31 March 2015

சப்பாத்தி போடும் சாப்ட்வேர் :)

 ----------------------------------------------------------------

அர்த்த ராத்திரியில் இப்படியா கணவனை விரட்டுவது   :)               

            ''ராத்திரி 12 மணியாகப் போவுது ,விடிஞ்சா ஐம்பதாயிரம் வேணும்தான் ,ஆனால் ,என்  ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம்  எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  

                             ''12 மணிக்கு முன்னாலே 25ஆயிரமும்,12 மணிக்கு பின்னாலே 25 ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''

  இருமனம் இணைவது திருமணம் தானே ?

      ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
       ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
ஆஹா அருமையான வாசகம்
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்




  1. சில பேர் கட்டிங்கை மட்டுமே ரசிப்பார்கள் ,வெல்டிங்கையும் வெட்டிங்கையும் நீங்க ரசித்ததற்கு நன்றி
  2. இந்த கட்டிங்கை நீங்க ரசித்தமைக்கு நன்றி
  3. ‘வெட்டிங்’ ஒருவகையில் ’வெல்டிங்’தான். ரெண்டுபேரும் ‘பிரிய’ நினைச்சா, பஞ்சாயத்து, கோர்ட்டுன்னு வருசக் கணக்கில் அலையுறாங்களே!!




    1. அலையாம பிரிய இதுயென்னஅமெரிக்காவா ?
    2. கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் !

                   ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  
    3. சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
    4. ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதான் !''

    5. சாப்ட்வேர் படித்தும் சந்தேகம் தீரலையே !



      அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
      அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
      கேட்டது MCA முடித்த கல்யாணவயது அருமை மகள் ! 
    6. சப்பாத்தி போடும் சாப்ட்வேர் .




      1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று வருத்தப் படுவதை விட ,பிச்சு திங்கிற சப்பாத்தி வட்டமாய் இருந்தால் என்ன ,சதுரமாய் இருந்தால் என்ன ?சாப்ட்வேர் போட்ட சப்பாத்தியே மேல் என்று சந்தோசமா இருக்க வேண்டியது தான் !



24 comments:

  1. 1) +என்ன ஒரு ஐடியா! சூப்பர்ங்க.... ஆனால் கணக்கில் பணம் அவ்வளவு இருக்குமா?!!

    2) ஹா...ஹா...ஹா... திறமையானவர்தான்.

    3) ஆஹா.... இப்படியல்லவோ இருக்க வேண்டும் டாக்டரும், பேஷன்ட்டும்!

    4) ஹா..ஹா...ஹா.... அவளும் பழகுவாள்!

    ReplyDelete
    Replies
    1. 1.இருக்கப் போய்தானே இந்த விரட்டு :)
      2.இவர் இணைத்து வைச்சா பிரிக்க முடியாதோ :)
      3.ஆனால்,கனவு மட்டும் ஈஸ்ட்மேன் கலரில் தேரியுதாமே :)
      4.நீந்தும் நேரம் வந்தால் நீந்தித் தானே ஆகணும் :)

      Delete
  2. ATM கார்டை எடுத்து வைங்க ஜி... 12 மணிக்கு வர்றேன்...!

    ReplyDelete
    Replies
    1. பின் நம்பர் எனக்குத் தெரியாது ,பரவாயில்லையா :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    ATM காட் திருமணம் என்ற இரண்டும் மிக மிக அசத்தல் பகிர்வுக்கு நன்றி த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்படி விரட்டுப் பட atm கார்டும் ,திருமணமும் தேவையா :)

      Delete
  4. அன்புள்ள பகவான் ஜி,

    ராத்திரியில் பூத்திருக்கும் ராஜசுகங்கிறது... இது தானோ?... ஆம்பளயெல்லாம் ஆட்டோமெட்டிக் டெல்லர் மெஷினா ஆக்கிபுட்டீங்களேம்மா....? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?


    இரண்டுமே ஒட்டிங்கிட்டா... வெட்டித்தான் எடுக்கணும்...இதுனாலதான் வெட்(ல்)டிங்குன்னு பேரு வச்சாங்களோ என்னமோ?

    “ இந்த வயசுல கலரு பாக்கனுமுன்னு நெனக்கிறது ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?”

    ” தெரியல டாக்டர்... கலரே தெரியமாட்டேங்கிறது... அதான் கேட்கிறேன்... பாருங்க டாக்டர்... நர்ஸ் கருப்பா...சிவப்பான்னு உத்துப் பார்த்தாக்கூட தெரியமாட்டிக்கிது டாக்டர்... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...நர்ஸ்......”

    “ உஷ்...உஷ்... பேசாதைய்யா... வர்றது...லேடி டாக்டருய்யா... என்னோட வொய்ப்...! ”


    “அழகாக சப்பாத்தி போடத்தெரியவில்லையென்றாலும் பரவாயில்லை...சாப்ட் வேர்... மென்மையாவளைத் யாரும் திட்டாதிங்க... !”

