6 March 2015

ஹனிமூன் போகத் தயங்கும் கணவன் :)

----------------------------------------------------------------
இப்படியுமா பயப் படுவது :)
             ''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
              ''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''

ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் !

             ''என் காதல் விவகாரம் என் புருஷனுக்குத் தெரிஞ்சுருச்சு போல இருக்குடி !''

              ''ஏண்டி ?''
              ''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு  சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
  1. மின்னல் வேகத்தில் கமெண்ட்போட்டுக் கொண்டிருக்கும் சகோ .DD அன்புடன் வரவேற்கிறேன் !




    1. நினைத்தேன் வந்தாய்(ர்) நூறு வயது உங்களுக்கு தனபாலன் ஜி !
  2. இதோ வந்துட்டேன்... ஹா... ஹா..



    1. பதிவை போட்டவுடன் 'ரிவால்வர் மேப்பில் 'திண்டுக்கல் என்று பளிச்சிடுகிறது .திண்டுக்கல் என்றாலே அது நீங்கள்தான் என்றாகி விட்டீர்கள் ...மின்னல் வேக கருத்துரையாளர் என்று பதிவர்கள் சார்பில் உங்களுக்கு பட்டம் வழங்கி மகிழ்கிறேன் !
    2. மூணார் / கன்னியாகுமரி சேப்ட்டி இல்லையோ...?



      1. மலையும்,கடலும் மனைவி சதிச் செயலை சாதித்துக் கொள்ள தோதான இடங்களா இருக்கே !
      2. 'கட்டை ' போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா !

                       ''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம்  
                   வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
      3.    ''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர்  பாலம் அமைப்போம் 'னு  எப்படி எழுதலாம்னுதான் !''

      4. மொய் ,திருமணத்திற்கு பின்னா ,முன்னா ?

        அரசின் திருமண உதவித் திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
        அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் 
        'மொய் 'வைத்த பிறகு !



34 comments:

  1. 01. மீசை பெரிசா வச்சிருந்தா ? மீசை கரனா ?
    02. பொண்டாட்டிக்கு கற்பூரபத்தியோ ?
    03. நல்லவேளை தப்பிச்சு போயிட்டாரு
    04. கல்யாணத்திற்க்கு முன்னேயே மொய் அழுதாச்சா ?

    ReplyDelete
    Replies
    1. 1.மரிய மீசை என்று வேண்டுமானால் சொல்லக்கூடும் :)
      2.பெண்டாட்டிக்கு இல்லை புருசனுக்கு :)
      3.இப்போ நடக்கிற அக்கிரமம் அப்படித்தானே இருக்கு :)
      4.அழுதாதானே ஏதோ தேறுது:)

      Delete
  2. 1. கிருதாகரன்! ஹா..ஹா..ஹா..

    2. ஹா...ஹா... அப்போ இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்தது இல்லையா?

    3. :))))))))))))))))))))))))

    4. அச்சச்சோ... அப்புறம் என்ன பாக்கி இருக்கும்? ஒரு டீயாவது குடிக்கக் காசு இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. 1.அதையும் பெருமையா நினைக்க வேண்டியதுதானே :)
      2.மூணார் புதுப் புருஷன் கொலைச் சம்பவத்தை நீங்களும் மறக்கலையா :)
      3.காந்திக்கு ஆப்பு வைக்கிறவங்க ,பாரதியாருக்கு வைக்க மாட்டார்களா :)
      4.பணம் உனக்கு தாலி எனக்குன்னு டீலிங் :)

      Delete
  3. Replies
    1. மீசைக்கு சூசைதான் :)

      Delete
  4. கிருதாகரண்ணுதானே பேர் வரனும் ?
    மொய் மேட்டர் சூப்பர் !

    அனைத்தும் அருமை . அண்ணா
    தம+

    ReplyDelete
    Replies
    1. கிருதயுகத்தில் இப்படி பெயர் வச்சுக்குவாங்களோ :)

      Delete
  5. எனக்கு ஒரு சந்தேகம் - நம்ம கில்லர்ஜியை எப்படி கூப்பிடுறது?
    அதே மாதிரி தலையிலே முடியே இல்லாதவங்களை எப்படி கூப்பிடுறது?
    அந்த மொய் கவிதை - அருமை. அருமை.

    ReplyDelete
    Replies
    1. ய்யேயேயேயேயேயேன் ? கோடரியை எடுக்கணுமா ?

      Delete
    2. சொக்கன் ஜி ,பூப்பறிக்க கோடரி எதுக்குன்னு கேட்கிறவர் நம்ம கில்லர்ஜி ...எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க :)

      Delete
    3. கில்லர்ஜி,இதை எழுதும் போதுகூட உங்க ஞாபகம் வரலே ,சொக்கன் ஜி சொன்ன பிறகுதான் ..........:)

      Delete
  6. Replies
    1. மெய்யான நகைச்சுவையோ :)

      Delete
  7. ---- கிருதா என்பதை படித்ததும் இடைக் குத்து மாதிரி தெரியுதே......

    ReplyDelete
    Replies
    1. இடைக் குத்தும் இல்லை உள்குத்தும் இல்லை :)

      Delete
  8. ---- கிருதா என்பதை படித்ததும் இடைக் குத்து மாதிரி தெரியுதே......

    ReplyDelete
    Replies
    1. இன்னுமா உங்க சந்தேகம் தீரலே :)

      Delete
  9. ஹ ஹா அனைத்தும் அருமை.
    தம 7

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  10. கிருதாஹரன் இது கூட நல்லாத் தான் இருக்கு! :)))

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி பெயர் வைத்துக் கொண்டால் ,கிருபாகரனா என்று மீண்டும் மீண்டும் கேட்பார்களே :)

      Delete
  11. தமிழ் மணம் விண்ணை 8ம்.

    ReplyDelete
    Replies
    1. விண்ணை தாண்டியும் போகட்டும் :)

      Delete
  12. மொய் ,திருமணத்திற்கு பின்னா ,முன்னா ? இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையான மொய் இதுதானோ :)

      Delete
  13. வணக்கம்
    ஜி
    இரசிக்கவைக்கும் கலாட்டா.... பகிர்வுக்கு நன்றி த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கலாட்டாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி :)

      Delete
  14. கடைசி நகைச்சுவை கண்ணீர் வரவழைக்குது பாஸ்!!! எப்போதோ தான் அவங்க திருந்துவான்களோ:((((

    ReplyDelete
  15. ஹனிமூன் முதல் புருஷன் கூடவா .....இனி கிருபாகரன் எனும் பெயரைக் கேட்டால் குதாவுக்காக முகத்தை உற்றுப் பார்க்கத் தோன்றும்

    ReplyDelete
  16. ஹஹஹ்ஹ கிருதாஹரன் ஹை இது கூட பரவாயில்லையே...

    மூயும் அருமை! ஜி..

    அனைத்தையும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete