Replies
    1. பெயரை மாற்றிக்கும் எண்ணமில்லை ஜி :)

      Delete
  6. வணக்கம்
    ஜி
    உப்புசோப்புக்கு அவ்வளவு பவர்..... எல்லாத் தத்துவங்களும் நன்று இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. துணி அழுக்கை எடுக்க உப்பு என்றால் ,உடம்பு அழுக்கை எடுக்க உப்பு வேண்டாமா :)

      Delete
  7. உப்பு, புளி, காரம், உறைப்பு என எல்லாம் குறைத்துச் சாப்பிட்டால் நெடுநாள் வாழலாம்.
    என்பதை
    ஜோக் : "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே"
    வி.கே.ஆர். : "அப்ப உப்புள்ள பண்டம் தொப்பையிலா?"
    விளக்குகிறதே!
    ''துணிக்கு போடுறது உப்பு சோப்புன்னா,
    மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே?''
    என்றால்
    உடல் கழிவாக வெளியேறும் உப்பை
    உப்பில்லா சோப் தானே உறிஞ்சி
    உடலைக் கழுவ உதவும்!

    ReplyDelete
    Replies
    1. உப்பு, புளி, காரம், உறைப்பு என எல்லாம் குறைத்துச் சாப்பிட்டால் நெடுநாள் வாழலாம் என்பது சரி ,இவையெல்லாம் இல்லாமல் சாப்பிடத்தான் பிடிக்குமா :)

      Delete
  8. அடடா..அந்த ரகசியம் உப்பில்லா சோப்பு தானோ.........??????????

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எல்லாமே விளக்கமா சொல்லணுமா:)

      Delete
  9. பேஸ்டில் உப்புஎன்பதால் சோப்பில் உப்பு இது கிண்டல்தானேமேனி எழில்ரகசியம் காண்பவர் கண்ணில் அல்லவா.?

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நாளா உப்பில்லா பேஸ்ட் விற்றதும் இவங்கதான் ,இப்ப உங்க பேஸ்ட்டிலே உப்பிருக்கான்னு கேட்கிறதும் இவங்கதான் ,இப்படி ஏமாற்றலாமா:)
      அதுசரி ,எந்த கண்ணுக்கு எது அழகாய் தெரியும்னு யாருக்குத் தெரியும் :)

      Delete
  10. கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் ! நன்று! படித்ததில் பிடித்தது !

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,படித்ததில் இடித்ததை சொல்லாமல் விட்டீர்கள் :)

      Delete
  11. Replies
    1. ரசனைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி :)

      Delete
  12. சைலன்ட் மோட் ஹஹஹ அருமை.....ரசித்தோம் ....சத்தமாகச் சிரித்து...

    ஹஹாஹ்ஹ நண்பர் ஸ்ரீராமிற்கு உங்கள் பதில் சூப்பர்!

    அது சரி இனி பேஸ்ட், சோப்பு எல்லாத்துலயும் உப்பு, புளி, மஞ்சப்பொடி கிருமி நாசினி நு சேர்த்துருவாங்க போல....சமையலுக்கும் யூஸ் ஆகுமோ...ஆல் இன் ஒன் ஹஹஹ்ஹ

    அட அட வாழ்க்கைத் தத்துவம் யுபிஎஸ் லிருந்துமா.....ஹஹஹ்

    ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. இந்த மௌனம் எல்லோருக்கும் சம்மதம்தானே :)

      ஸ்ரீ ராம் ஜியும் ரசிக்கும்படி பொருத்தமா சொல்லி இருக்காரே :)

      இப்படி எல்லாம் விளமபரம் பண்ணி விற்கிறாங்களே :)

      இந்த கால பய பிள்ளைங்களுக்கு 'யு எஸ் ஏ பாஸ்ட் புட் 'துத்துவம்தான் பிடிக்கும் போலிருக்கே :)

      Delete
  13. வீட்டுல நடக்கிற விஷயம் எல்லாம் சொல்றீங்க. எங்களுக்கும் பொழுது போகுது. ரொம்ப நன்றி ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்க அனுபவமும் அதுதானே :)

      Delete