26 March 2015

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாதா :)

 ---------------------------------------------------------------

இது தோஷ நிவர்த்தி மாதிரி தெரியலே :)           

          ''அந்த ஜோதிடர் குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''

                     ''தோஷம் நிவர்த்தி ஆகணும்னா குஷ்பு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரே !''

கணவனின் புத்தி மனைவிக்குத் தெரியாதா ?

          ''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளும்மா !''
            ''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேட்கிறேன் !''
  1. Mythily kasthuri rengan26 March 2014 at 08:52
    ஆஹா! இன்னிக்கு காமெடி பீஸ் நம்ம மக்கள் போலருக்கே ! டீச்சர்கள் சங்கம்:((
    துளசி அண்ணா பார்த்தீங்களா மிஸ்ஸூ க்கு வந்த சோதனையை!




    1. உடனே பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி கீழ்க்கண்ட அவசர தீர்மானம் போடணும் ...ஜொள்ளர்கள்எண்ணிக்கை நாட்டில் பெருகி விட்டதால் மிஸ்ஸை அம்மாக்களும்,மிச்சரை,தப்பு தப்பு ..மிஸ்டரை அப்பாக்கள் மட்டுமே சந்திக்கணும் .இது உடனடியாக அமுலுக்கு வருகிறது !
  2. மிஸ்ஸை டேக் பண்ண முடியாத வருத்தமா? அதுதான் மிஸ்டேக்கா!'




    1. போர்டை அழிக்கிற டஸ்டரை கையிலேயே வைச்சுகிட்டு அந்த மிஸ் பேசவும் ,அப்புறமா அவங்கம்மாவை அனுப்புகிறேன்னு டேக்கா விட்டுட்டு வந்துட்டார் !

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் !

''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
           ''சுயமரியாதை இல்லாம நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''
நல்ல ஜோக் உண்மையும் கூட ...




  1. உண்மையை உரக்கச் சொல்வோம் ![வீட்டிற்கு ஆட்டோ தேடி வரும் வரை ]

கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் !

ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 

கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சமஸ்கிருதப் பழமொழி .
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏக பத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி !!
  1. திண்டுக்கல் தனபாலன்26 March 2013 at 07:22
    என்ன சொல்ல வர்றீங்க...?
  2. மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாதுன்னு சொல்ல வந்தேன் ! இப்போது புரியுமென நம்புகிறேன் !

27 comments:

  1. 01. சோலந்தூர் சோசியர் சோனைமுத்தா ?
    02. கந்தன் புத்தி கவிதாவுக்கு தெரிஞ்சுருக்கு.
    03. அப்படினா ? சாகும்வரைனு அர்த்தமா ?
    04. ஜொள்ளனின் பழமொழி ஜில்லுனு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. 1.அவர்தான் உங்க ஆஸ்தான ஜோசியரா :)
      2.கவிதாவுக்கு புரியும் என்று அந்த கழுதைக்கு புரியலையே :)
      3.ஏன் ,அதற்குள் சுயமரியாதை வராதா :)
      4.ஜில்லுன்னுதான் இருக்கும் ,வெயில் ஏறிகிட்டே இருக்கே :)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மரமேன்னு சும்மா இருக்க விட மாட்டாங்க என்ற சொல்லாடல் இப்படித்தான் வந்திருக்குமோ :)

      Delete
    2. நிறைய சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்த ஜோக்குகள் !

      அதுசரி பகவாஜீ,

      " ...மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாதுன்னு சொல்ல வந்தேன் ! இப்போது புரியுமென நம்புகிறேன் !... "

      காற்று வந்து மரம் அசைந்ததா இல்ல மரம் அசைந்து காற்று வந்ததா ?!!!

      எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
      http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

      நன்றி
      சாமானியன்
      saamaaniyan.blogspot.fr

      Delete
  3. ''..குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''...
    ''...என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு கேளும்மா !''
    அதுதான் மிஸ்டேக்கா!'
    கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் !-.....
    எல்லாம் அருமை சகோதரரே...
    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் உங்களைபோல் 'ஆன்ம விடுதலை'யைப் பற்றி யோசிக்க கூட என்னால் முடியலையே :)

      Delete
  4. பழமொழியும் புதுமொழியும்
    குஷ்பு கோவிலும் மிஸ்டேக்கா புரிஞ்சும்
    சிந்திக்க வைக்கும்
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு மிஸ்டேக்கா புரிஞ்சுக்கணும் ?டேக் இட் ஈசியா எடுத்துக்க வேண்டியதுதானே :)

      Delete
  5. ஏதாவது சினிமா சம்பந்தப்பட்ட பாவமா இருக்குமோ! ஹா...ஹா...ஹா...

