8 March 2015

மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் :)


மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் ?

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன்'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
             ''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
            ''உங்க மகதான் ...அவ சம்பாத்தியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு , கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''
நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது பல வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.
  1. சமூகத்தில் நடப்பவைதானே எழுத்தில் வரும் ,ஜோசப் ஜி ?
  2. ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !

    விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
    கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
    சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
    நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் ...
    வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
    துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
    என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
    என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
    என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
    'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
    இதை போலீசாரிடம் கூறினேன்...
    அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
    குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
    அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
    ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
    ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
    விசுவாசமின்றி கொலையும் கொள்ளையும் அடிக்கிறான் !
  3. தள்ள வேண்டியதை தள்ளினா....?

    ''புறம்போக்குப் பெட்டிக் கடைக்கு எப்படி கரெண்ட் கனெக்சன்  தந்தாங்க ?''
    ''அட நீங்க வேற ,தள்ள வேண்டியதை தள்ளினா தள்ளு வண்டிக்குக் கூட தருவாங்களே !''
     


    இந்தியா வல்லரசு ஆவது ஆகாயத்தில் தெரிகிறது !

    விமானத்தில் ஏறி இறங்குபவர்களை விட 
    விமானம் 'ஏறி இறங்கு'வதைப் பார்ப்பவர்களே அதிகம் ...
    வல்லரசு ஆகணும்னா விகிதாச்சாரம் தலை கீழாய் மாறணும் !




19 comments:

  1. மகள் சம்பாத்தியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற அப்பனுக்கு
    மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையென
    மகளீர் நாளில் சொல்லிக் காட்டியமையைப் பாராட்டலாம்!

    ReplyDelete
  2. தள்ள வேண்டியதை தள்ளினா வல்லரசு ஆகுமா...?

    ReplyDelete
  3. அய்யோ பாவம் மகளிர் தினத்தில் வாங்கிக் கட்டிக் கொண்ட அப்பா...ஃஃ

    ReplyDelete
  4. சிலர்(தந்தைகள்) இப்படித்தான் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  5. மகள் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடும் அப்பா.... :((( இப்படியும் சிலர்.

    ReplyDelete
  6. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
    தம +1

    ReplyDelete
  7. சூப்பர் அண்ணா ! அனைத்தும் அருமை .
    தம+

    ReplyDelete
  8. இந்த நாளுக்கு அவசியமானது மகளின் சம்பாத்தியத்தில் ம்ம்ம்ம்ம்

    எப்பவுமே தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டிய இடத்தில் தள்ளினாத்தான் எல்லாமே நடக்குது ஜி! அப்படியாகிவிட்டது நமது சமூகம்....

    விலங்குகள் மேல்தான் ஆறறிவு படைத்த மனிதனை விட....

    ReplyDelete
  9. 01. எய்தவள் இருக்க அம்பை நோகுறாரோ....
    02. மனிதனுக்கு 5 அறிவென்றும், மிருகங்களுக்கு 6 அறிவென்றும் மாற்றி சட்டம் அமைக்க வேண்டும்.
    03. இது எப்படி ? ஜி வயர் தொங்கி டிராப்பிக் ஜாம் ஆகாதா ?
    04. விமானத்துல ஏறாதவங்க ஒருவகையில் சந்தோஷப்பட வேண்டியதுதான் உயிருக்கு உத்திரவாதம்.

    தமிழ் மணம் நவரத்தினம்

    ReplyDelete
  10. திருமணம் செய்து கொடுக்க விரும்பாத தக்கப்னாருக்கு இப்படியும் எண்ணம் இருக்குமோ.?

    ReplyDelete
  11. வணக்கம்
    இவை எல்லாம் கண்முன் நடக்கும் சம்பவங்கள்... இரசித்தேன் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சம்பவங்கள் அல்ல ,கொடுமைகள் :)

      Delete