    நன்றி.
    த.ம. 5.

    ReplyDelete
    Replies
    1. ராத்திரி நேரத்தில் இப்படியாம்மா படுத்துவீங்க :)

      இவர் பற்ற வைச்சா லைப் டைம் கியாரண்டிதான் :)

      கண்ணுலே கொள்ளிவைக்க ,ஓடிப் போயிடுன்னு டாக்டர் விரட்டி அடித்து இருப்பாரே :)

      அப்படின்னா ,ஆம்பளை ஹார்ட் வேறா :)

      Delete
  5. Replies
    1. நீங்களும் மொபைல் வழி வந்தவர் தானோ :)

      Delete
  6. ஏடிஎம்மை இப்படியும் பயன்படுத்தலாமோ? நகைச்சுவையில் நல்ல செய்தி.

    ReplyDelete
    Replies
    1. தேவைத்தானே கண்டுபிடிப்பின் தாய் :)

      Delete
  7. சூப்பர் ஐடியா இல்ல,,,,,,,,,
    ஆஹாஆஹாஆஹா……….
    அனைத்தும் அருமை.





    ReplyDelete
    Replies
    1. நேற்று வாய்தா கேட்டு ,இன்று பலன் கொடுத்ததற்கு நன்றி :)

      Delete
  8. ஆஹா.. அருமை!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. மகாராஜா எக்ஸ்பிரசில் பயணம் செய்வது போலிருக்கா :)

      Delete
  9. 01. பொண்டாட்டி யோசனை மஞ்சிவாடுதான்.
    02. இந்த செட்டிங்கூட நல்லாத்தான் இருக்கு.
    03. கண்ணஉக்கு கிராக்கியா....
    04. படிப்பு கை கொடுத்தால் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.இதற்குமுன்பும் ,உங்கள் தளத்தில் ஒருமுறை ,யோசனை மஞ்சிவாடு ,வண்டி சகடை சப்பையாம் என்று எழுதி உள்ளீர்கள் ...அதற்கென்ன அர்த்தம் ஜி :)
      2.நல்ல வேளை,செட் அப் ன்னு சொல்ல விட்டீங்களே :)
      3.கண்ணுக்கு குளிர்ச்சியா தெரியணும்னு நினைக்கிறாரோ :)
      4.படிப்பு ,சமையலில் கைராசியைக் கொடுக்குமா :)

      Delete
  10. சப்பாத்தி வட்டமாய் இருந்தாலென்ன சதுரமாய் இருந்தாலென்ன நமக்கு ருசிதானே முக்கியம்...???????????

    ReplyDelete
    Replies
    1. சாப்ட்வேர் போட்ட சப்பாத்தியே மேல்னு சொல்லி விட்டேனே :)

      Delete
  11. சாப்ட்வேர் போடுற சப்பாத்தி, சாஃப்ட்டா இருக்குமா..?
    சாப்பிட்டா இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டா எப்படி இருக்கும் :)

      Delete
  12. ஹை ஜி! அந்த அம்மா அருமையான ஐடியா கொடுத்துருக்காங்க ஜி அவங்க கணவருக்கு மட்டுமில்ல...எல்லாருக்கும் தான்....அந்த அம்மா வாயால ஜோக்காளி சொன்னதற்கு ஒரு ஷொட்டு!!!

    சாஃப்ட்வேர் சப்பாத்தி ஹஹாஅஹ்...இது கூட நல்லாருக்கே....சப்பாத்தி செய்ய சாஃப்ட் வேர் அதாவது ஒரு விதமான சாஃப்ட் வேர் இருக்கு. அதுகுனு ஒரு இயந்திரம் இருக்கு. மாவு போட்டு அளவா தண்ணி விட்டா, அதுவே கலந்து பிசைந்து, சப்பாத்தி போன்று செய்து சுட்டு/bake செய்து வெளியில் அழகாக ஏடிஎம் மெஷின் போல தள்ளும். அதிலேயே எவ்வலவு மாவு போடுகின்றோம் என்பதை ஏடிஎம் மெஷின் போல என்டெர் பண்ணிவிட்டால் போதும். மேலை நாடுகளில் இருக்கிறது. எங்கல் உறவினர் வீட்டில் வைத்திருக்கின்றார்கள். அங்கு வீக் என்ட் பார்டி களுக்கு நிறைய செய்வதற்கு என்று....

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையில் எழுந்திருக்காத (ஹி ஹி,என்னைப் போன்ற )சோம்பேறிகளுக்கு உதவியா இருக்கும் :)

      நம்ப முடியலை ,குருமாவுக்கு மெஷின் இருக்கா :)

      Delete