    அடப்பாவமே 'இருமலர்கள்' கதையா இருக்கே... ஹா..ஹா..ஹா..(ஆ...என் கமெண்ட்!)

    ஹா...ஹா...ஹா... ஒரு இலவசம் கொடுத்தா வர்ற சுயமரியாதையும் தானாப் போயிடப்போவுது!

    ஹா...ஹா... அந்த நிலைமை மட்டும் வரக்கூடாதுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஒருசில படங்களைப் பார்ப்பதும் கூட பாவ காரியம் போல்தான் இருக்கே :)

      நேரம் கிடைச்சா ,அந்த இருமலர்கள் கதையைச் சொல்லுங்க ,ஜி :)

      அதானே ,இந்த ஜென்மத்தில் வரபபோறதில்லை:)

      ஆணுக்கா ,பெண்ணுக்கா :)

      Delete
  6. Replies
    1. சிரித்தது போதும் ,உங்க கருத்தை சொல்லுங்க ஜி :)

      Delete
  7. கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும்
    உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையானவர்களுக்கு மதிப்பு இல்லாமல் போக , இவர்களின்கூட்டணி தான் காரணம் :)

      Delete
  8. பாவம் தீர்ந்ததா ஜீ,,,,,,,,,,,,,,
    டீச்சர் மீட்டிங் ஓகே
    சுயமரியாதை எப்ப இருந்தது இனி வர
    பழய பழமொழி, புதிய பழமொழி எல்லாம் சரி.
    யார்?
    அத்துனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கூட கொஞ்சம் பாவம் சேர்ந்ததுதான் மிச்சம் :)
      ஓகேயா ,புருசனின் மதிப்பு ஹோ கயா தான் :)
      அதானே,இருந்தா ஏன் அந்த பார்ட்டியில் சேரப் போறான் :)
      எல்லாம் சரி ,யார் அந்த ஜொள்ளன் என்பதுதானே உங்கள் கேள்வி :)

      Delete
  9. பகவான் ஜி அவர்களே!
    கட்சி திவால் ஆகனும்னா ரெண்டு குஷ்பு இட்லி
    வச்சி படையலிட்டா போதும்னு இன்னொரு ஜோசியர் சொல்றாரே!
    ஒரு இட்லி இங்கிருக்கு!
    இன்னொரு இட்லி எங்கிருக்கு?
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு இட்லி (வெ)வந்துகிட்டு இருக்கு ,கொஞ்சம் வெயிட் பண்ணுங்க :)

      Delete
  10. ஹஹஹஹஹ் எல்லாமே ரசித்தோம் அதிலும் அந்தக் கடைசி இருக்கு பாருங்க....கற்புக்கரசிகள்/ஏகபத்தினி விரதன் கள் டாப்!! ஹஹ் ரொம்பவே ரசித்தோம்...

    மைதிலி சகோதரி அடடா நீங்க அப்பக் கூப்பிட்டது இப்பதாங்கக் கேட்டுச்சு......உங்க கட்சில சேர்ந்தாச்சு....நாம கட்சி கட்டி பகவான் ஜி ! மிஸ் க்கு எதிரானதற்கு நாங்கள் கொடி பிடிக்கின்றோம்....!! ஹஹஹஹ் மிஸ்சை எப்படி மிஸ் பண்ணலாம் என்று.....

    ReplyDelete
    Replies
    1. பழமொழி இப்படி ஆண்களை கவுக்ககூடாதுதானே :)

      என் மிஸ்ஸுக்கு எதிரா கொடி பிடிக்க மாட்டீங்களே ,சந்தோஷம்:)

      Delete
  11. ஜோக்ஸ் அனைத்தும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிஸ் செய்யாமல் ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  12. அன்புள்ள ஜி,

    ‘எதை மிஸ் பண்ணக்கூடாதோ... அத மிஸ்ஸு...மிஸ்ஸுன்னு சொல்றாங்கன்னு...’ வசந்தமாளிகை சிவாஜி சொல்லுவார்...!

    தோஷம் நிவர்த்தி ஆகணும்னா குஷ்பு....., கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரோ!''
    சொல்லறது ஜியா! நீங்க இல்ல ...சி.

    அனைத்தும் இரசித்தேன்.

    நன்றி.
    த.ம.10.

    ReplyDelete
    Replies
    1. நானும் வசந்த மாளிகை படம் பார்த்தேன் ,ஆனால் உங்கள் ஞாபக சக்தியைப் பார்த்து அசந்து போனேன் :)

      நல்ல வேளை.காணிக்கையா இதைதான் கொடுக்கணும்னு சொல்லாமல் போனாரே :)

      Delete
  13. வணக்கம்
    ஜி
    அனைத்தையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என் பிளேடுக்கு உங்கள் டெம்பிளேட் பொருத்தமே ,ரூபன் ஜி :)

      Delete